Monday, April 20, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part20

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-20.

 

ராகம்;பேகட\சங்கராபரணம்       தாளம்;த்ரிபுட

 

பல்லவி; த்ரிஷ்டிதாகு மா அய்யகு தெரவேயரே

 

கண்பட்டுவிடும் எங்கள் நாயகனுக்கு திரை lபோடுங்கள் 


அ.ப.திரிஷ்டிஞ்ச்சே இந்து எவரைன தரிஜூபுநி இய்யகுரே- த்ரிஷ்டிதாகு

 

கண் படும்படியாக இங்கு எவரயும் நிற்க விடாதீர்கள்

 

ச.1.சப்புடு ஸேயுடகு அவசரமு காதனரே

 அப்புடு மஜ்ஜன மாடனனி தெல்பரே

   கப்புரம்பு ஸுரடுல காலிபை வீஜோ அனரே

   அப்புடு  ஸதுலதோனு ஆரகிஞ்சினாடனரே-- த்ரிஷ்டிதாகு

 

சப்தம் செய்ய கூடிய அவசியம் இல்லை ஸ்வாமி வாசனை த்ரவியங்களால் ஸ்நானம் செய்து தென்றல் காற்று வீஸிக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் தன்  நாயகியுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்

 

ச.2.தந்தபு சவிகலோன ஏகாந்த மாடுனு அனரே

   அந்தரங்க முனனு எத்தமாடதரு அனி தெல்பரே

   தொந்திபூல தொட்லலோன தொமிகூடி யுன்னாடு அனரே

   செந் கேளாகூளிலோன சித்தகிஞ்சி யுன்னாடு அனரே-- த்ரிஷ்டிதாகு

 

ந்த்தினலான கட்டிலில் சந்தோஷமாக இருக்கிறார் அந்தரங்கமாஹ் பேசிகொண்டு இருக்கிறார் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் (ஊஞ்சலில்) ஆடிக்கொண்டு தன நாயஹியுடன் சேர்ந்து சந்தோஷமாஹ் இருக்கிறார்

 

ச.3.பட்டபுராணியுதோனு பவ்வளிஞ்சி உன்னாடு அனரே

   ரட்டு ஸேயுனிந்தெவரைன ரானியகுரே

   பட்டபு அலமேலுமங்கபதி ஸ்ரீவேங்கடேஸ்வரடு

   ஸ்ருஷ்டிலோக கர்தகான ஸேவிஞ்சி பொம்ம்னரே- த்ரிஷ்டிதாகு

 

பட்டத்து ராணியுடன் சேர்ந்து இருக்கிறார்.(ரட்டு ஸேயுனிந்தெவரைன) பிடிவாதமஹா எவராவது வந்தால் விடவேண்டாம். பட்டத்து ராணி அலமேலுமங்கையுடன் ஸ்ரீவேங்கடேஸ்வரர் இருக்கிறார். இந்த உலகத்தை படைக்கும் ப்ரம்மாவாக இருந்தாலும் வெளியிலேயே நமஸ்காரம் செய்துவிட்டு போகும்படி சொன்னார்.


இந்த பாட்டின் உட் பொருள்

 

இறைவன் நாமாவையே நம்பிக்கொண்டு இருக்கும் பக்தர்களின் மனதில் இறைவன் குடிகொண்டுவிட்டன என்பதை எவருக்கும் தெரியப்படுத்தாமல் மறைத்து வைத்துக்கொள்ளும்படி கவி சித்தரிக்கிறார். இறைவன் இருப்பதை அறியாத காமம் முதல் ஆறு விதமான குணங்கள்பிடிவாதமஹா பக்தனிடம் வர முயற்சிக்கும் அந்த குணங்கள் இறைவன் அருளால் வராமல் தடுக்க வேண்டும் என்பது கவியின் கட்டளை ஆஹும். இது போல் இறைவன் குடிகொண்டுள்ள ஆத்மா இந்த உலகத்தை விட்டு போகும் சமயம் இந்த இறைவன் குடிகொண்டுள்ள ஆத்மாவின் அடுத்த ஜென்மம் என்ன என்பதை தீர்மானிக்க இந்த உலகத்தை படைக்கும் ப்ரம்மா வரும் சமயத்தில் இறைவன் குடிகொண்டுள்ள ஆத்மாவிர்க்கு இனி ஜென்மம் இல்லை இந்த ஆத்மாவை நமஸ்காரம் செய்துவிட்டு போகும்படி இறைவன் கட்டளை இடுஹிறார் என்பது கவியின் ஆணித்தரமான வாக்கு  .ஆஹையால் ஆடம்பரமில்லாத, எதையும் எதிர்பார்க்காத பக்தியுடன் நாம சங்கீர்த்தனம் செய்யவேண்டும் என்பது ப்ரார்த்தனை

No comments:

Post a Comment