Sunday, April 26, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part28

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-28.

  

ராகம்: நீலாம்பரி                     தாளம்:ஆதி/ஜம்ப

 

ச.1.நாராயண வாஸுதேவ நகதர நாரஸிம்ஹா

   ஸ்ரீராம பூர்ணகாம ஸ்ரீக்ருஷ்ண பவ்வளிஞ்சு

 

நாராயணனே வாஸுதேவனே மலையை தாங்கியவனே நாரஸிம்ஹனே ஸ்ரீராமனே வேண்டிய வரம் அருள்பவனே ஸ்ரீக்ருஷ்ணனே படுத்துக்கொள்வாய்

 

ச.2.கரிவரத கருணாகர கமலாஷா பக்த்ரக்ஷ

   மருவம்பு சய்yaயமீத மன்னாரு பவ்வளிஞ்சு

 

யானைக்கு அருள் செய்தவனே கருணையே வடிவானவனே தாமரைப்பூவை போல் கண்களுடையவனே இறைவன் அடியார்ஹளை காப்பவனே மருக்கொழுந்து பூவால் பரப்பிய படுக்கையில் நாயகனே படுத்துக்கொள்வாய்

 

ச.3.காகுஸ்த குலநாத காவேடிரங்கநாத

   பாகஸாஸனவினுத பரமாத்மா பவ்வளிஞ்சு

 

 

காகுஸ்த குலத்தின் நாயகனே காவேரி கரையில் இருக்கும் ரங்கநாதனே இந்திரனால் வணங்க்கபடுபவனே பரமாத்மனே படுத்துக்கொள்வாய்

 

ச.4.கோபிகா ததிசோர கோவர்த்தநோத்தர

   பாபஸங்கவிதூர பயஹர பவ்வளிஞ்சு

 

கோபிகைகளின் தயிரை திருடியவனே கோவர்த்தன மலையை தூக்கிபிடித்தவனே பாபம் செய்யும் கூட்டத்தினரை அஹற்றியவனே கலியுக பயத்தை இல்லாமல் செய்தவனே படுத்துக்கொள்வாய்

 

ச.5.வேதாந்த ஸ்ருதி ஸார விஸ்வரூப விஹாரா

   மாதவி குஸும ஹார மாதவ பவ்வளிஞ்சு

 

வேதத்தின் உட்பொருளாய் விளங்குபவனே உலக அளவிற்கு உடம்பை பெரிதாக்கி காட்டியவனே வாஸனை நிரம்பிய மாதவி பூக்களை மாலையாக அணிந்தவனே மாதவனே படுத்துக்கொள்வாய்


ச.6.கமலஸம்பவ வினுத கரிராஜவரத சௌரே

   விமலகஸ்தூரிரங்க வேட்கதோ பவ்வளிஞ்சு

 

தாமரை பூவின் மேல் அமர்ந்து இருக்கும் ப்ரஹ்ம்மாவால வணங்க்கபடுபவனே யானை அரசன் கஜேந்த்ரனை காப்பாற்றியவனே உலஹத்துக்கே கஸ்தூரிரங்கனாஹ இருப்பவனே ஆசையுடன் படுத்துக்கொள்வாய்

 

ச.7.விதுருனிண்டிகி போயி விந்தாரகிஞ்சிதிவி

   நிதுரனு போவைyyaய்ய க்ருஷ்ண நிர்மல பவ்வளிஞ்சு

 

விதுரனின் வீட்டிற்கு போய் விருந்து சாப்பிட்டவனே தூங்குவதற்கு போங்கள் அப்பழுக்கற்ற கிருஷ்ணனே படுத்துக்கொள்வாய்

 

ச.8.பரமேஸ பரமபுருஷ பரிபூர்ண பக்த்ரக்ஷ

   விருல பான்புமீத ஸ்ரீவேங்கடேஸ பவ்வளிஞ்சு

 

மோட்ஷம் அருளும் தலைவனே மோட்ஷத்தின் நாயகனே முழுமையாணவனே இறைவன் அடியார்ஹளை காப்பவனே விருவட்சி lபூவால் பரப்பிய படுக்கையில் ஸ்ரீவேங்கடேஸ படுத்துக்கொள்வாய்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

 

எப்பொழுதும் எல்லா சமயத்திலும் இறைவனை நினைத்து போற்றி புகழும் பக்தர்களின் துன்பங்களை யோகநித்திரையில் இருந்துகொண்டே இறைவன் போக்கியிருக்கிறார் என்பதை தெளிவாக்கிய கவி இந்த கலி யுகத்தில் உள்ள மக்களை எப்பொழுதும் எல்லா சமயத்திலும் இறைவனை நினைத்து போற்றி புகழுந்து பாடி நன்மையடையும்படி வலியுருதுஹிறார்.

No comments:

Post a Comment