Thursday, April 30, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part35

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-35

 

ராகம்; அடானா                      தாளம்: ஆதி

 

பல்லவி; வீடே நெலகொன்னாடு ஸ்ரீவேங்கடகிரிமீத

 

இவனே நிரந்தரமாஹ நிலைகொண்டு இருக்கிறான் இந்த திருமலையின் மேல் இவன் தான் ஸ்ரீவேங்கடசலபதி.

{ஒவொரு யுகத்திலும் அவதாரம் எடுத்தவன் அவனே இவன்}

 

அ.ப; வீடே கௌரவகுல பாலிடிகி விஸ்வரூபுடு இதடு—வீடே நெலகொன்னாடு

 

இவனே கௌரவர்ஹளுக்கு தன்னுடைய கம்பீரமான நிஜ உருவத்தை காண்பித்தவன்

 

ச.1.த்ரிபுரம்புலபை வ்ராலின யாகன தீவ்ரபாண

   மிதடு சபலபு பாணுனி மர்ம பேதியகு சக்ர

   தருண்டு இதடு விபரீதமு கம்பமுலலோ

   வெடலின வீரஸிம்ஹமிதடு கபடபு பாஸ்மா

   ஸுருனி பாலிடிகி காலதண்டமிதடு—வீடே நெலகொன்னாடு

 

த்ரிபுரத்தை  அழிக்க மகேஸ்வரன் போன சமயத்தில் அந்த அரக்கர்ஹள் மேல்விழுந்து உயிரை பறித்த அம்பாஹ இருந்தவன் இவன். ஆயிரம் கைஹளையுடைய பாணாஸுரனின் கைஹளை துண்டித்து அழித்த சக்ரத்தை அணிந்தவன் இவன் {சக்ரதாரி}. மனதால் நினைக்கமுடியாத அளவுக்கு இருந்த தூணிலிருந்து காட்சி தந்து ஹிரண்யகஸிபுவை கிழித்து அழித்த நரஸிம்ஹம மூர்த்தி இவன். வஞ்சனையாஹ மஹேஸ்வரனை அழிக்க நினைத்த பஸ்மாஸுரனின் வாழ்க்கைக்கு யமனின் கைதடியாஹ இருந்து பஸ்மாஸுரனை அழித்தவன் இவன்

 

ச.2.தரனிகிந்தபலி நணசின யா பாதாளபேதி

   யிதடு பரஸுராமுனி கர்வமு நணசின ப்ரளய

   வாயு விதடு ஓரஸின நரகாஸுருனி பாலிடிகி

   உருமனிபிடுகு  இதடு துரமுன நெதிரின

   தனுஜ்கோடுலகு தூமகேது விதடு—வீடே நெலகொன்னாடு

 

வாமனனாக வந்து பலிசக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தி வைத்தவன் இவன்.  ராம அவதாரத்தில் பரஸுராமனின் கர்வத்தை அழித்த சூறாவளி காற்றாக {ஸுனாமி} வந்தவன் இவன். கிருஷ்ண அவதாரத்தில் நரகாஸுரனுக்கு சப்தமில்லாத இடியை போல் நரகாஸுரனை அழித்தவன் இவன். இவனை எதிர்த்து கெடுதலான புத்தியை உடைய அரக்கர்ஹளுக்கு புகைமண்டலமாஹ {தூமகேது =ஏவுகணை} வந்து அழித்தவன் இவன்.

 

ச.3.அதுகோவிதி ருத்ராதுலகெல்லனு ஆதிமூல

   மிதடு பதிலமுகாதனு கொலிசின யாஸ்ரித

   பாரிஜாதமிதடு கதலனி யா ப்ரஹ்மாண்ட

   கோடுலகு கன்ன தண்டரியிதடு வெதகி வெதகிதா

வரமுலு ஒஸங்கேடி வேங்கடபதி இதடு—வீடே நெலகொன்னாடு

 

மும்மூர்த்திகளில் முதன்மையானவன் இவன் இவன்தான் நம்மை காகக்கும் இறைவன் என்று எல்லா சமயத்திலும் போற்றி வணங்க்குபவர்ஹளுக்கு நினைத்ததை அளிக்கும் பாரிஜாத மலரை போன்றவன் இவன் அசையாமல் இருக்கும் அகில உலக ஜீவராசிஹளுக்கும் த்ந்தையாஹ இருப்பவன் இவன். எந்த விதத்திலாவது இறைவன் பெயரை சொல்பவர்ஹளை தேடி தேடி கண்டுபிடித்து அவர்ஹளது விருப்பங்களை வரமாஹ கொடுக்கக்கூடிய திருவேங்கடமலையின் தலைவன் இவன்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

ஒவொரு யுகத்திலும் அவதாரம் எடுத்த  இறைவன் இந்த கலியுகத்தில் ஸ்ரீவேங்கடசலபதியாக திருமலையில் இருக்கிறார் என்று கவி  தாளபாக்கம் சின்னமையா சொல்லியிருக்கிறார் ப்ரியமாஹவோ ப்ராண பயத்திலோ எந்த விதமான பக்தியில் இறைவனை நினைத்தால் அந்த நாளே நல்ல நாள் என்று .பத்ராசல ராமதாஸர் சொல்லியதை போல் இந்த பாடலில் இறைவனை அழித்துவிடுவேன் என்று சொன்னவர்களின் இருப்பிடத்திற்கே இறைவன் சென்று அவர்ஹள் மாயையை  அழித்து நல்ல பதவியை கொடுத்தான். அஹையால் இறைவனை போற்றி அவன் பெயரையே சொல்பவர்ஹளை இறைவன் தேடி சென்று அந்த பக்தர் இருக்கும் இடத்திலேயே அவர்ஹள் மனத்தில் உள்ள வேண்டுகோளையும் பூர்த்தி செய்து நல்ல பதவியை அருள்கிறான் என்பது கவியின் சத்யமான வார்த்தையாஹிறது.