Tuesday, October 14, 2014

Maangalyam tantunaa nena

Courtesy: Tamil Saivites

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் உபயத்தில் நமக்கு மனப்பாடமாகிவிட்ட இந்தத் திருமண மந்திரத்தின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? 

"மாங்கல்யம் தந்துநானேனா மம ஜீவன ஹேதுனா 
கண்டே பத்னாமி ஸூபஹே த்வம் ஜீவ சரதாம்சதம்!"

"எம் வாழ்க்கைக்கு ஏதுவான இம்மங்கலநாணை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். நற்குணங்களின் உறைவிடமான என் மனைவியே, நூறாண்டுகள் மகிழ்வோடு வாழ்வாயாக!"

அவ்வளவுதான்! மனைவிக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்தை கணவன் கொடுப்பதைக் கூறும் இந்த மந்திரத்தின் பொருளை உணர்ந்தே தாலி கட்டிக் கொண்டார்களென்றால், இக்காலத்தில் அதிகரிக்கும் விவாகரத்துக்களும் குடும்பச் சண்டைகளும் எவ்வளவோ இல்லாமல் போகலாம், இல்லையா? 

மாங்கல்யம் தந்துநானே - இந்த மாங்கல்யத்தை
(புரியற தமிழில் மாங்கல்யத்தை நான் தந்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் 

மம ஜீவன ஹேதுனா – என் வாழ்க்கைக்கு ஏதுவாக 

கண்டே பத்னாமி - உன் கழுத்தில் அணிவிக்கிறேன்.

ஸூபஹே - சுபங்களின் வடிவாக இனி என்றும் எனக்கு சௌபாக்கியத்தையே தரப்போகின்றவளே!

த்வம் ஜீவ சரதா சதம்"- நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!
Photo: திரைப்படங்கள் மற்றும்  சின்னத்திரையின் உபயத்தில் நமக்கு மனப்பாடமாகிவிட்ட  இந்தத் திருமண மந்திரத்தின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? :)    "மாங்கல்யம் தந்துநானேனா  மம ஜீவன ஹேதுனா   கண்டே பத்னாமி ஸூபஹே த்வம் ஜீவ சரதாம்சதம்!"    "எம் வாழ்க்கைக்கு ஏதுவான இம்மங்கலநாணை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். நற்குணங்களின் உறைவிடமான என் மனைவியே, நூறாண்டுகள் மகிழ்வோடு வாழ்வாயாக!"    அவ்வளவுதான்! மனைவிக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்தை கணவன் கொடுப்பதைக் கூறும் இந்த மந்திரத்தின் பொருளை உணர்ந்தே தாலி கட்டிக் கொண்டார்களென்றால், இக்காலத்தில் அதிகரிக்கும் விவாகரத்துக்களும் குடும்பச் சண்டைகளும் எவ்வளவோ இல்லாமல் போகலாம், இல்லையா? :(    மாங்கல்யம் தந்துநானே - இந்த மாங்கல்யத்தை   (புரியற தமிழில் மாங்கல்யத்தை நான் தந்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் :)    மம ஜீவன ஹேதுனா – என் வாழ்க்கைக்கு ஏதுவாக     கண்டே பத்னாமி - உன் கழுத்தில் அணிவிக்கிறேன்.    ஸூபஹே - சுபங்களின் வடிவாக இனி என்றும் எனக்கு சௌபாக்கியத்தையே தரப்போகின்றவளே!    த்வம் ஜீவ சரதா சதம்

No comments:

Post a Comment