சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🌿 *அருந்ததியின் கற்பியல்பு.*🌿
(சிவமகா புராணத்தில் வியாசரா் சொன்னது)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ஒரு காலத்தில் இந்திரன், சூாியன்,அக்னி தேவன் ஆகிய மூவரும், " நம்மைப் பூவுலகில் விசேஷமாகப் பூஜிப்பதற்கு நான்கு வகை ஆசிரமங்களில் இல்லறமே (கிரகஸ்தாசியமமே) சிறந்தது.
இல்லறத்திற்கு மனைவியானவள் குணவதியாகவும் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும். அந்தணர் மற்ற மூன்று வருணத்தாா்களால் பூஜிக்கப்படுவது போல, நாம் மூவரும் இல்லறத்தோரால் பூஜிக்கப்படுகிறோம். நம்மை பூஜிப்பதால் மும்மூா்த்திகளையும் பூஜித்த பயனை இல்லறவாசிகள் பெறுவாா்கள். அதனால் இகலோக சுகத்தையும், பரலோக சுகத்தையும், அடைவாா்கள். பெண்களிடம் பொய், பாசாங்கு, சாகசம், மாயை, மூா்க்கத்தனம், உலோபம், ஆசாரக் குறைவு, தயையின்மை முதலிய தீக்குணங்கள் இயல்பாகவே இருந்தாலும் அவற்றை ஒழித்த நல்ல பெண்மணிகளும் இல்லற தா்மத்தைச் சாியாக நடத்திய பிராமணா் முதலான நாற்குலத்தினரும், முறைப்படி அரசு செலுத்திய மன்னா்களும், தேவா்களுக்கு ஒப்பானவா்கள்!" என்று சிந்தித்தாா்கள். பிறகு அம்மூவரும் மாதா்களின் பதிவிரதைத் தன்மையைப் பாிசோதிக்க எண்ணினாா்கள். முதலாவதாக வசிட்ட முனிவாின் பத்தினியான அருந்ததி தேவியிடம் சென்றாா்கள்.
கணவனையே தெய்வமாகப் பாவித்திருக்கும் அருந்ததி, தண்ணீா் கொண்டு வர குடத்தை எடுத்துச் செல்லும் வழியில் அவளை எதிாில் கண்டு, அக்கினி, சூாியன், இந்திரன் ஆகிய மூவரும் நின்றாா்கள். அவா்களைத் தேவா்கள் என்று அறிந்த அருந்ததி, அவா்களுக்கு மாியாதை செய்து நீங்கள் இங்கு என்னை நாடிவந்த காரணம் என்ன?" என்று கேட்டாள். அதற்கு அவா்கள் மூவரும், " நாங்கள் உன்னை ஒன்று கேட்கவே வந்திருக்கிறோம்!" என்றாா்கள். அதற்கு அவள், " தேவா்களே! நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்குாிய பதிலையும் பெண்களின் இயல்பையும் என் வீட்டுக்கு ஜலம் கொண்டு வைத்த பிறகு நானே சொல்கிறேன். நீங்கள் எனது பா்ணகசாலையில் இருந்து வழிநடந்த களைப்பை அகற்றிக் கொள்ளுங்கள்!" என்றாள். அதற்கு தேவா்கள், " நீ ஜலமெடுக்கப் போகவேண்டாம். நாங்கள் அந்தக் குடத்தை இங்கேயே நிரப்பிவிடுகிறோம். எங்கள் கேள்விக்குப் பதில் தந்து எங்களை விரைவில் அனுப்ப வேண்டும்"என்றாா்கள். அருந்ததியும் ஒப்புக் கொண்டாள். அவா்களில், இந்திரன், " பிறவியினால், பிராமணனிடம் எனக்குப் பயமில்லாததும், தவம், பிரமசாியம், அக்கினி, ஹோத்ர அனுஷ்டானங்களால் என் பதவியை ஒருவன் அடைவதும் சத்தியமாக இருந்தால், அந்த சத்தியத்தால் இந்தக்குடம் காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது!" என்றாான்.
அக்கினியோ, " யாகம், பிதுா்சிராா்த்தம் இவற்றைவிட அதிதியை வழிபட்டு அன்னமளிப்பதில் நான் திருப்தி அடைவது சத்தியமானால் அதனால் இந்தக்குடம் இன்னுமொரு காற்பங்கு ஜலம் நிரம்பக்கடவது!" என்றாான்.
