Monday, June 22, 2015

Thirupaachilaachiraamam alias Thiruvaasi

Courtesy:Sri.GS.Dattatreyan

காவிரி வடகரை தலங்கள்

62. திருப்பாச்சிலாச்சிராமம் தற்போது திருவாசி

மூலவர் - மாற்றுரைவரதர் 
(பிரம்மபுரீஸ்வரர் @ 
சமீவனேஸ்வரர்)
அம்பாள் - பாலாம்பிகை 
தலமரம் - வன்னிமரம் 
தீர்த்தம் - அன்னமாம்பொய்கை, சிலம்பாறு 
புராண பெயர் - திருப்பாச்சிலாச்சிரமம்
தற்போதைய பெயர் - திருவாசி
மாவட்டம் - திருச்சி
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 62வது தலம்.
* உமையம்மை , பிரம்மன் , லட்சுமி , அகத்தியர் , கமலன் வழிபட்ட தலம் 
* சுந்தரர் பொன் பெற்ற தலம் . சுவாமி சந்நிதி அருகே சுந்தரருக்கு சிவனார் பொற்கிழி அளித்த ஸ்தபன மண்டபம் . இங்குள்ள சுந்தரர் மூர்த்தம் இரு கைகளிலும் தாளம் ஏந்தி பாடும் அமைப்பில்
* கொல்லிமழவன் மகளின் முயலக நோயை சம்பந்தர் பதிகம் பாடி போக்கிய தலம் . இதனால் இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை "சர்ப்ப நடராஜர்' என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.
* ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் அழகான தலவரலாற்று சிற்பங்கள் 
* இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.
* கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் அருளுகிறார். 
* ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். 
* இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது.
* பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.
* அம்பாள் சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கி திருக்காட்சி 
* பாலாம்பிகை சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும், அன்னமாம்பொய்கை தீர்த்தமும் இருக்கிறது. 
* கமலனின் மகளான அமலையை இறைவன் மணந்து கொண்ட தலம். அம்பாள் பாலாம்பிகை, இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தார். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டார். இவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறார். இவரது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். 
* அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.
* வைகாசி பெளர்ணமி தொடங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம். திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் முதலான் திருவிழாக்கள் 
* வலிப்பு, தீராத வயிற்றுவலி, வாதம், ஆஸ்துமா போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் , குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் வழிபடவேண்டிய தலம்

தரிசன நேரம்

காலை 07:00 - 12:00 &
மாலை 04:00 - 07:00

தொடர்புக்கு

0431-6574972 ,
94436 - 92138.

திருச்சி - சேலம் சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம் . குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதிக் கோயில் இப்பாதையின் இடையில் உள்ளது

No comments:

Post a Comment