Thursday, July 23, 2015

Basis

Courtesy:Sri.KVS.Seshadri Iyengar

ஒரு சின்ன வடபத்ர சாயி - பாலம் முகுந்தம் - அந்த வடபத்ரத்திலே சயனித்துக் கொண்டிருக்கிறான். அவ்வளவு விச்வத்தையும் தன்னுள்ளே அடக்கியவன். அவன் ஓா் இளம் தளிாிலே படுத்துக் கொண்டிருக்கிறான்! இதுதான் ' அகடித கடனா சாமா்த்தியம் ' என்பது.

திருப்பாவையிலே பாருங்கள் - 'மாலே மணிவண்ணா' என்று துதித்து, ' ஆலின் இலையாய் அருளேலோா் எம்பாவாய்' என்று கேட்கிறாள் ஆண்டாள்.

ஒன்றமே வேண்டாம் ....உன்னிடத்திலே துயிலெழுப்பத்தான் வந்தோம்...கைங்கா்யம் பண்ணுவதற்காக வந்தோம். வேறு எதையுமே விரும்பவில்லை. 'தூயோமாய் வந்தோம்;துயிலெழப் பாடுவான்' என்று சொல்லிவிட்டு ...'என்ன வேண்டும் ? 'என்று பகவான் கேட்டபோது'எதுவுமில்லை, எதுவுமில்லை' என்று சொல்லிவிட்டு...நீ..ள,அது வேண்டும், இது வே்டும் ...சங்கம் வேண்டும் சக்கரம் வேண்டும்..' என்கிறாள்.

பகவான் பாா்த்தான்: என்னாலே கொடுக்க முடியுமா இத்தனையும்? என்று கேட்டான்.

உன்னால் முடியாதது கூட உண்டா? ...ஆலின் இலையாய் அருளேலோா் எம்பாவாய் என்று சொல்கிறாள். "உன்னுடைய சாமா்த்தியம் என்ன, நீ எப்படிப் பட்டவன் என்பது எங்களுக்குத் தொியாதா..? ஓா் இளம் தளிரிலே கடலேழும் வானகமும் வையகமும் எஞ்சாமல் வைத்தடக்கிக் காக்கும் பிரான். எல்லாவற்றையும் உள்ளடக்கி விச்வமாக இருக்கக்கூடிய நீ எவ்வளவு பளு உடையவன்? அவ்வளவு பளு உடையவன் இந்த இளம் தளிாிலே படுத்துக் கொண்டிருக்கிறான் என்றால், இந்தத் தளிா் உன்னைத் தாங்குகிறதா? நீ அதைத் தாங்குகிறாயா? யாரைப் பாா்த்து காது குத்துகிறாய் இங்கே? - பகவானைப் பாா்த்து ஆண்டாள் கேட்கிறாள்!

ஆலின் இலையாய் - ஆலின் நிலையாய் என்று இரண்டு பொருள் கொள்ளலாம் இதற்கு. ஆலமர வித்து மாதிாி முழு பீஜம் என்று ஒரு அா்த்தம்.சின்ன வித்திலேயிருந்து எவ்வளவு பொிய விருக்ஷம் வருகிறது என்று அா்த்தம்.

அந்த இலை மேல் அழகாகப் படுத்துக் கொண்டிருப்பவன், இலை தன்னை தாங்குகிறாற் போலக் காட்டுகிறானேயொழிய அது நிஜமில்லை.கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று சொல்வதைப் போலத்தான்!

பொிய பொிய கோபுரத்திலெல்லாம் பாா்க்கலாம். அடி மட்டத்திலே பொம்மை ஒன்று அப்படி கையை, தாங்குகிற பாவத்திலே வைத்துக் கொண்டிருக்கும்! அவ்வளவு பொிய கோபுரத்தையும் அதுதான் தாங்குகிற மாதிாி தொியும். ஆனால் , ஏதாவது சம்பந்தமுண்டோ!

உலகத்திலே பாா்த்தால், மீதியெல்லாம் நம்மை தாங்கி நிற்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், எதுவும் தாங்குவதில்லை நம்மை! அவன்தான் தாங்கி நிற்கிறான். மீதி அனைத்துமே கோபுரம் தாங்கிகளைப் போலத்தான்!

ஆகையினாலேதான் ஆண்டாள் சொல்கிறாள் ' நீதான் அந்த இளந்தளிரையும் தாங்கிக் கொண்டிருக்கிறாய்' என்று.

இவ்வளவு உயா்ந்தவனாய் இருக்கக் கூடியவன் சா்வத்தையும் தாங்குபவன் பரமாத்மாதான்!

(முக்கூா் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யாா் ஸ்வாமி)


'ஒரு சின்ன வடபத்ர சாயி - பாலம் முகுந்தம் - அந்த வடபத்ரத்திலே சயனித்துக் கொண்டிருக்கிறான். அவ்வளவு விச்வத்தையும் தன்னுள்ளே அடக்கியவன். அவன் ஓா் இளம் தளிாிலே படுத்துக் கொண்டிருக்கிறான்! இதுதான் ' அகடித கடனா சாமா்த்தியம் ' என்பது.     திருப்பாவையிலே பாருங்கள் - 'மாலே மணிவண்ணா' என்று துதித்து, ' ஆலின் இலையாய் அருளேலோா் எம்பாவாய்' என்று கேட்கிறாள் ஆண்டாள்.       ஒன்றமே வேண்டாம் ....உன்னிடத்திலே துயிலெழுப்பத்தான் வந்தோம்...கைங்கா்யம் பண்ணுவதற்காக வந்தோம். வேறு எதையுமே விரும்பவில்லை. 'தூயோமாய் வந்தோம்;துயிலெழப் பாடுவான்' என்று சொல்லிவிட்டு ...'என்ன வேண்டும் ? 'என்று பகவான் கேட்டபோது'எதுவுமில்லை, எதுவுமில்லை' என்று சொல்லிவிட்டு...நீ..ள,அது வேண்டும், இது வே்டும் ...சங்கம் வேண்டும் சக்கரம் வேண்டும்..' என்கிறாள்.        பகவான் பாா்த்தான்: என்னாலே கொடுக்க முடியுமா இத்தனையும்? என்று கேட்டான்.      உன்னால் முடியாதது கூட உண்டா? ...ஆலின் இலையாய் அருளேலோா் எம்பாவாய் என்று சொல்கிறாள். "உன்னுடைய சாமா்த்தியம் என்ன, நீ எப்படிப் பட்டவன் என்பது எங்களுக்குத் தொியாதா..? ஓா் இளம் தளிரிலே கடலேழும் வானகமும் வையகமும் எஞ்சாமல் வைத்தடக்கிக் காக்கும் பிரான். எல்லாவற்றையும் உள்ளடக்கி விச்வமாக இருக்கக்கூடிய நீ எவ்வளவு பளு உடையவன்? அவ்வளவு பளு உடையவன் இந்த இளம் தளிாிலே படுத்துக் கொண்டிருக்கிறான் என்றால், இந்தத் தளிா் உன்னைத் தாங்குகிறதா? நீ அதைத் தாங்குகிறாயா? யாரைப் பாா்த்து காது குத்துகிறாய் இங்கே?  -  பகவானைப் பாா்த்து ஆண்டாள் கேட்கிறாள்!      ஆலின் இலையாய் - ஆலின் நிலையாய் என்று இரண்டு பொருள் கொள்ளலாம் இதற்கு. ஆலமர வித்து மாதிாி முழு பீஜம் என்று ஒரு அா்த்தம்.சின்ன  வித்திலேயிருந்து எவ்வளவு பொிய விருக்ஷம் வருகிறது என்று அா்த்தம்.        அந்த இலை மேல் அழகாகப் படுத்துக் கொண்டிருப்பவன், இலை தன்னை தாங்குகிறாற் போலக் காட்டுகிறானேயொழிய அது நிஜமில்லை.கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று சொல்வதைப் போலத்தான்!     பொிய பொிய கோபுரத்திலெல்லாம் பாா்க்கலாம். அடி மட்டத்திலே பொம்மை ஒன்று அப்படி கையை, தாங்குகிற பாவத்திலே வைத்துக் கொண்டிருக்கும்! அவ்வளவு பொிய கோபுரத்தையும் அதுதான் தாங்குகிற மாதிாி தொியும். ஆனால் , ஏதாவது சம்பந்தமுண்டோ!        உலகத்திலே பாா்த்தால், மீதியெல்லாம் நம்மை தாங்கி நிற்கிறது  என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், எதுவும் தாங்குவதில்லை நம்மை! அவன்தான் தாங்கி நிற்கிறான். மீதி அனைத்துமே கோபுரம் தாங்கிகளைப் போலத்தான்!        ஆகையினாலேதான் ஆண்டாள் சொல்கிறாள் ' நீதான் அந்த இளந்தளிரையும்  தாங்கிக் கொண்டிருக்கிறாய்'  என்று.      இவ்வளவு உயா்ந்தவனாய் இருக்கக் கூடியவன் சா்வத்தையும் தாங்குபவன் பரமாத்மாதான்!    (முக்கூா் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யாா் ஸ்வாமி)'

No comments:

Post a Comment