புராண வைராக்கியம்; ப்ரசவ வைராக்கியம்; மசான வைராக்கியம்; ஞான வைராக்கியம் (பிரகலாதன்) பற்றி மிக மிக நகைச்சுவையாக கூறும் ஹரிதாஸ் சுவாமிஜி சொற்பொழிவு...கேட்க கேட்க பரமானந்தம் அல்லவா...!!!
முதன் முதலில்,பூலோகத்தில் ஹரி நாராயணா என்ற நாமம்தான் வந்தது ... இதை கொண்டு வந்தது நாரதர்..
நீ எப்படி வேண்டுமானாலும் இரு... ஆண்டவன் நாமத்தை நீ விரும்பி கூட சொல்ல வேண்டாம்... கேலியாகவே சொல்லு... பரவாயில்லை என்கிறார் ஹரிதாஸ் ஸ்வாமிகள்...பின்னாளில் மனம் தானாகவே மனம் ஒன்றுபட்டுவிடும்.
ஆகவே, நாம கீர்த்தனம் பாடுவோம்...
"படியெலாம்கடந்து சுத்த பிரம்ம வஸ்துவாய் இருந்து பஜனையால் மகிந்து தோன்றும் கருணை மூர்த்தி அவன் ...!!!"
பொருள் மேல் பக்தி, மனைவி மேல் பக்தி, வீட்டின் மேல் பக்தி, வங்கி டெபாசிட் மேல் பக்தி என்று பல பக்தி இருக்கு.,, ஆனால் ஐந்து வயது பிராயத்திலேயே பிரகலாதனுக்கு இருக்கும் நாராயணன் பக்தி நமக்கு 50 வயதானாலும் வந்து இருக்கிறதா என்று அழகாக கேட்கிறார் சுவாமிஜி...!!!
ஹிரன்யாட்சஹன் தம்பி., ஹிரண்யகசிபு பிறந்த வரலாறு...
தந்தைக்கு தந்தையாய் இருப்பவன் நாராயணன், தன் தந்தையின் பெயரை கூற மறுத்த பிரகலாதனின் வரலாறு...ஒரு சொற்பொழிவு ...
ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக, தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் அரக்க குணம் இருந்தால், அவற்றை விலக்கி,அனவரிடத்தில் அன்போடு பழகி, பார்க்கும் இடமெலாம் நீக்கமற அப்பரமன் இருக்கின்றான்; அனைவரிடத்திலும் இறைவன் இருக்கிறன் என்றெண்ணி,யாரையும் குறை கூறாமல், வசை பொழியாமல், எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி, பிரகலாதனைபோன்று பிடிவாதமான அசையாத பக்தி நமக்கும் உண்டாகட்டும் என ஆசிர்வதிக்கிறார் சுவாமிஜி...!!!
தெரிந்து இருந்தாலும், இயன்றால் இன்னொருமுறை கேளுங்களேன் ஹரிதாஸ் சுவாமிஜி மூலமும்... !!!
Click here --->>> ஹரிதாஸ் சுவாமிஜி
என் வழி தனி வழி என்கிறார்.
வழிபடும் தெய்வம் எதுவாயினும், அதில் திடமாயிருந்து, பிறவி பயன் எழுது என்று அறிவுறுத்துகிறார்.
ஜெய நரசிம்மா... ஸ்ரீ நரசிம்மா...!!!
"ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா"
No comments:
Post a Comment