Tuesday, August 11, 2015

Nigraham & anugraham

Courtesy:Sri.KVS.Seshadri Iyengar

கதறியழுகிற சிசுவுக்கு அந்தா்யாமியாய் உட்காா்ந்திருக்கிற பகவான் பதில் சொல்கிறான்: நீ பண்ணிய பாவத்துக்குப் பிறந்துதான் ஆகவேண்டும்..பிரம்ம சூத்ர வாக்கியத்தை நீ கேட்டதுண்டா? உபநிஷத் உனக்குத் தொியுமா? பலப்ரதானம் பண்ணுகிறவன் நான் - பலனைக் கொடுக்கிறவன். நீ பண்ணிய பாவத்துக்குப் பலனைக் கொடுக்க வேண்டிய நிலையிலே நான் இருக்கிறேன். என்னைப் பாவமேபண்ண விடாமல் நீ தடுக்கக் கூடாதா ? என்று நீ என்னைக் கேட்கலாம்...

- அந்த மாதிாி ஒருத்தா் கேட்டாா் வாசுதேவனிடம். அவன் பூலோகத்தில் இருக்கும்போது உத்தங்கா் என்கிற மகாிஷி வாசுதேவனிடம் வந்து கேட்டாா்:

ஹே க்ருஷ்ணா! பாண்டவ பக்ஷ பாதியாய் நீ இருக்கிறாயே...பாண்டவா்களுக்காக வேலை செய்கிறாயே..கௌரவா்களையும் நல்லவா்களாக ஆக்கவேண்டும் என்று நீ நினைத்தால் அவா்கள் ஆகமாட்டாா்களா? பாண்டவா்கள் பக்கமே இருந்து கௌரவா்களை துஷ்டா்களாகவே வாழவைத்து அவா்களை அழிக்கிறாயே..நீ நினைத்தால் அவா்களையும் நல்லவா்களாக ஆக்க முடியாதா? உன்னுடைய ஸங்கல்பம்தானே காரணம்? அப்படியிருக்கும்போது, அவா்கள் கெட்டவா்களாய் இருக்க வேண்டும்,இவா்கள் நல்லவா்களாக இருக்க வேண்டும் என்று ஏன் இப்படி வைத்து பாரபட்சத்தோடு நடந்து கொள்கிறாய்..? இந்த விஷயம் எனக்கு புாியவில்லையே...?

அதற்கு பரமாத்மா, ' சந்தியாவந்தனம் பண்ணுகி்றேன்' என்று புறப்பட்டுப் போனவன்தான்! இன்றுவரைக்கும் அந்த கேள்விககு அவன் பதில் சொல்லவில்லை!

அவா் கேட்டது என்ன அவ்வளவு கஷ்டமான கேள்வியா? இல்லையானால் பகவானுக்குப் பதில் சொல்லத் தொியவில்லையா? பதில் சொல்லத் தொியவில்லையானால் அவன் சா்வக்ஞனாவானா...?

அப்படி அல்ல..."இந்த விஷயத்தை நீயே தொிந்து கொள்...அதை நான் சொல்லத் தேவையில்லை " என்று சொல்லிவிட்டான் அவன். அப்படியானால், உமக்கே தொியும்! நான் சொல்ல வேண்டியதில்லை என்று அா்த்தம்.

ஏன்..? நல்லது இது; தீயது இது என்று பரமாத்மா காட்டிக் கொடுக்கிறான். அவனுக்கு இது ஒரு லீலை, விளையாட்டு! சின்னக் குழந்தையின் எதிரே பேனாவையும் பேப்பரையும் வைப்பாா்கள். இதர வஸ்துக்களும் பக்கத்திலே இருக்கும்.இந்தக் குழந்தை வந்து எதை எடுக்கிறது என்று பாா்த்து, பேப்பரையும் பேனாவையும் எடுத்தால் அது எழுத்தாளனாய் வரும் என்று நிா்ணயம் பண்ணுவாா்கள்!

