Thursday, January 19, 2017

What to do with worries?

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

💥இறைவன் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.💥

துறவி ஒருவர் ஒருநாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அங்கே தன் உடைகளைக் கழற்றி தரையில் வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். கரையின் மீது எவருடைய ஆடைகளோ இருப்பதைக் கண்டான் அவன். உடனே ஆற்றுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனது கண்ணுக்கு எதுவும், யாரும் தென்படவில்லை. பக்கவாட்டில் இருந்த கரைகள் அவனை மறைத்திருந்தன.

"அடடா! யாரோ ஒருவர் கவனமில்லாமல் இதனை இங்கே விட்டுவிட்டுப் போயிருக்கிறார். அவர் வரும் வரை இதனைப் பாதுகாப்போம்!" என்று எண்ணி அங்கேயே ஆடைகளுக்குக் காவலாக நின்றான்.

ஆற்றில் வெகு நேரம் நீராடிய பின்னர் துறவி கரையேறினார். அவர் தன்னுடைய உடைகளை எடுக்க முற்பட்டபோது அங்கே நின்றிருந்த மனிதன் அவரிடம், "பெரியவரே! உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் உங்கள் கதி என்ன ஆவது?" என்றான்.

அவர் சிரித்தார். "ஓஹோ ! நான் உடைகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டுப் போயிருந்தேன். அவன் அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்..!" என்றார் சர்வ சாதாரணமாக.

எல்லா நிகழ்வுகளும் இறைவனின் செயலே என்பதுதான் ஞானம். ஓர் பொருள் கிட்டியது என்றால் இது இறைவன் நமக்கு அளித்தது என்று நினைத்து அதனை மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும்.அது தொலைந்தாலோ அல்லது மறைந்தாலோ இறைவனால் அது எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்று கருதவேண்டும்.

அதனால்தான் ஞானியர் எந்தப் பொருள் பத்திரமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்வதும் இல்லை. எந்தப் பொருள் களவு போனாலும் அதற்காக அவர்கள் வருந்தப்படுவதும் இல்லை.

உங்கள் கவலைகளை இறைவனிடம் விட்டு விடுங்கள். நிச்சயமாக அவர் உங்களுக்கு அருள் புரிவார்!!!

No comments:

Post a Comment