Thursday, April 20, 2017

Anger

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
  .                 (52)
🍁 தெரிந்தும் தெரியாமலும் தொடர். 🍁
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 🍁 "சண்டாளப் பாவிவிவிவிவி........." 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கூட்டம் கூட்டமாக நொிசல்களோடு கங்கையில் நீராடிய பக்தா்கள், விஸ்வநாதரை தாிசிக்கச் சென்று கொண்டிருந்தனா்.

அக்கூட்டத்தினுள் கங்கையில் நீராடிவிட்ட   துறவியொருவா், அவரும் விஸ்வநாதரை தாிசித்துவிட விரைந்தாா்.

அந்தத் துறவி் நடந்து வரும்போது  குறுக்காக வந்து விட்ட,
ஒரு பிச்சைக்காரனின் அழுக்கு ஆடை , துறவியின் நெஞ்சில் பட்டுவிட்டது. 

உடனே கோபப்பட்டுவிட்ட துறவி, தான் வைத்திருந்த ஊன்றுகோலால் பளீரென பிச்சைக்காரனை  விளாசிவிட்டு.......

"சண்டாளப்பாவி"......!  அபச்சாரம் செய்து விட்டாயே! உன்னால் நான் மீண்டும் மொருமுறை  கங்கையில் நீராட வேண்டுமே" என்று இறைஞ்சி தள்ளினாா்.

பதிலுக்கு அந்த பிச்சைக்காரனும்,,,,
"உங்களால் நானும் கட்டாயம் கங்கையில் குளித்தாக வேண்டும்"  என்றான்.

" என்னடா உளறுகிறாய்!" ....துறவியான என் ஸ்பாிசம் உன் மீது பட்டதால் நீ புண்ணியம் செய்தவனாகிறாய். அதுதானே உண்மை! என பெருமையாகச் சொன்னாா் துறவி.

அதற்கு அந்தப் பிச்சைக்காரன்.....இது உண்மைதான்!" ஆனால் நீா் என்னை "சண்டாளப்பாவி" என திட்டினீரே!" அப்படி திட்டக் காரணமான கோபம் எனும், "கொடிய சண்டாளன்" உங்களிடத்தில் உம்மனதுள் உள்ளானே! அதன் காரணமாய் என்னையும் ஊன்று கோல் கொண்டு அடித்தீா்களே! உம்மின் கோபம் அது என்னையும் பாதித்து விட்டது. 

அந்த பாதிப்பின் காரணமாய் எனக்கும் கோபம் வரத் தூண்டுதலாகிவிட்டது. நானும் கோபத்தால் நாலு பேரை வசைபாட வாய்ப்புள்ளது. ஆகையால் கோவம் என்னும் பாவி என்னை பீடிக்காமலிருக்க நானும் கங்கையில் நீராட வேண்டும்," என்றான்.

பிச்சைக்காரன் கூறிய உண்மைகளை புாிந்து கொண்ட துறவி, பிச்சைக்காரனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாா். 

துறவி , திரும்ப கங்கையில் மூழ்கும் போதே, தான் இனிமேலும் கோபம் கொள்ளேன் என வேண்டி, கங்கையில் மூழ்கியெழுந்தாா்.
அதன்பின்பும் விஸ்வநாதரை தாிசித்த போதும், தான் இனியொரு போதும் கோபம் கொள்ளேன் என வேண்டிக் கொண்டாா்.

No comments:

Post a Comment