Monday, May 4, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part37-Concluded.

Courtesy:Sri.SV.Narayanan


வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-37

 

கோணங்கி கோணங்கி  கோணங்க்யாரே கோணங்கி

 

விளயாட்டாஹவும் வேடிக்கையாஹவும் வினோத்மாஹவும் உண்மையை எடுத்து சொல்பவர்  கோணங்கிதாஸர். {விளையாட்டுதனமாஹ இருப்பவர்ஹளை நீ என்ன கோணங்கியா என்று பெரியவர்ஹள் கேட்பார்ஹள் அஹையால் கோணங்கி என்பது ஒரு விளையாட்டு.}

 

கோவிந்த்யனு     கோணங்கி

கோவிந்தா என்று விளயாட்டாஹ சொல்லுங்கள்

கோபாலாயனு கோணங்கி

கோபாலா என்று விளயாட்டாஹ சொல்லுங்கள்

வேணுகானமு கோணங்கி 

வேணுகானமும் ஒரு விளையாட்டு

பஹூஜானதனமு கோணங்கி

மக்களிடம் உள்ள பொருட்செல்வமும் ஒரு விளையாட்டு

ஆடாடு கோணங்கி

ஆடிகாண்பதும் ஒரு விளையாட்டு

அடுகுல பெட்டே கோணங்கி

ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் {ஒவ்வொரு செயலும்} விளையாட்டு

வேடுகொரா கோணங்கி

வேண்டிகொள்வதும் ஒரு விளையாட்டு

விதி ஹரி ஹருல கோணங்கி

ப்ரம்மா விஷ்ணு சிவன் என்பதும் ஒரு விளையாட்டு

திம்மப்பாயனு கோணங்கி

உருவம் இல்லாமல் அருவமஹ இருப்பதும் ஒரு விளையாட்டு

நம்முதிம்மா கோணங்கி

இறைவனை நம்புவதும் நம்பாததும் ஒரு விளையாட்டு

நம்முதேவுனி கோணங்கி

இறைவனை நம்புவதும் ஒரு விளையாட்டு

நாராயணனு கோணங்கி

நாராயணன் என்பது ஒரு விளையாட்டு

நாவ்ங்ககுரா கோணங்கி

என்னை {இறைவனைஅடைவதும் ஒரு விளையாட்டு

நன்னு தெலுஸுனா கோணங்கி

என்னை புரிந்துகொள்வதும் ஒரு விளையாட்டு

நாபேரேமி கோணங்கி

என் பெயர்கள் எல்லாமே ஒரு விளையாட்டு

ஸ்ரீவேங்கடபதி கோணங்கி

திருமலையின் நாயகன் என்பதும் ஒரு விளையாட்டு

பாவனகனரா கோணங்கி

மனதுக்கு பிடித்த விதமாஹ இறைவனை காண்பதும் ஒரு விளையாட்டு

தத்தக ததிகிணதோம்

 

 

 இந்த பாட்டின் உட் பொருள்

 

இந்த உலஹத்துக்கு வந்த எல்லோருமே விளையாட்டாக இருந்துவிட்டு போய்விடுஹிரார்கள் அனால் உண்மையான பரம்பொருளை அடைவதற்கு உள்ள எளிமையான வழிகளை இப்படி விளையாட்டாஹவே தெரிந்து கொள்ளமுடியும் என்பதை இந்த கோணங்கி தெளிவுபடுத்துகிறது

 

               ஸ்ரீராமசந்த்ர ஸ்ரிதபாரிஜாத

               ஸமஸ்த்த கல்யாண குணாபிராம

               ஸீதாமுகாம்போறுக சஞ்சரீக

               நிரந்தரம் மங்களமாதனொது

 

 

என் சிற்றறிவுக்கு தெரிந்த வரையில் இந்த வசந்த கேளிக்கை பவ்வளிம்பு தமிழ் விளக்கம் எழுதியிருக்கிறேன் இதில் தவறுகள் இருந்தால் தயவுசெது மன்னித்துக்கொள்ளவும். இதை நிறைவாஹ நினைத்தால் அந்த நிறைவு நான் வணங்கும் சொர்ணக்காடு ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு அற்பணமாஹட்டும்

No comments:

Post a Comment