Friday, April 17, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part17

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-17.

 

ராகம்;சங்கராபரணம்/சாவேரி          தாளம்;த்ரிபுட

 

பல்லவி;


வேஞ்சேயவைய மீ விடுதிகினி மச்சிக தோட 

மதனகோபால—வேஞ்சேயவைய

 

நீங்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு அன்புடன் உங்களை வரும்படி அழைக்கிறார்கள் எழுந்தருள்வாய் மதனகோபால

 

ச.1 பகடம்பு தரிகொள்ள பட்ட மஞ்சமு மீத

   பகடுமீர விருவாஜி பரபுவேஸி

   ஜகஜம்பு செங்காவி சலுவ் சீரயு கட்டி

   இகருபோனி நீ ராககு எதுரு சூசுசுன்னதி—வேஞ்சேயவைய

 

பவழத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகாண கட்டிலின் மீது விரிப்பை

மிஞ்சி விருவாட்சி மலர்ஹளை பரப்பி ஜோலிக்கும்படியான அழஹான

சிகப்பு புடவை கட்டிக்கொண்டு நாயகி உன் வரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறாள்

 

 2 விந்த் விந்தலைன விவித கலபமுpoo பூபந்தலு தெல்லன ஆகுலு பாகால அமர்சி

அந்தரங்கமுக ராகமு ஹாயிகா பாடுசு இந்தி  நீ ராககு எதுரு சூசுசுன்னதி—வேஞ்சேயவைய

 

ஆச்சர்யப்படும்படி விதவிதமாஹ் அலங்காரக் கட்டிலில் பூக்களினால் பந்தல் போடப்பட்டு வெளுப்பாக உள்ள இலையால் (தென்னங்குருத்து) தோரணங்கள் கட்டி மனதிற்குள் சந்தோஷமான ராகங்களை பாடிக்கொண்டு நாயகி உன் வரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறாள்.

 

ச. அங்கலி ஜேப்பக  அரமர சேஸயக பங்கஜாஷா வேங்கடரமண தேவ

   கொங்கக செலிமிதோ கோமலி கூடுமு இங்க நீ ராககு எதுரு சூசுசுன்னதி—வேஞ்சேயவைய

 

தன் மனத்தில் ஏற்படும் மறுப்பு ஏதும் வெளியே சொல்லாமலும் தாமதிக்காமலும் தாமரை போன்ற கண்களை உடைய வேங்கடரமண ஸ்வாமி சங்கோஜபடாமல் உன்னுடன் சேர்ந்து இருப்பதற்காக் உன் வரவை எதிர்பார்த்துகொண்டு இருக்கிறாள்.

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

 

இறைவன் இருக்ககூடிய இடமாகிய பக்தர்கள் மனது சுத்தமாஹவும் ஒளியுடன் நல்லவிதமாஹவும் இறைவனை தன மனதில் வந்து இருக்கும்படியாக பக்தர்கள் வரவேற்பதாஹ் இந்த பாட்டில் குறிபிட்டுள்ளது  

No comments:

Post a Comment