Wednesday, March 4, 2015

Nyaya

Courtesy:  swamiindology.blogspot.com

மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!

tree 2

  1. மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!

 நியாயங்கள்

विषवृक्षन्यायः
vishavrksa nyayah
விஷ வ்ருக்ஷ நியாயம்
ஒருவன் ஒரு விஷ மரத்தை நட்டு வளர்க்கிறான். அது விஷ மரம் தான் என்றாலும் கூட, மரத்தை நட்டு வளர்த்தவனாலேயே அது வெட்டப்படக் கூடாது. அதே போல ஒரு விஷயம் தீமை தருவதாக இருந்தாலும், குறும்புத்தனமாக இருந்தாலும் அதைச் செய்தவனாலேயே அது அழிக்கப்படக் கூடாது என்கிற நியாயம் இது.

tree
वृक्षप्रकंपनन्यायः
vrksaprakampana nyayah
வ்ருக்ஷ ப்ரகம்பன நியாயம்
மரத்தை அசைக்கும் நியாயம் இது. ஒரு மரம் அசைக்கப்படும் போது அதன் கிளைகளும் இதர பாகங்களும் சேர்ந்து அசைக்கப்படுகின்றன. ஆடுகின்றன. இந்த நியாயம் ஒரு விஷயத்தில் ஆணிவேரே அசைக்கப்படும் போது அதைச் சார்ந்த இதர விஷயங்களும் அசைக்கப்படும் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது
இந்த நியாயம் இன்னொரு விதமாகவும் விளக்கப்படுகிறது. ஒரு மனிதன் மரத்தின் மீது ஏறினான். அவனது நண்பர்கள் கீழே நின்று கொண்டிருந்தனர். ஒருவன் ஒரு கிளையை அசைக்கச் சொன்னான். இன்னொருவனோ இன்னொரு கிளையை அசைக்கச் சொன்னான். இன்னொருவன் இன்னொரு கிளையை… மரத்தில் ஏறியவன் மரத்தையே அசைத்தான். ஆகவே அனைத்துக் கிளைகளும் அசைந்தன! ஒரே ஒரு முயற்சியால் அனைவருமே திருப்திப் பட்டனர். ஒரே முயற்சியில் அனைவரையும் திருப்திப்பட வைப்பதை இது குறிக்கிறது.

morning-sickness1
वाताकदन्यायः
Vatadi nyayah
வாதாதி நியாயம்
வாதம், பித்தம், ச்லேஷ்மம் ஆகியவை உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
வாதம், பித்தம், ச்லேஷ்மம் அதாவது வாயு,பித்தம், கபம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தாலும் கூட உடலில் சமச் சீராக இருந்து உடலை நன்கு இயக்க வைத்து உடலின் ஆரோக்கியத்தைக் காக்கின்றன. இதே போல வெவ்வேறு இயற்கைச் சுபாவம் கொண்டவர்கள், வெவ்வேறு திறமைகள் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து சரியாக ஒரு காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். இதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.

लोहचुम्बकन्यायः
lohacumbaka nyayah
லோஹ சும்பக நியாயம்

magnet
லோஹம் – இரும்பு; சும்பகம் – காந்தம்
இரும்பும் காந்தமும் பற்றிய நியாயம் இது.
இரும்பைக் காந்தத்தின் அருகில் வைத்தால் அது தானாக ஈர்க்கப்பட்டு ஒட்டிக் கொள்ளும். இதே போல மிகவும்ந நெருக்கமான இரண்டு வஸ்துக்கள் இயல்பாக பரஸ்பரம் ஒன்றினால் இன்னொன்று ஈர்க்கப்படுவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. தூரத்தில் இருந்தாலும் கூட பரஸ்பரம் இரும்பு காந்தம் போல ஒன்றையொன்று ஈர்க்கப்படுவதை இது விளக்குகிறது.
சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி இந்த நியாயத்தைக் கையாள முடியும்.

रोगीन्यायः
rogi nyayah
ரோகி நியாயம்
ரோகி – நோயாளி
ஒரு நோயாளி நீண்டநாட்பட்ட நோயினால் தனது உணவைப் பற்றி அக்கறை காட்டாமல் இருக்க ஆரம்பிக்கிறான். அதே போல கெட்டவற்றில் நாட்டம் கொண்ட ஒருவன் எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியை இழந்து விடுகிறான். நோயாளி போல அவனது தீர்மானிக்கும் சக்தியும் கெட்டுப் போகும் போது இந்த நியாயம் உபயோகப்படுத்தப்படுகிறது.
patient
உலகியல் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நியாயங்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உணரும் போது சுருங்கச் சொல்லி விளக்க வைக்கும் நியாயங்களின் மதிப்பை நன்கு உணரமுடிகிறதல்லவா!

No comments:

Post a Comment