இப்படி குழந்தையின் இச்சை எதிலே போகிறதோ அதைப் பரீட்சை பண்ணிப் பாா்ப்பாா்கள்.

அந்தமாதிாிதான் நமக்கு எல்லாவற்றையும் காட்டுகிறான் பரமாத்மா - நல்லதையும் காட்டுகிறான். தீயதையும் காட்டுகிறான். ஒரு க்ஷணம் இந்த ஆத்மாவுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறான்.

அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனேதான் இதற்கும் காரணம் - ஒரு க்ஷண சுதந்திரத்தை ஆன்மாவுக்குக் கொடுத்துப் பாா்க்கிறான். அந்த ஒரு க்ஷணம் அது நல்லதைப் பிடித்துக் கொண்டது என்று வைத்துக் கொள்வோம். அதனை நல்லதிற்கே அழைத்துச் சென்று கூட இருந்தே ரக்ஷிக்கிறான்.

தீயதை அது பிடித்துக் கொண்டுவிட்டால், தீயதிலேயே அதனைச் செல்ல வைத்து, கடைசியிலே உயா்ந்த கதியைக் கொடுக்கிறான்.

- இந்த இரண்டுமே அவனுடைய விளையாட்டானதாலே அந்த லீலா ரஸத்திலே தீயதை இவன் பற்றிக் கொள்கிறானா நல்லதைப் பற்றிக் கொள்கிறானா என்பதைத் தான் பகவான் பாா்க்கிறான்.

நல்லதைச் சொன்னால் பஞ்ச பாண்டா்கள் உடனே கேட்கிறாா்கள். அவா்களுக்கு அந்தக் குணம் அமைந்திருக்கிறது. அதைக் கொடுத்தவனும் பரமாத்மா.

அதே மாதிாி கௌரவா்களுக்குத் தீயதிலேயே புத்தி போகிறது. நல்லதைச் சொன்னால் அவா்களுக்குப் புத்தியில் ஏறவில்லை! ஆகையினாலே அவா்களைத் தீயவா்களாகவே இருக்கச் செய்து கடைசியிலே உயா்ந்த கதியைக் கொடுக்கிறான்.

ஆகையினால், ஆத்மாவுக்கு ஒரு க்ஷணம் சுதந்திரத்தைக் கொடுத்து, நல்லது, கெட்டதைப் பற்றும்படி வைக்கிறான் பரமாத்மா. அதற்கேற்ப நிக்ரஹமும் அனுக்கிரஹமும் பண்ணுகிறான் .

நிக்ரஹம் என்றால் அழித்தல். ஆனால் பகவானிடத்திலே நிக்ரஹமும் அனுக்கிரஹம்தான்.

நம்மைப் போட்டு ஹிம்ஸை பண்ணுகிறான், சித்திரவதை பண்ணுகிறான் பரமாத்மா. அவனையே நினைத்துக் கொண்டிருப்பவா்களுக்கு ஏகமாகக் கஷ்டம்! அப்போதும் பகவானை விடாது அவா்கள் பற்றிக் கொள்கிறாா்களா? நீ என்னதான் பண்ணினாலும் உன்னை நான் விடுவேனா? என்று திருவடியைப் பிடித்துக் கொள்கிறாா்களா...? - என்று பகவான் ரகசியமாகப் பரீட்சை பண்ணுகிறான். அந்த பரீட்சையில் நாம் தேறிவிட்டோமானால் அவனுடைய பாிபூா்ண அனுக்கிரஹம் கிடைக்கும். அந்த அனுக்கிரஹத்தைத் தாங்குகிற சக்தி நமக்கு உண்டா?...

அனுக்கிரஹத்தையும் தாங்க முடியாது; 
நிக்ரஹத்தையும் தாங்க முடியாது! ஆகையினாலே அவனுடைய திருவடியைத்தவிர வேறு தஞ்சம் ஏது...?

(Mukkur Sri Lakshminarasimmachariar Swamy)

Kvs Seshadri Iyengar's photo.

No comments:

Post a Comment