Monday, March 16, 2015

Seemantham

courtesy: Sri.GS.Dattatreyan

"வளைகாப்பு" என்ற சடங்கு முக்கியமாக முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. பொதுவாக கர்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து 7 முதல் 9 மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையினுள் உள்ள நீரில் (குளத்தில்) கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை, வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது.உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் சிசுவுக்கு (குழந்தை) நன்றாக கேட்க துவங்குகிறது. தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. 
நமது நவீனத்துவ ஆராய்ச்சிகளின்படி, கருவில் இருக்கும் சிசு, 20 வாரங்களுக்கு பின்பு ஒலியை கேட்கும் திறனை பெற்றுவிடுகின்றன என உறுதிப்படுத்துகின்றன. முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். "வகிடு" என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள். 
வீணை டி.வி.டி. சி.டி. போட்டு வீணா கானம் கர்பிணி கேட்க வேண்டும்..
பும்ஸவனம் மற்றும் சீமந்தம் இரண்டும் சேர்த்து செய்யலாம் என ரிஷிகள் கூறியதால் தற்போது இரண்டும் சேர்த்து செய்கிறார்கள்.
வளைகாப்பு, மற்றும் பூச்சூட்டல்.., என்பது சிஷ்டாசார வகையில் வந்து பெண் மக்கள் சேர்ந்து செய்யும் லெளகீக கர்மா.. கர்பிணி பெண்ணின் துணையாக மற்றொரு பெண்ணையும் உட்கார்த்தி இருவருக்கும் கையில் வளையல்
அடுக்குகிறார்கள். முதலில் வேப்ப இலைகளை பறித்து வந்து இலைகளை பிய்த்துவிட்டு நரம்பை வளையல் மாதிரி செய்து முதலில் போடுகிறார்கள்.
தலையிலும் வேப்பிலை வைக்கிறார்கள்..
பிறகு வீட்டிலுள்ள மற்றபெண் உறவினர்களுக்கும் வளையல் போடுகிறார்கள்..
பிறகு கர்பினி பெண்ணை மேற்கு பார்த்து நிற்க வைத்து உடலில் தலையில். தோள் பட்டையில். இடுப்பில், கால்களில் ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து மற்ற பெண் மணிகள் . கற்பூரம் கொளுத்தி தலையிலிருந்து கால் வரையிலும் . காலிலிருந்து தலை வரையிலும் மூன்று முறை கர்பிணி பெண்ணிற்கு சுற்றி த்ருஷ்டி கழிக்கிறார்கள். . நல்ல வாசனை பூக்கள் கர்பிணி பெண் தலையில் வைக்கிறார்க்கள். கர்நாடக ஸங்கீதம் பாடுகிறார்கள்..குல தெய்வ கோவிலுக்கும் , வளயல் எடுத்து தனியாக வைத்துக்கொண்டு பிறகு குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது குல தெய்வத்திற்கு. கொடுக்கிறார்கள். . வீட்டிற்கு பக்கத்திலுள்ள கோவிலுக்கும் வளயல் கொடுக்கிறார்கள்..
Seemandham ( To be performed in 6th or 8th month )
Veshti Towel for son in law
9 yards Saree, blouse for daughter
Seer Batchanam ( 2 sweets and 2 Savouries- 21 or 31 each)
Batchanam for distribution
Poo, Pazham, Vetrilai paakku,Thengai
Maalai for daughter and son in law
Gift to the ladies attending the function
Breakfast / lunch ( to be shared with Sambandhi )

Boy's side
Manjal, kunkumam, Sandhanam
Valaigappu 
Seemandham

Dress for the son
Dress for the daughter in law
Hall for the function

No comments:

Post a Comment