Tuesday, June 16, 2015

Rajaratnam pillai

Courtesy:Sri.KS.Ramki

எஸ்.ஜி.கிட்டப்பா, வீணை தனம்மாள், திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்ற சங்கீத மேதைகளுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர், இசை விமர்சகர், தா.சங்கரன் தன், 'இசை மேதைகள்' என்ற நூலில், 'ராஜரத்னம் பிள்ளை' பற்றி கூறியிருப்பது:
ராஜரத்னம் பிள்ளை ஒரு தனிப்பிறவி. சுகபாவத்தின் சிகரம்; பெருமித குணம் கொண்டவர். கொட்டை கொட்டையாக இவர் எழுதும் எழுத்துக்களே அரைப்பக்கம் நிரம்பி விடும். லெட்டர் பேடு கூட வால் போஸ்டர் மாதிரி தான் இருக்கும். அதைப் போடும் கவர், 15 அங்குல நீளத்தில் இருக்கும். எடைக்கு ஏற்ப ஸ்டாம்ப் என்பதால், தபால் இலாகாவுக்கு நல்ல லாபம்.
கவரின் மேல் அச்சிடப்பட்டுள்ள, 'நாதஸ்வர சக்கரவர்த்தி; அகில உலக இசை ஜோதி!' - அவர் பெற்றுள்ள பட்டம், பதவிகளும் கொஞ்சமும் இளைத்தவையல்ல; ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட! 
'பெரிய ரதம் போன்ற மோட்டார் கார்; கேலன் பெட்ரோலுக்கு எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்கு செல்லும் போது, பக்கவாத்திய பரிவாரம், குடும்பம், சகலமும் அந்தக் காரில் அடங்கி விடும்.
காதுகளில், மோட்டார் ஹெட் லைட்டுக்கு சமமான வைரக் கடுக்கண்கள்; ஜரிகை மயமான ஆடை, பட்டுச்சட்டை. சில சமயங்களில், கழுத்து முதல் பாதம் வரை கவுன் போன்ற ஆடையையும் அணிந்து கொள்வார். செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமாகத் தான் இருப்பர்.
பொடி டப்பி! பெயர் தான் பொடி டப்பி. வெள்ளியும், பொன்னும் கலந்த அந்த பொடி டப்பி, பார்க்க டிரங்க் பெட்டி போன்று தோன்றும். வெற்றிலை பெட்டியோ ஒரு கூட்ஸ் வண்டி போன்றும் இருக்கும். கூஜாவோ வெள்ளி டாங்க்!
இவ்வளவையும் தூக்கியபடி, முதல் வகுப்பு ரயில் பயணம்! 'இதுவரை ஒரு மேளக்கார பயலும் செய்யாததை எல்லாம் செஞ்சுட்டேனுங்க...' கலையில் சிகரத்தை அடைந்தவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருமிதம்! 

Courtesy - Dinamalar

No comments:

Post a Comment