Thursday, April 20, 2017

Kadambavaneswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை. கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                (21)
🌼 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். 🌼
(நேரில் சென்று தரிசித்ததுபோல.......)
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
      🌼 கடம்பந்துறை. 🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

இறைவன்:
கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதர், 

இறைவி:
பாலகுஜாம்பாள், முற்றிலா முலையாள்.

தலமரம்: கடம்பு.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், காவிரி.

சோழநாட்டுத் தென்கரைத் தலங்களாகிய 128- தலங்களில் இரண்டாவதாகப் போற்றப்படுகிறது.

இருப்பிடம்:
கரூர்- திருச்சி பாதையில் உள்ளது.

பெயர்க்காரணம்:
கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்தமையாலும், தலமரம் கடம்பம் ஆதலாலும் இப்பெயர் பெற்றது.

தேவாரம் பாடியவர்கள்:
அப்பர் 5-ல் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளார்.

கோவில் அமைப்பு:
கோவில் 1.38 ஏக்கர் நிலப்பரப்பில் வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளன.

இரண்டு பிரகாரங்கள் உள்ளன.

கோவிலைச் சுற்றித் தேரோடும் வீதி உள்ளன.

கோவிலுக்கு முன் மண்டபம் உள்ளன.

உட்புறத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கில் வாகன மண்டபமும், மடப்பள்ளியும், கிணறும், காலசந்நிதியும் உள்ளது.

தென்கிழக்கு மூலையில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது.

வடமேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம் இருக்கிறது.

இதனருகிலேயே அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது.

அம்பாள் சந்நிதிக்கு முன்புறத்தில் சுவாமி அம்பாளுக்குரிய கொடிமரம், பலிபீடங்கள் இருக்கின்றன.

இதைத் தாண்டித் தான் மூலவரைத் தரிசிக்க வேண்டும்.

மூலவர் வடக்கு நோக்கிய அழகுடனே சிவலிங்கத் திருமேனி அருளோட்சுகிறார்.

சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாகும்.

ஆகையினால் மூலவரின் பின்னால், சப்தகன்னிகைகளீன் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப் பட்டுள்ளன.

விநாயகர் இடம் மாறி, மறுகோடியில் உள்ளார்.

உள்பிரகாரத்தில் அறுபத்து மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள் உள்ளன.

இத்திருக்கோயிலில் இரண்டு நடராஜ வடிவங்கள் உள்ளன.

ஒரு நடராஜரின் திருவடியின் கீழ் முயலகன் இருக்கிறது.

மற்றொரு நடராஜ திருவடியின் கீழ் முயலகன் இல்லை.

தென்புறத்தில்ஜேஷ்டாதேவி,  சேக்கிழார் சந்நிதிகளும் உள்ளன.

மேற்கில் விசுவநாதர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.

சப்தமாதர்கள் வழிபட்ட வரலாறு:
ஒரு சமயம் துர்க்கைக்கும், தூமரலோசன் என்கிற அரக்கனுக்கும் கடும்போர் நடந்தது.

அப்போரில் அரக்கன் கை ஓங்கியது.

இதனைக் கண்ட ஏழு கன்னியர் மிகுந்த கோபத்துடன் எதிர்த்துப் போரிட்டனர்.

ஏழு கன்னிகளது கனைகளின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அரக்கன் போர் புரிவதை நிறுத்தி விட்டு ஓடலானார்.

அவ்வாறு ஓடும்போது கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்த காத்தியாயன முனிவரது ஆசிரமத்தை அடைந்து மறைந்தான்.

துரத்திச் சென்ற சப்தகன்னிகள் அரக்கனே முனிவராக வேடம் பூண்டு உள்ளார் என எண்ணி வதைத்துக் கொன்றனர்.

இதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

எங்கு சென்று தரிசித்தும் தோஷம் நீங்கப் பெறாமல் இருக்கவே, கடைசியாக கடம்பவனநாதரை தரிசித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றனர்.

இன்றும் கோயிலின் மூலஸ்தானத்தின் மூலவருக்குப் பின்புறத்தில் ஏழு கன்னியர்களின் உருவங்கள் உள்ளன.

மூலவரைத் தரிசிக்கும் போது ஏழு கன்னிகைகளையும் தரிசித்து அருள்பெறலாம்.

தல அருமைகள்:
இதாதிருத்தல மூர்த்தி,  தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது.

வடநாட்டில் காசியினைப் போல தென்னாட்டில் வடக்கு நோக்கி சிறந்த தலம் என்பதால் தட்சிணகாசி எனவும் அழைக்கப்படுகிறது.

கடம்பமரத்தைக் கொண்டிருப்பதாலும், சிவன், சுந்தரர் என்னும் பெயர் பூண்டிருப்பதாலும், தேவசர்மாவிற்கு மதுரைத் திருமணக் கோலம் காட்டியதாலும், இத்தலம் மதுரையுடன் சரிநிகர் சமமாகப் பேசப்படுகிறது.

தேவசர்மா, கண்வமுனிவர், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து சிவனை வழிபட்டு பேறு பெற்றார்கள் என்ற பெருமையை உடையது.

அகத்தியர் தினமும்  காலையில் காவிரியாகிய கங்கையில் நீராடி கடம்பவனநாதரையும், ஏனைய பரிவாரங்களையும் முறைப்படி வழிபட்டார்.

மதியம் வாட்போக்கியாரையும், மாலையில் மரகதாலேஸ்வரரையும் வழிபட்டு அருள் பெற்றார்.

அவர் இவ்வாறு வழிபட்டமையால் காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி திருவேங்கிநாதர் என்னும் பழமொழிக் கூற்றுப்படி காலையில் தரிசிக்க வேண்டிய பெருமையுடையவர். 

மதியம் ஐயர்மலை ரத்தினகிரீசுவரரையும், மாலையில் ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் வழிபடுவோர்க்கு நிச்சயம் மோட்சம் உண்டு.

திருவிழாக்கள்:
ஆடிப்பூரம் பத்து நாட்கள்,
புரட்டாசி நவராத்திரி பத்து நாட்கள்,
ஐப்பசி கந்த சஷ்டி பத்து நாட்கள்,
கார்த்திகை சோமவாரம் நான்கு நாட்கள்,
கார்த்திகை கிருத்திகை நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு,
மார்கழி திருவாதிரை,
தைப்பூசம் இரண்டு நாட்கள்,
மாசிமகம் புரம்மோற்சவம் பத்து நாட்கள்,
பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றது.

இதில் தைப்பூச விழாவன்று கடம்பவனேஸ்வரரும், முற்றிலாமுலையம்பாளும் காவிரிக் கரைக்கு எழுந்தருளி அலங்காரப் பந்தலில் வீற்றிருந்து காட்சி கொடுத்தருள்வார்கள்.

பூஜை
காமீக ஆகம முறையில் ஐந்து கால பூஜை.

காலை 6.00 மணி முதல் பகல் 1.00 வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்,
குளித்தலை &அஞ்சல்,
கரூர் மாவட்டம். 639 104

தொடர்புக்கு:
பாலசுப்பிரமணிய குருக்கள்.
04323--225228

           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment