Monday, January 23, 2017

Perur temple part29

*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(29)*
🌤 *கோவை திருப்பேரூர் திருக்கோவில் தொடர்.* 🌤
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
*அந்தகனரசு பெறு படலம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிவபிரான் விசுவாமித்திர முனிவருக்கு அருளிய வரத்தினால் தவத்தினராகிய ஆன்றோரேயன்றி பாவிகளும் ஆதிபுரியை அடைந்து வழிபட்டு முத்தியைப் பெற்றனர்.

நிரயத்தில் அழுந்துவாரின்றி இயமலோகம் பாழாயிற்று. உடனே இயமன் அப்பதியை அடுத்து தக்கிண கங்கையாகிய காஞ்சிமா நதியிற் மூழ்கியெழுந்து சிவச்சின்னங்களாகிய விபூதி உருத்திராக்கங்களை அணிந்தனர்.

பட்டீசரையும், மரகதவல்லி யம்மையையும் பணிந்து இரசதசபையையுந் தரிசித்தனர்.

ஓரிடத்தே வசித்திருந்து கொண்டு திருவைந்தெழுத்தைச் செபித்தான்.

மற்றைநாட் காலையில் நித்தியகர்மங்களை முடித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து பக்தியோடு பூசித்து வரும்போது ஒருநாள் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் இடபாரூடராய் எழுந்தருளி வினவியதற்கு இயமன்...., பாவிகளும் திருப்பேரூரைச் சேவித்து வீடு கூடுதலால் அடியேன் அரசாட்சி நீங்கினமைபற்றி இங்கே வந்தனன்" என்று விண்ணப்பஞ் செய்தனர்.

அதனைக் கேட்டருளிய மகாதேவர் " எவ்விடத்தே புண்ணியஞ் செய்தாலும் அவ்வுயிர்களிடத்து நினதாணை செல்லாதல்லவா? அன்னோரே நம்மிடத்து அன்புடையவராய் முத்தி பெறுவர். ஏனையோர் நினதாணைக்குட்படுவர்.

உனதரசினைச் செலுத்துவாய்" என்று திருவாய் மலர்ந்து அவ்வருட்குறியில் மறைந்தருளினார். 

இயமன்  தனது நகரைச் சார்ந்து செங்கோல் செழுத்து அரசுபுரிந்தான். 

திருப்பேரூரில் எழுந்தருளியிருக்குஞ்  சிவபிரான்  *கிரேதாயுகத்தில் விசுவநாதராகவும், திரேதாயுகத்தில் அமிர்தலிங்கேசவராகராகவும், துவாபர யுகத்தில் தருமநாதராகவும், கலியுகத்திற் பட்டீசர் என்னுந் திருநாமங்களைப் பெற்று அருள்பாலித்தவராக இருந்து வருகிறார்.

           திருச்சிற்றம்பலம்.

கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

*அவன் அருள் தானே வரும்.!*
*அவனருள்தானே வரும்.!*

No comments:

Post a Comment