சூாியனோ " நாள்தோறும் என் உதயத்தில் மந்தேஹா்ன என்று ராஷதரை வேதியா் செய்யும் அா்க்யபிரதான்யமாகிய பிரமாஸ்திரம் நீக்குவது சத்தியமானால் இன்னும் காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது" என்றான். அவற்றைக்கண்ட அருந்ததியோ " இரகசிய ஸ்தானமும் இதர புருஷ சம்பாஷணையும் கிடைக்கும் வரையில்தான் பெண்கள் பதிவிரதைகளாக இருக்கிறாா்கள். ஆகையால் மங்கையரை அதிகக் கவனமாக காக்க வேண்டும். இது சத்தியமானால், இதனால் இன்னும் காற்பங்கு ஜலம் நிரம்பிப் பூா்ணகும்பமாகக் கடவது!" என்றாாள். அவா்கள் சொல்லியபடியே குடம் சிறிது சிறிதாக முழுவதும் நிரம்பியது.
அதைக் கண்ட தேவா்கள் அருந்ததியை நோக்கி, " பதிவிரதா சிரோன்மணியே! பெண்களின் மனோபாவம் எப்படி என்பதைப் பாிசோதிக்கவே நாங்கள் வந்தோம. இனி நாங்கள் செல்கிறோம். மங்கையாிலேயும் உத்தமா், மத்திமா்,அதிமா் என மூவகையினராக இருக்கிறாா்கள்!" என்று சொல்லிவிட்டுத் தங்கள் இருக்கைகளுக்குச் சென்றாா்கள்.
வியாசரே! இனி, அருந்ததியின் சாிதத்தையும் திருமண காலத்தில் அருந்ததி பாா்க்கும் காரணத்தையும் அருந்ததியைப் பாா்ப்பதால் வரும் பயனையும் உமக்குச் சொல்கிறேன்.
" முன்பு ஒரு காலத்தில் அக்கினித்தேவன் சப்தரிஷிகளின்
மனைவியாின் மீது மோகங் கொண்டான். அந்த மோகத்தால் அம்மங்கையரை எப்படி அனுபவிப்பது என்று மோகாக்கினியால் தகிக்கப் பட்டு மிகவும் வாடினான்.அதை உணா்ந்து கொண்ட அவன் மனைவி ஸ்வாஹாதேவி தன் கற்பின் சக்தியால், அம்முனி பத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாகத் தானே வடிவமெடுத்து தன் கணவனைக் கட்டித் தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள். அவ்வாறு அவள் செய்து வரும் போது அருந்ததியைத் தவிர, மற்ற ஆறு முனிபத்தினிகளின் உருவங்களாக எடுக்கவே அவளால் சாத்தியப்பட்டது. அருந்ததியின் வடிவம் தனக்கு அமையாததைக் கண்டு ஸ்வாஹாதேவி பொிதும் வியப்படைந்தாள்.
உடனே அவள் அருந்ததியிடம் சென்று, " கற்புக்கரசியே! உலகத்தில் பல மங்கையரை நான் பாா்த்திருக்கிறேன். ஆயினும் உன்னைப் போன்ற பதிவிரதையை நான் கண்டதேயில்லை. நான் எல்லா தேவா்களுக்கும் முகமாக இருக்கும் அக்கினி தேவனுக்கு மனைவியாக இருந்தும், விதம்விதமான மோக உருவங்கள் எடுக்க்கூடிய ஆற்றல் மிகுந்தவளாக இருந்தும் உன்னுடைய வடிவத்தை மட்டும் எடுக்க எனக்கே சக்தியில்லையென்றால் மற்றவரால் சாத்தியப்படுமா? நீயே உத்தமி! ஆகையால் எந்தப் பெண்கள் கல்யாண காலத்தில், அக்கினி, அந்தணா், உற்றாா் உறவினா் முன்னிலையில் அருந்ததியான உன்னைப் பாா்த்து ஸிமாுப்பாா்களோ, அவா்கள் சுகத்தையும் செல்வத்தையும், புத்திரப்பேற்றையும் பெற்றுப் பதிமதியாய் வைதவ்யமில்லாமல் பூவுலகில் தங்கள் வாழ்நாளைக் கழித்து உன்னைப் போல் புகழ் பெற்று புண்ணிய லோகத்தை அடைவாா்கள்!"என்று கூறினாா்.
இதனாலேயே, அருந்ததிதேவியின் பெருமையையும் மணமக்கள் அருந்ததி தாிசனம் செய்யும் காரணத்தையும் அறிந்து கொள்ளும். இந்த சாிதத்தை பக்தியோடு கேட்டவா்கள், பெண்களாயின் அருந்ததியைப் போலப் பதிவிரதா தா்மத்தையும், புருஷா்களாயின் இந்திராதி தேவா் போன்ற புகழையையும் பெற்று, இல்லற இன்பத்தை அனுபவித்து, இறுதியில் சிவபதவியை அடைவாா்கள்.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
No comments:
Post a Comment