Friday, April 17, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part16

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-16.

 

ராகம்;மத்யமாவதி                                                     தாளம்;ஆதி

 

பல்லவி;பந்தமு செல்லனு பதகதரா இந்தலோன தப்புலு எஞ்சகு,

        பதரா

 

வைராஞயமாஹா இருக்கமாட்டேன் கவலை படவேண்டாம் இதற்குள்

தப்பாக எண்ண வேண்டாம் வாருங்கள்

 

ச.1 ராணி கோபமுன ரட்டு ஜேஸிதிவிந்தே பானுபு மீதிகி பதகதரா

ஸோநல செமடஸோலசிதிவிந்தே தேனேமோவி தப்பி தீர்சுகோ

 

வராத கோபத்தை கோபம் வந்த்தாஹ் காண்பித்து பதற்றம் அடைய வேண்டாம். பதட்டத்தினால் வேர்க்க விறுவிறுக்ககளைத்துபோய் இருக்கிறாய் தேனை போல இனிமையான முகத்தை உடையவனே வாருங்கள் தங்கள் தாஹத்தை தீர்த்துகொள்ளுங்கள்

 

ச.2 அனுமானமுலகுன் அலசிதிவிந்தே பணிகலதிகனைன பதகதரா

  நனுநிடு ஜூட்க நவ்விதிவினதே தனதகுன எப்படி தாவுகு பதரா

 

அனுமானத்துடன் களைத்துவிட்டாய் உனக்கு அனுசரணையாக இருக்கமாட்டேன் என்று பதற்றம் அடைய வேண்டாம் ஒரு விதமாஹா என்னை பார்த்து சிரித்தாய் உனக்கு தகுந்த எப்பவும் இருக்கும் இடத்துக்கு வா போகலாம்

 

ச.3 பாஸின காகல படலிதிவிந்தே பாஸலை நம்மிதி பதகதரா

   ஆஸல ஸ்ரீ வேங்கடபதி நீவிக வேஸாரக ரதி வேதிகி பதரா


காக்கைகள் கரைவதை எண்ணி விடிந்துவிட்டது என்று களைத்துவிட்டாய் பாஸத்துடன் நம்பினேன் பதற்றம் அடைய வேண்டாம் ஆசையுடன் திருவேங்கட மலையின் நாயகனே நீ இனியும் கவலைபடாமல் பெண்ணின் பள்ளியறைக்கு வருவாய்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு இருக்கும் பக்தர்களிடம்    இறைவனே வைராக்யமாஹ் இல்லாமலும், பக்தர்களின் மேல் கோபம் வந்தது போல் இல்லாமலும் பக்தர்களை அனுமானத்துடன் பார்க்காமலும் இறைவன் அருளால் திடமான பக்தியை பக்தர்களுக்கு கொடுத்து பக்தர்களின் மனதில் நிலையாக இருக்குமாறு வேண்டுஹிறேன். எப்படி தாவுகு பதரா== உனக்கு தகுந்த எப்பவும் இருக்கும் இடத்துக்கு வா போகலாம்)பக்தர்களின் மனதுதான் இறைவன் எப்பவும் இருக்கும் இடமாகும். பக்தனுடைய ஆன்மாவுடன்  இறைவன் கலந்து ஒன்ராகிவிட்டான் என்பது கவியின் வாக்கு

No comments:

Post a Comment