(17)
🌞 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். 🌞
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
🌞 திருப்பைஞ்ஞீலி. 🌞
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இறைவன்: நீலகண்டேஸ்வரர், கதலிவசந்தர், ஞீலிவனநாதர், ஆரண்யவிடங்கர்.
இறைவி: விசாலாட்சி.
தீர்த்தம்: அப்பர் தீர்த்தம்.
தலமரம்: ஞீலி வாழை.
சோழநாட்டில் காவிரி வட கரையில் அமையப் பெற்றுள்ள 63 தலங்களில் 61 -வது தலமாகப் போற்றப்படுகிறது.
இருப்பிடம்:
திருச்சியிலிருந்து மண்ணச்ச நல்லூர் வழியாக இத்தலத்தை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
பெயர்க் காரணம்:
ஞீலி- இது ஒரு வகையான வாழை. தனி இனம்.
வேறிடங்களில் பயிராவதில்லை.
இவ்வாழை இலை, காய், கனி, அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப் படுகிறது.
இவற்றை மனிதன் பயன்படுத்தினால், பிணி வருதல் இன்றும் கண்கூடு.
இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் கொண்டு சேர்த்து விடுவார்கள்.
அந்தணர் வடிவில் இறைவன் வந்து, அப்பர் பெருமானுக்கு பொதிச் சோறளித்துப் பசியைப் போக்கிய தலம்.
தேவாரம் பாடியவர்கள்:
சம்ந்தர் 3-ல் ஒரே ஒரு பதிகமும்,
அப்பா் 5-ல் ஒரே ஒரு பதிகமும்,
சுந்தரா் 7-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மூன்று பதிகங்கள் பாடப் பெற்றன.
கோவில் அமைப்பு:
ஊரின் நடுவுக்குள் ஆலயம் அமையப் பெற்றுள்ளன.
ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச் சிதம்பரம் முதலியன இத் தலத்திற்குண்டான மற்ற பெயர்களாவன.
கோவில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஐந்து பிரகாரங்களுடன் மொட்டை கோபுரம் மற்றும் இராவணன் திருவாயில் கோபுரத்துடன் உள்ளன.
இக்கோபுரம் முப்பத்தழு அடி உயரத்தால் ஆனவை.
மூன்று நிலை கொண்டவையாக கிழக்குப் பார்த்த வண்ணம் உள்ளது.
கோபுர மதிலின் மேல்தளம் புலிவரிக் கற்களால் பரப்பி அமைக்கப் பட்டவை.
இப்புலிவரிக் கற்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன.
அதனாலேயே தான் இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றது.
இரண்டாவது கோபுர வாசலுக்கு சென்று பார்த்தோமானால், அவ்வாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள் புரிந்து மறைந்த இடமான-கோயிலைக் காணமுடியும்.
இக்கோயில் நிலத்தின் மட்டத்திற்கும் கீழாகவே அமைந்துள்ளது.
இதை பல்லவர் காலத்தின் அமைப்பைக் கொண்டவையாகும்.
பொதிச்சோறு அளித்த பெருமானை சோறுடையீசுவரா் என அழைக்கப்படுகிறார்.
அர்த்த மண்டபத்தில் வசிட்ட முனிவருக்கு நடனக்காட்சியருளிய இடம் இவ்விடத்தில் இருக்கின்றது.
அதனாலேயே இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்னும் பெயர் பெறுகின்றன.
இங்கு அம்பாள் சந்நிதி இரண்டு இருக்கின்றன.
பிரதான சுவாமி சந்நிதியான இடத்திற்கு இடப்பால், கிழக்குப் பார்த்த வண்ணம் உள்ளன.
முந்தைய பழைய சந்நிதி தெற்குப் பார்த்த வண்ணமாக அமைந்திருக்கின்றது.
சோழர்கால கல்வெட்டுக்களில், பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி மகாதேவர் பைஞ்ஞீலி உடையார் என்ற பெயர்களால் இறைவனைக் குறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
இத்தலத்திற்கு மதுரை மெய்ப்படாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார்.
தல அருமை:
மூலவர் சந்நிதியின் மேலுள்ள விமானம் பத்ர விமானம் எனப்படுகிறது.
