Tuesday, September 13, 2011

காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்அருள்மொழிகள்-click the below linkகுரு 

knr

Thursday, 7 July 2011

காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும்கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும்தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள்தடியைப்போல் விழுவது தான் அதுஇந்த உடம்பு நமதன்றுஅவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்விபூதி இட்டுக் கொள்ளுதல்ருத்ராக்ஷம் அணிதல்ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம்பேர் ஏன் இல்லைஅடையாளம் ஏன் இல்லைமற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன்அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்ததுபேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறதுநமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறதுஎவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறதுலோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும்அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார்அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார்காமேச்வரனாக அருள் புரிகிறார்பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள்பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார்நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள்பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றனபதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம்ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டதுபதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம்பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள்அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டுஇரண்டு எழுத்துக்களாலான பெயர் அதுவேதங்களின் ஜீவரத்னம் அதுவேகோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அதுஅதை ஒருதரம் சொன்னால் போதும்வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம்சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானதுஅதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானதுஅதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானதுஅதுதான் ஸ்ரீருத்ரம்அதற்குள்ளும் 'நமசிவாயஎன்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறதுஅதன் மத்தியில் 'சிவஎன்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளனஇதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள்அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல்பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் 'சிவஎன்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
(
குறிப்புபஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்புஎனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம்கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம்அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாதுஅகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார்குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம்அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார்காளகூடவிஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார்சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11. பரமேச்வரன் ஓங்காரம்ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான்அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறதுஅதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர்அதில் 'சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தேஎன்று சொல்லப்பட்டிருக்கிறதுசிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம்ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும்ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறதுஅமரமும் அப்படியே சொல்லுகிறதுலோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறதுஅவன் மஹாபுருஷன்ப்ரம்ம சூத்திரத்தில் 'சப்தாதேவப்ரமிதஎன்று சொல்லப்பட்டிருக்கிறதுஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். 'கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?' 'காயத்ரி அர்க்காக்னி கோசரசம்பு:' எந்த வஸ்து காயத்ரிஅக்னிஅர்க்கன் (சூரியன்என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறதுசிவன் தான்காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரேசூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான்ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறதுஎனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும்ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள்அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறதுஅதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும்எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தைசெல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.

16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால் சரீர சரீரி பாவ சம்பந்தம்உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி பாவமும்இந்த உடலுக்கு உயிர் இருக்கிறதுஇந்த உயிருக்கு இன்னோர் உயிர் ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று சொல்வர்பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எதுஅம்பாள்தான். 'சரீரம் த்வம் சம்போ:' என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.

17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம்அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம்அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான்ஆகாசமும் நீதான்அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான்நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம்ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான்சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாதுசிவன் சரீரிநீ அவனுக்குச் சரீரம்சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறதுஇப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.

18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாதுப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும்பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும்அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம்கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும்யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.

20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும்மனதினாலும் வாக்கினாலும் 'சிவஎன்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும்நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும்த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும்நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டு வாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.

21. உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம்அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறதுஈசனை உருவமற்றவர்அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றனஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார்.

22. ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன் ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலங் கொள்ளுகிறார்மற்றொரு புறம் அழகே உருக்கொண்ட சுந்தரேச்வரராக அவர் காட்சியளிக்கிறார்அதே கடவுள் பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ மூர்த்தியாகத் தோன்றுகிறார்வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும் காட்சியளிக்கிறார்தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில் அந்த ஈசனே நடனமாடுகிறார்எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஞானத்தைக் கொடுக்கும் தெய்வமாக தக்ஷிணாமூர்த்தி வடிவத்துடன் அமர்ந்து மௌனத்தினால் சனகாதி முனிவர்களுக்கு அவரே உபதேசம் அருள்கிறார்இவைகளெல்லாம் பரமசிவனின் திருக்கோலங்கள்.

23. சுவாமி எங்கும் இருக்கிறார்அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம்எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லைசுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானாகெட்ட காரியம் செய்வானாஎங்கும் அவர் இருப்பது உண்மையேஅவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாதுஅவருடைய அருளைப்பெற வேண்டும்.

24. சூர்ய கிரணம் இருக்கிறதுஒவ்வொரு கிரணமும் நெருப்பேஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லைலென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறதுபூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறதுஅப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.

25. கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம்அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும்அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.

26. உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான்ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் 'பாலோன்மத்தவத்என்று சொல்லுவார்கள்பாலன் என்றால் குழந்தைஉன்மத்தன் என்றால் பைத்தியம்உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப்போகிற பித்தம்உன்மாதத்தை உடையவன் உன்மத்தன்ஈசுவரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயர்உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூசம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர்ஊமத்தம் பூவை அவன் தரித்துக் கொண்டிருக்கிறான்அதில் சிவனுக்கு அதிகப் பிரியம்உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டாவது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன் என்பது.

27. பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்றுஅவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம்வில்வம் மற்றொன்றுபஸ்மம் சத்ய ஸ்வரூபமானதுஅதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும்ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன்உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறதுஅதை எரித்தால் அது அழிவதில்லைசிவ ஸ்வரூபமும் அத்தகையதே.

28. ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம்ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள்ருத்ரனுடைய நேத்திரம் அதுஅதைத் தமிழில் 'திருக்கண்மணிஎன்று சொல்லுவார்கள்மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டுஇயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான்இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.

29. அறுபத்தி நான்கு கலைகள்பதினான்கு வித்தைகள்இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவைநான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவைமூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானதுயஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானதுமத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானதுஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானதுபஞ்சாக்ஷரத்திலும் 'சிவஎன்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவைவேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை 'சிவஎன்னும் இரண்டு அக்ஷரங்கள்பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது.

30. உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள்சிவன் மஹாபிதாநாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம்அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லைஉலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள்அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டுவைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.

31. 
சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள்நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டனஅதற்கு நாமே காரணம்நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும்வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும்இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும்பஸ்மதாரணம் அவசியம்பஸ்மம் சிவஸ்வரூபம்கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம்ருத்ராக்ஷதாரணம்சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம்வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்.
32. 
பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே சிவகாரியங்களைச் செய்துஉள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான்அப்படித்தான் பக்தி வரவேண்டும்சாந்தம் வர வேண்டும்சத்தியம் வர வேண்டும் என்றால் 'சிவசின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள்வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றனஇவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடுகின்றனஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறதுபுறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.
33. 
நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார்நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமாஅப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.
34. 
சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும்ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும்சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும்வேதத்தின் மத்யமணிக்குநடுநாயகமணிக்குஒப்பாக விளங்குகிற 'சிவஎன்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும்சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.
35. 
நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம்சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும்அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார்ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம்பஞ்சாக்ஷர ஜபம்உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம்வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
36. 
ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார்இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம்அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லைவிஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். 'சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.
37. '
வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போதுஎதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமிஎதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமிமிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறதுஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார்அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறதுசின்னதும் அவர்தான்பெரியதும் அவர்தான்சின்னதைக் காட்டிலும் சின்னதாகபெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார்அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர்ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.
38. 
சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார்அவருக்கு ஈசான்ய (வடகிழக்குதிக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார்ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார்அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணிகொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்துஅந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.
39. 
ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறதுபொங்குகிற ஆனந்தம் ஒன்றுஅடங்கி அனுபவிக்கின்ற நிலை ஒன்றுபொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி நடராஜாஅவர் சடையைப் பார்த்தாலே இது தெரியும்இப்படி இரண்டு பக்கமும் 'கிர்ர்என்று அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. 'விரித்த செஞ்சடையான்ஆகிவிடுகிறான்அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து '  உண்ருலுக்என்பதான பதினாறு சூத்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றனஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு சூத்திரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றனகூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.
ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந்திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும்படியான மூர்த்தி தக்ஷிணாமூர்த்திஇவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார்நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றனதக்ஷிணாமூர்த்திக் கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றனஅங்கே சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறதுஇங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதுஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார்ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்அங்கே ஆனந்தமூர்த்திஇங்கே ஞானமூர்த்தி.
40. '
சத் சித் ஆனந்தம்என்று நாம் கேட்டிருக்கிறோம்சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம்இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காதுதெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். 'சத்என்பது ஒரு புறம் இருக்கட்டும். 'சித்என்பது தான் ஞானம்தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர்ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம்ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்துஅடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள்ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம்தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.
41. 
பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும்இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும். 'இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும்ஒரு புல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, 'உனக்கு ஒரு வஸ்து இருக்கிறதுஎன்று சொல்கிற மாதிரி இருக்கிறதுஇப்படி அனேகம் மூர்த்திகள்.
42. 
பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டுஇரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அதுசகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பதுஅதுவே வேதங்களின் ஜீவரத்னம்கோயிலில் மஹாலிங்கம் போலவும்தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறதுஅதை வாக்கினால் சொல்ல வேண்டும்யார் சொல்ல வேண்டும்மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும்ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம்அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறதுமனிதன் அதைச் செய்யாவிட்டால் 'நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லைஇவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லைஎன்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான்ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும்அதை ஒரு தரம் சொன்னால் போதும்

 



--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

No comments:

Post a Comment