Monday, April 20, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part21

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-21.

 

ராகம்; மங்கள கௌசிகம்              தாளம்:ஆதி

 

பல்லவி; ஆரகிஞ்ச்ச நம்ம நேடு ஸ்ரீவேங்கடேஸுடு—ஆரகிஞ்ச்ச

 

இன்று ஸ்ரீவேங்கடேஸர் சாப்பிட்டார்

 

 

ச.1. ஆரகிஞ்ச்ச நம்ம நேடு ஆலுலனு அந்தரிணி கூடி

  சாரே சாரேகுனு எங்கிலி சவிஜூஸி ஸல்லாபமுதோனு- ஆரகிஞ்ச்ச

 

தன்னுடன் இருப்பவர்ஹளுடன் கூடி வரிசை வரிசையாக

(எங்கிலி) எச்சில் என்று கூட பார்க்காமலும் சந்தோஷமாக சாப்பிட்டார்

 

ச.2உல்லாஸமு தோட கொல்ல உவிதலபை ஜேருகொண்ட

முல்லோகமெல்லநு ஏலு ஸ்ரீமூர்த்தி பாலு பணட்லு புவ்வ-ஆரகிஞ்ச்ச

 

சந்தோஷமாக யாதவ வலிபர்ஹளுடன் சேர்ந்துகொண்டு இந்த மூன்று உலஹத்தையும் ஆட்சி செய்யக்கூடிய இறைவன் பாலும் பழங்களையும் சாப்பிட்டார் 

 

ச.3.அந்தரங்க வாஸமுன அளிவேணுலு ஒப்புமீர

   விந்த பஷ்ய போஜ்யமுல வேடுக பெட்டின விந்து-ஆரகிஞ்ச்ச

 

அழஹாஹ அல்ங்கரிக்கபட்டுள்ள அறையில் பெண்கள் அளவுகடந்த ஆசையினால் வினோதமான அதிஹா சுவையுள்ள பட்சனக்களுடன் வேண்டுதலுடன் மகொடுக்கப்பட்ட விருந்தை சாப்பிட்டார் 


ச.4.மந்தையான ஸ்ரீ அலமேலுமங்க வேஞ்கடேஸுகுன்

   அன்துமோவி தேநீயலனு அமர பெட்டின விந்து-ஆரகிஞ்ச்ச

 

அழஹான அலமேலுமங்கை தாயார் வேங்கடேசனுக்கு ஆசையுடன் உட்கார வைத்து தேநாக இருக்கும்  விருந்து கொடுத்தார்கள்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

முதல் இரண்டு சரணங்களும் கிருஷ்ணாவதாரத்தை நினைவூட்டும்படியாக இருக்கிறது  தேவர்ஹளின் கர்வத்தை அடக்க யாதவ வலிபர்ஹளுடன் சேர்ந்துகொண்டு மாடுகள் மேய்க்க சென்ற சமயத்தில் யாதவ வலிபர்ஹள் கொண்டுவந்த உணவு பதார்த்தங்களை ஒன்று சேர்த்து கிருஷ்ணரே எல்lலோருக்கும் கையில் கொடுத்து சாபபிடும்படி சொன்னார். தேவர்கள் எறும்பு ஊருவத்தில் யாதவ வலிபர்ஹள் சிந்தும் உணவை க்ருஷ்ண பிரசாதமாஹா உண்ண வந்தார்கள். க்ருஷ்ணரோ வலிபர்ஹளை சிந்தாமல் கையில் உள்ளதை நக்கி சாப்பிடும்படி சொன்னார். வலிபர்ஹள் கையை சுத்தம் செய்வதற்க்கு குளத்துக்கு வரும்பொழுது மீனாஹ் இருந்து உண்ணலாம் என்று நினைத்துக்கொண்டடிருந்தார்கள். க்ருஷ்ணரோ வலிபர்ஹளை கையை துணியில் துடைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். யாதவ வலிபர்ஹள் எப்படி இறைவனையே நம்பி இருந்தார்ஹளோ அதே விதத்தில் இறைவனை நம்பும் பக்தர்ஹளுக்கு சகல விதமான நன்மைஹளும் இறுதியில் ஆத்மாவுக்கு நல்ல பதவியும் கிடைக்கும் என்பது கவியின் வாக்கு

No comments:

Post a Comment