இக்கோயிலில் விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என ஏழு தீர்த்தங்கள் உள்ளன.
பிரகாரத்தில் இருக்கும் விநாயகர், சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமான தோற்றத்திற்குரியது.
கொடிமரத்திற்குக் கீழ் சுயம்புவான நந்தி இருக்கிறார்.
இங்கு வாழை மரமே தலவிருட்சம்.
திருமண தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வாழை மரத்திற்கு தாலிகட்டி பரிகார பருகார பூஜைகள் செய்கின்றனர்.
இவ்வாறு செய்வதால், திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.
திருக்கடையூரில் எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவன். இதனால் உலகில் இறப்பு என்பது இல்லாது உயிர்கள் அனைத்தும் நெடிய ஆயுளுடன் வாழ்ந்தன.
இதனால் பூமியின் பாரம் தாங்கமாட்டாமல், பூமாதேவி சிவனிடம் வந்து முறையிட்டாள்.
ஒரு தைப்பூச தினத்தன்று சிவன் இல்லத்தில், எமனை தன் பாதத்தின் கீழடியில் குழந்தையாக எழும்படி செய்தார்.
தர்மம் தவறாமல் நடக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணியை கொடுத்தார்.
இதனடிப்படையில் எமனுக்கு இங்கு தனியாக சந்நிதி உள்ளன.
சிவன், அம்பாள், மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்க சுவாமியின் பாதத்தின் கீழ் எமன் குழந்தையான வடிவில் இருக்கிறார்.
இச்சந்நிதி குடவரையாக அமையப் பெற்றிருப்பது மேலும் சிறப்பு.
இத்தலத்தில் 60-ஆம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடந்தேறி வருவது வழக்கம்.
எமன், சனிக்கு அதிபதி என்பதால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.
நந்தியின் முன்புறமாக தீபமேற்றும் தீபங்களையே கிரகங்களாக வணங்கிச் செல்கின்றனர் பக்தர்கள்.
கோவிலின் ராஜகோபுரத்தை இராவணன் வாயில் என அழைக்கப்படுகிறார்கள்.
சுவாமி சந்நிதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுக்கள் இராஜகோபுரத்தின் கீழே உள்ளன.
இந்தப் படிகள் இராவணனிடம் அடிமையாக இருந்த நவக்கிரகங்களை குறிக்கப்படுவனதாகச் சொல்லப்படுகிறார்கள்.
தலயாத்திரை சென்ற அப்பர் இத்தல இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார்.
பசியால் களப்படைந்து ஓரிடத்தில் நின்றார்.
அப்போது அர்ச்சகர் ஒருவர் அவர் முன் சென்று சோறு (அன்னம்) கொடுத்து பசியைத் தனித்தார்.
அந்த அர்ச்சகரிடம் அப்பா், ஞீலித்தலம் எங்கிருக்கிறது என கேட்டார். அர்ச்சகரும் நான் வழிகாட்டுகிறேன் எனக் கூறினார் அர்ச்சகர்.
அப்பரை அழைத்து வந்துவர், தானே அர்ச்சகராக வந்தேன் என அப்பருக்கு உணர்த்தினார் சிவன்.
பின் அப்பரின் வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளிக் கொண்டார் சிவன்.
இவரே சோற்றுடைய ஈசுவரர் என்ற பெயரில் முன்புறத்தில் சந்நிதி கொண்டுள்ளார்.
திருவிழாக்கள்:
சித்திரையில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அப்பா் குருபூஜை (சித்திரை சதயம்) விமரிசையாக நடக்கும்.
தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பிரத்யோக பூஜை நடைபெறும்.
சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சந்நிதியில் சோறு படைத்தல் விழா சிறப்புடன் நடைபெறும்.
பூஜை:
காமீக ஆகம முறையில் நான்கு கால பூசை.
காலை 6.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அஞ்சல் முகவரி:
அருள்மிகு, நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பைஞ்ஞீலி- அஞ்சல்,
திருப்பைஞ்ஞீலி -621 005
மண்ணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.
அலுவலகம்:
0431--2061400,,
0431--2902654.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment