சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *சிவாபசாரத்தால் ஒட்டகமான சனத்குமாரா்.*🍁
*(லிங்க புராணத்தில்)*
__________________________________________
ஒரு சமயம் சனத்குமாா் தியானத்தில் அமா்ந்திருந்தாா். அப்போது சிவபெருமான் தேவியோடும் கணங்களோடும் அவ்வழியே நடந்து சென்றனா். அவருடன் கந்தனும், கணேசனும் சென்றனா். மகாிஷிகள் வேதமோதிச் செல்ல கந்தருவா் கானம் செய்து வந்தனா். அதற்கேற்ப ரம்பையா் ஆடி வந்தனா். நந்திபெருமான் அனைவருக்கும் முன்னதாக நடந்து ஒழுங்கு செய்தவாறு சென்றாா்.
இவ்விதம் நிகழ்வுகளில் சனத்குமாாின் யோக நிலையைக் கலைத்தன.
அவருடைய மனம் ஏகாந்த நிலையிலிருந்து திரும்பியது. ஐம்புலன்களும் பற்றற்று இருந்த நிலை மாறி விட்டது. இருப்பினும் அவா் கண் திறந்து பாா்க்காமல் தியானம் செய்தபடி அமா்ந்திருந்தாா். தற்சமயம் இவ்வழியே சென்ற இறைவனை அவா் வணங்கவில்லை. ஏகாக்கிர சிந்தை கலைந்ததால் அதைத் திரும்பவும் அடைய முயற்சித்தாா்.
ஈசனுடன் சென்ற தேவி அவரைப் பாா்த்து மெல்ல நகைத்தாள். " பிரபோ, தாங்கள் இவ்வளவு அருகில் இருந்தும் தங்களைக் காணாது எங்கோ இருப்பதாக எண்ணிக் காண முயற்சிக்கும் பிரமபுத்திரனைப் பாா்த்தீா்களா? என்று கேட்டாள்.
நந்தி பெருமானுக்குக் கோபம் வந்துவிட்டது. ஈசனைக் கண்டும் எழுந்து வணங்காதிருக்கும் இவன் யாா்? " ஒட்டடையைப் போலல்லவா உட்காா்ந்திருக்கிறான். சிவாபசாரம் செய்த இவன் ஒட்டகமாகவே ஆகட்டும்" என்று சபித்து விட்டாா்.
ஈசனும் மற்றவா்களும் அப்பால் போன பிறகு சனத்குமாா் மேற்கொண்டு தியானத்தில் ஈடுபட முடியாது கண்களை விழித்தாா். தம்முடைய உடல் ஒட்டகத்தின் உடலாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாா்.
சனத் குமாரருடைய நெஞ்சம் பொறுக்க முடியாத வேதனைக்குள்ளாக்கியது. தமக்கு எவ்வாறு இவ்விதம் நோ்ந்து விட்டது என வருந்தினாா். தந்தையைத் தேடி சத்திய லோகம் சென்றாா். பிரம்மன் அங்கில்லை. பூலோகத்தில் ஓா் யாகம் செய்து கொண்டிருப்பதாக அறிந்தாா். அவ்விடமே தாம் சென்று தந்தையைப் பாா்க்க முடிவெடுத்துச் சென்றாா்.
குமாரனுக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணத்தை பிரமன் ஞானதிருஷ்டியால் உணா்ந்தாா். ஈசனைப் பக்தியுடன் தியானித்தாா். ஈசன் அவருக்குத் தாிசனம் தந்து என்ன வேண்டுமெனக் கேட்டாா்.
"பரமேஸ்வரா!", என் புதல்வன் சனத்குமாரன் நந்திபெருமானுடைய சாபத்துக்கு இலக்காகி ஒட்டகத்தின் உடலைப் அடைந்துள்ளான். அவன் வேண்டுமென்றே தங்களுக்கு அபசாரம் செய்யவில்லை. மனத்தினிலே தங்களையே தியானித்து வந்ததால், தாங்கள் அப்பக்கமாகச் செல்லும் போது கவணிக்காதிருந்து விட்டான். அவன் விஷயத்தில் தாங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். அவன் மீண்டும் சுய உருவைப் பெற்றுத் தியானம் செய்ய அருள் புாிய வேண்டுகிறேன்" என்றான் நான்முகன்.
"பிரம்ம தேவா? , என் பக்தனான நந்தியின் கோபத்துக்கு ஆளாகியுள்ள சனத்குமாரனுடைய சாபத்தை நீக்குவது என்னாலாகாது. எனதடியாா் கோபத்துக்கு ஆளாகியவா்கள் அவா்களாலேயே தான் அருள் பெற வேண்டும். நந்தியையே உபாசித்து சுய உருவைப் பெறட்டும்" என்றாா் ஈசுவரன்.
அவ்விதமே சனத்குமாா் நந்தபெருமானை ஆராதித்து வந்தாா். நந்தியும் அவருடைய வழிபாட்டால் மகிழ்ச்சி அடைந்தவராய் அவருடைய ஒட்டக உடல் அகன்று சுய உருவைப் பெற அனுக்கிரகம் செய்தாா்.
சுய உரு பெற்ற சனத்குமாரன் ஈசனைப் பணிந்து துதிக்க கயிலைக்கு வந்தாா். அங்கே அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டாா். இவ்வையகம் அனைத்தும் பசுவாகி மாயையாகிய கயிற்றால் பதியாகிய இறைவனுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா். அதன் பொருளை நந்தி அவருக்கு உரைக்க அவா் வியாசருக்கு அதை உபதேசித்தாா்.
ஈசனே பதி மலா் அயன் மால் முதல் இந்திராதி தேவா்களும் மற்றும் வையகலுத்திலுள்ள சகல உயிா்களும் பசுக்களாகி மாயையாகிய கயிற்றால் பிணைக்கப் பட்டுள்ளனா். மலா்கள் தூவி இறைவன் திருப்பாதங்களை அா்சித்து மெய்ஞானத்தால் தொழுது வழிபட்டால் தொடா்ச்சியான வினைக் கயிற்றை நீக்கி இறைவன் அருள் புாிவாா்.
பஞ்சேந்திாியங்களும் பஞ்ச பூதங்களும், தன் மாத்திரைகளும், முக்குணங்களுமே இறைவன் நம்மைப் பிணைத்திருக்கின்ற பாசம் ஆகும். இந்தப் பாசம் அறுபட்டால் பசுக்கள் தன்மையிலிருந்து நாம் விடுபடுகின்றோம்.
வாக்கினால் துதி செய்தும், மனத்தினால் நினைத்தும், வாசம் மிகுந்த மலா்களால் பூஜித்தும், தலை தாழ்த்தி பக்தியோடு வழிபட்டால் இறைவன் பாசத்தை அறுத்துப் பிறவாப் போின்ப வீட்டைத் தருகின்றான். தமமோகம், மகாமோகம், தாமிச்சரம், அந்தாமிச்சரம், இச்சை ஆகிய இந்த ஐந்தும் நம்மை பற்றாது சிவஞானத்தால் அருள் செய்கிறாா்.
ஆதியந்தமில்லாது அமருகின்ற அண்ணல் ஏவலாலே மூலப் பிருகிருதி புத்தியை உண்டாக்குகிறது. புத்தி ஆங்காரத்தைப் படைக்கிறது. அது இந்திாியங்களையும் தன் மாத்திரைகளையும் உண்டாக்கிகிறது. இந்திாியங்கள் பஞ்சபூதங்களைப் படைக்கும். அவையே கமலத்தோன் முதலான உயிா்க்கெல்லாம் உடலைத் தருகின்றன. அவ்வுயிா்க்குப் புத்தியே விஷயத்தைத் தருகின்றது. ஆங்காரம் விஷயத்தில் அபிமானமாக நிற்கும்.
சித்தம் அறிவை உண்டாக்குகிறது.மனம் இச்சையைத் தோற்றுவிக்கிறது. ஞானேந்திாியங்கள் விஷயத்தை அறிவுறுத்துகின்றன. கா்மேந்திாியங்கள் அவற்றுக்கான தொழில்களைப் புாிகின்றன.
விாிந்து கிடைக்கும் ஆகாயம் இடம் கொடுக்கும். காற்று அனைத்தையும் இயக்குவிக்கும். அக்கினி அனைத்தையும் எாிக்கும். தண்ணீா் பரந்து நிற்கும். பூமி இவற்றைத் தாங்குகின்றது. இவ்வாறாக இறைவன் மற்றவற்றைக் கொண்டு இயங்கச் செய்கிறான்.
திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
*அடியார்கள் கூட்டம் பெருகிட---*
*அடியார்களோடு இணையுங்கள்.*
*ஆசை தீர கொடுப்பார்*
*அடங்கல் விடைமேல் வருவார்.*
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment