Wednesday, July 29, 2015

Arrest- Periyavaa

Courtesy:Sri.Varagooran Narayanan

"என்னை (ஸ்ரீபெரியவாளை) அரஸ்ட் செய்ய சொல்லு"

(ஒரு பிராமணனை காப்பாற்றிய சம்பவம்)

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

புத்தகம்-தாயுமான மகான்-3

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

யாத்திரையாக சென்ற போது ஒரு ஊரில் ஒரு
பிராமணர். அவரிடம் நெல் மூட்டையாக இருந்தது.
நெல் மூட்டை விலை ரூ.3.ஆனால் வரி ரூ.7.
அவனால் வரி கட்ட முடியவில்லை. அதனால்
அவன் தன் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டான்.

அவன் மனைவி தகவல் சொல்லி அனுப்பினார்.
ஸ்ரீ பெரியவா இங்கு வருகிறார். நீங்கள் இங்கு வரவும்
என்று சொன்னாள்.அவனும் தன்னையாரும் அடையாளம்
கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கோட்டு,குல்லாய்
என்று சில வேஷம் போட்டுக்கொண்டு வீட்டின்
பின்புறமாக வீட்டிற்கு வந்துவிட்டான். அப்படியும்
அங்கு இருந்தவர்களில் ஒருவன் அய்யர் வந்துவிட்டார்
என்று அடையாளம் கண்டுபிடித்தான்.உடனே
போலீஸ்காரர் வந்துவிட்டார்கள் அவனை அரஸ்ட் செய்ய.

ஸ்ரீபெரியவா பல்லக்கில் வந்து கொண்டு இருக்கார்.
இந்த பிராமணன் ஸ்ரீபெரியவாளை வரவேற்க பூர்ண
கும்பத்துடன் வெளியில் வந்தான்.வெளியில்
போலீஸ்காரர், தாசில்தார் என்று நிற்கிறார்கள்.

பெரியவாள் என்னை (பாலு) கூப்பிட்டார்.

"என்னை (ஸ்ரீபெரியவாளை) அரஸ்ட் செய்ய சொல்லு" என்றார்,

போலீஸ்காரர்கள் பயந்துவிட்டார்கள்.

"இவன் என் சிஷ்யன்.இவனை அரஸ்ட் செய்வதாக இருந்தால் அவனை விட்டுவிட்டு என்னை அரஸ்ட் செய். அவன் என்ன தப்பு செய்தான்?" என்றார்.

போலீஸ்காரர்கள் சென்றுவிட்டனர்.

ஸ்ரீ பெரியவா அந்த பிராமணனிடம் "எத்தனை பணம் கட்டணுமோ அதை மடத்திலிருந்து வாங்கி கட்டிவிடு" என்றார்

Varagooran Narayanan's photo.

No comments:

Post a Comment