Courtesy: Smt.Lakshmi Santhanam
ஒரு சமயம் பார்வதி தேவியார் பரமசிவனைப் பார்த்து, 'புத்திரதோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் யாது' எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கமும் அளித்தார்.
சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்:
க்லாம் - க்லீம் - க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ
ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாம
ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம்
யஸஸ்வினம்
பொருள்:
தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே!
இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா! நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!
மக்கட்பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேற்படி ஸ்லோகத்தை ஆழ்ந்த ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலையில் தினமும் 11 தடவைக்கும் குறையாமல் சொல்லி வந்தால், கட்டாயம் புத்திரப்பேறு உண்டாகும்.
10 வருடம் குழந்தையில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் குடியிருந்த, பெண்ணுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்தேன். முதலில் ஆண் குழந்தையும், அடுத்து பெண்ணும் பிறந்துள்ளனர்.
ஒரு பலகையில் விளக்கை ஏற்றி வைத்து, பக்கத்தில் ஒரு கிருஷ்ணர் படத்தை வைத்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொன்னேன். இதைச் சொன்ன பலரும் குழந்தைப் பேறு அடைந்துள்ளனர்.
THe english translation of the stotra is available in
ReplyDeletehttp://stotraratna.sathyasaibababrotherhood.org/k50.htm