Thursday, January 19, 2017

Perur temple part28

** சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  *(28)*
🌸 *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* 🌸
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌸 *விசுவாமித்திரன் வரம்பெறு படலம்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
 
பிரமாவும் விஷ்ணுவும் யான் பரம் யான் பரம் என்று அளவில் காலம் கலகஞ்செய்தவழி அதனை அகற்றும்படித் திருவுளங் கொண்டு சிவபெருமான் எதிர் தோன்றினார். 

அப்போது திருமால் அஞ்சி ஓடினார்.

பிரமா அஞ்சாது நின்று இகழ்ந்தவழி சிவபிரான் கோபங் கொள்ள,  அதிலே வயிரவக் கடவுள் தோன்றின.

வயிரக்கடவுள், இகழ்ந்த பிரமன் சிரத்தைக் கொய்து செருக்கினைக் களைந்தனர்.

பின்பு மாயோனாதி தேவர்கள் உதிரத்தையும் வாங்கி மனத்தருக்கைக் கெடுத்து, காசிஷோத்திரஞ் சேர்ந்து காவற்றெழிலைக் கைக்கொண்டு, அங்கே தங்கும் ஆன்மாக்கள் புரியும் பாவத்தைத் தமது புயத்திற் பொருந்துஞ் சூலப் படையிற் சேர்த்துச் சுழற்றிப் போக்கும் அற்புதத் தொழிலிலும் பூண்டனர்.

இங்ஙனம் இயமனது ஆணை செல்லாத காசி மான்மியத்தை நோக்கி, விசுவாமித்திர முனிவர் வந்து அத்திருப்பதியில் வதிந்து சிவயோகஞ் செய்யுங்கால் ஒரு நாளிலே, சிவபிரான் கோவை திருப்பேரூரின் கண்ணதாகிய வெள்ளியம்பலத்திலே திருநடஞ் செய்து காட்டினார்.

அத் திருப்பேரூர் எல்லையிலுள்ள உயிர்கள் இயற்றும் பாவங்களைத் தண்டஞ் செய்யாது போக்கி, வீட்டிற் கூட்டும் விதத்தையும் விளக்கியருளினார்.

அங்ஙனம் திருப்பேரூரின் பெருமையை யோகக் காட்சியிற் கண்ட முனிவர் அத் திருப்பதியை அடுத்துக் காஞ்சிமா நதியில் மூழ்கிச் சுவாமியையும் அம்மையையும் வழிபட்டு வெள்ளியம்பலத்தையும் தரிசித்தார்.

மற்றைநாள் காலையில் காஞ்சியாற்றில் மூழ்கி நித்திய நியமங்களை முடித்துச் சிவலிங்கந் தாபித்துப் பூசித்துச் சிவயோகத்தில் வசித்து வந்தனர்.

ஒரு நாள், சிவபிரான் இடபாரூடராய் எழுந்தருளினார். அப்பொழுது முனிவர் வணங்கித் துதித்து எம்பெருமானிடத்தில் *"அடியேனுக்குப் பத்தியைத் தந்தருள்க"*

 *முத்தியைத் தரும் இத்திருப்பதியில் யாவருக்கும் ஏனைத் தர்மார்த்த காமங்களையும் அருளுக.*  

*இத்தலம் குருஷேத்திரமென்னுந் திருநாமம் பெறுக.*

என முதலாகிய வரங்களை வேண்டிப் பெற்று அப்பதியிலே சிவயோகத்திற் பயின்று வசித்து வந்தனர்.

            திருச்சிற்றம்பலம்.

*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

*அவனருள் தானே வரும்!*
*அவனருள்தானே வரும்.*

No comments:

Post a Comment