Wednesday, April 22, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part22

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-22.

 

ராகம்; சுருட்டி                       தாளம்; ஆதி

 

lபல்லவி; சேகொனு விடமு ஸ்ரீராம

 

கையால் வாங்கிக்கொள் தாம்பூலத்தை ஸ்ரீராம

 

அ.ப. ஜ்யோகன லங்கன லாகு சுட்டீயாக—சேகொனு

 

துளிரான வெற்றிலையில் தயாரிக்கப்பட்ட தாம்பூலம்

 

ச.1 பச்சிகுண்டு போகல பண்டு தெல்யந ஆகுல

   ஹெச்சைனா கற்பூர யேலசூர்னமு

   தெச்சின லாவங்கபு யேலக்காயலு

   முத்ச்சடக மச்சகந்துலு மடுபுலந்தீய்க்—சேகொனு

 

பச்சை பாக்கு துளிர் வெற்றிலை உயர்வான பச்சைகற்பூரம் கலந்த யேலக்காய்பொடி புதியதாக கொண்டுவரப்பட்ட கிராம்பு, யேலக்காய் சேர்த்து அழஹான பெண்களால் மடித்து கொடுக்கிறார்கள் கையால் வாங்கிக்கொள் தாம்பூலத்தை ஸ்ரீராம

 

ச.2 அலுகுவக்கலதி.  பொத்யதலாகுலு

   ஸீவலு முத்யபு ஸுன்னமு

   சதி ஜானகி மடுபுலந்தீயாக

   ஸ்ரீபதி தாம்பூலம் சேகொனுடி—சேகொனு

 

சாயப்பாக்கு துளிர் வெற்றிலை, பச்சை பாக்கில் வெட்டப்பட்ட தூள் (சீவல்) முத்து போல் உள்ள சுண்ணாம்பு இவைகளை சேர்த்து நாயகி ஜானகி மடித்துகொடுக்க நாயகன் ராமன் தாம்பூலத்தை கையால் வாங்கிக்கொண்டார்


 ச,3 செலுலித்தரு இருவங்க சமரமீவ

   தலரு போணுலு நாட்யமுலு சலுப

   நலுவங்க தும்புரு நாரதுல் கானமுசாய

   ஜலஜாஷி ஸீததோ ஸரஸமுலாடுசு—சேகொனு

 

தோழிகள் இருவர் இரண்டு பக்கமும் சாமரம் போட அழஹான பெண்கள் நடனம் செய்ய தும்புரு நாரதர் பாட தாமரை பூவைபோல் கண்களையுடைய ஸீதாதேவியுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு தாம்பூலத்தை கையால் வாங்கிக்கொண்டார்

 

ச,4 அங்கனுலு முத்யால ஹாரதுலு எத்தாக

   பொங்குசுஜனுலேல்ல பொகடக்னு

   ரந்திக கஸ்தூரி ரங்குடவை மம்மு

   ஸ்ருங்காரமுக ரஷிஞ்சு நா ஸ்வாமி—சேகொனு

 

பெண்கள் முத்துக்களால் ஹாரதி எடுக்க உற்சாஹத்துடன் மக்கள் உயர்வாஹா பேசவும் கஸ்தூரி ரங்கனாஹ் எங்களை சந்தோஷமாக காப்பாற்று என் இறைவனே

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

நாம் சாப்பிட்டவுடன் தாம்பூலம் போட்டுக்கொள்வது வழக்கத்தில் உள்ளது. தாம்பூலம் என்பது ஸ்ருங்காரத்திலும் ஒரு அங்கம். இதையே நம் பெரியவர்கள் லக்ஷ்மி கடாஷம் என்று சொல்லியிருக்கிறார்கள் . மும்மூர்த்திஹளில் ஒரு வரான தியாகராஜசுவாமிகள் 'விடமு  சேயவே நன்னு விடநாடகவே' அதாவது நான் கொடுக்கும் தாம்பூலம் போட்டுக்கொள் என்னை விட்டுவிடாதே என்பதாஹும். நம் வீட்டுக்கு வருபவர்ஹளுக்கு தாம்பூலம் கொடுக்கிறோம், நம் வீட்டு கல்யாணங்களில் தாம்பூலபை கொடுக்கிறோம், இதன் உட் பொருள்

என்னவென்றால் கொடுப்பவருமக்கும் வாங்கிகொள்பவருக்கும் இடையில் உள்ள உறவு துண்டிக்காமல் நிலையாக இருக்கவேண்டும் என்பதாஹும். இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு நிலையாக இருக்கவேண்டும் என்பது இந்த பாட்டின் உட் பொருள் ஆஹும்.

 

இந்த பாட்டு பவ்வளிம்பு பஜனையில் பாட படவேண்டும் என்பதற்கு இருக்கும்  ஒரே ஆதாரம் சொர்னக்காடு பஜனை பத்ததியில 375 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்று வரையிலும் பாடிக்கொண்டு இருக்கிறோம்.

புதுக்கோட்டைபூஜ்யஸ்ரீகோபாலக்ருஷ்ணபாஹவாத
ஸ்வாமிஹளால் ஆரம்பித்து நடத்தப்பட்டுவரும் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹ ஜெயந்தியிலும் இன்று வரையிலும் பாடிக்கொண்டு இருக்கிரார்ஹள்

No comments:

Post a Comment