Wednesday, April 22, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part23

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-23.

 

ராகம்;ஆஹிரி\பெஹாக்              தாளம்; த்ரிபுட\சாபு

 

பல்லவி; விணா வாயிஞ்செனே அலமேலுமங்க விணா வாயிஞ்செனே

 

வீணை வாசித்தாள் அலமேலுமங்க தாயார்-- விணா

 

அ.ப; வேணுகான விலோலுடைன வேங்கடேசுனி வத்த

 

வேணுகானம் (புல்லாங்குழல்) வாசித்து அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வளித்து காப்பாற்றிய வேங்கடேஸ்னின் முன்பு வீணை வாசித்தாள் அலமேலுமங்க தாயார்

 

ச.1. குருலு மெல்லன ஜாரகா ஸன்லnaனஜாஜி

    விருலு ஜல்லன ராலகா

    கரகங்கனமுலு கல்லனி ம்ரோயாக

    முருவைன வஜ்ரால முருகு தூலியாடகா—விணா

 

தலைமுடி மெதுவாஹ சரிய தலையில் இருந்த ஜாதிப்பூ விருவாட்சிபூ உதிர்ந்துவிழ கை வளையல் கலகல வென்று சப்தம் செய்ய பளீரென்று ஒளிவீசும் வைரத்தாலான மாலைகளாட வீணை வாசித்தாள் அலமேலுமங்க தாயார்

 

ச,2.சந்தி தண்டலு கதலகா ஆணி முத்யால

   சருளுனுய்யாலனு ஊககா

   அந்தமை பாலின்ட்லநலதின குங்கும

   கந்தமு செமட சேகரகி குமகுமனகா—விணா

 

கழுத்தில் உள்ள மாலைகள் அசய உயர்வான முத்துக்களாலான மாலை உஞ்சல்போலாட தலை வஹிடுவிலிருந்து வியர்வையினால் அழகான நெற்றியில் வழிந்து குங்குமம் மூக்கின் வழியாஹா வந்து

மூக்கின் நுனியில் சிகப்பு முத்து போல் தாயாரின் மூக்கில் புல்லாக்கு என்னும் நகை போல் இருந்தது. அந்த சிகப்பு முத்து வீணை வாசிக்கும் சந்தனம் பூசிய கையில் விழ கும்மென்ற வாசனையுடன் வீணை வாசித்தாள் அலமேலுமங்க தாயார்

 

ச.3.கனநயமுலு மேரயகா விந்த விந்த

   ராகமுலு அந்து குரியகா

   கனநிபவேணி ஜந்த்ரா  காத்ரமுலு கரககா

   வினு ஸ்ரீவேங்கடேஸுனி வீனுலவிந்துகா-- விணா

 

தாயாரின் உடம்பு மிளிர விதவிதமான ராகங்களில் மேஹத்தை போன்ற கருமையான கூந்தலையுடைய தாயார் வீணை தந்திகளை மீட்டி வாசித்து கேட்பது ஸ்ரீ வேங்கடேஸ்னின் காதுகளுக்கு விருந்தாஹா அமைந்தது

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

வாத்யங்களில் மிஹவும் மங்களஹரமானது வீணை. ஸ்ரீரங்கம் கோவிலில் பெருமாளை பள்ளியறைக்கு அனுப்பும் சேவையில் வீனைவாசிக்கிறார்கள். வீணை வசிக்கும்பொழுது உடம்பில் ஏற்படும் அசைவு அதனால் உண்டாஹும் வியர்வை பள்ளியறையில் உள்ள வாசனை இந்த பாட்டில் கவி விளக்கியிருக்கிறார்

 

பக்தர்ஹதளின் உடம்பு வீணை அதை இறைவன் நாமாக்களால் மீட்டி பக்தர்ஹள் மனதில் இறைவன் எப்பொழுதும் இருக்கும்படி வைத்துக்கொள்ளவேண்டும். பக்தர்ஹள் மனதில் இறைவன் இருப்பதால் அங்கு மகிழ்ச்சியும் மங்களஹரமாஹா இருக்கும் என்பதற்கு மற்றுமொரு சான்று

No comments:

Post a Comment