எப்போதும் சவாலான செயல்களை செய்ய விரும்பும் பெரும் செல்வந்தர் ஒருவர் கடற்கரையை சுத்தி பார்க்க போனார். அங்க போனவர் , பீச்-ல இருந்த படகை எடுத்து கடல்ல கொஞ்சம் தூரம் பயணம் செஞ்சு பாக்கலாம்னு தனியாவே கிளம்பிட்டார்.
நேரமோ மாலை ஆறு மணி . ஏற்கனவே இருட்டிடுச்சு. இருந்தாலும் ஒரு தைரியத்துல நம்ம ஆளு படகை செலுத்த ஆரம்பிச்சுட்டார்.
கொஞ்ச தூரம் போன உடனே மழை பெய்ய ஆரம்பிசுடிச்சு .....இருட்டு வேற ஆயிடுச்சு ....நண்பருக்கு என்ன செய்வதென தெரியவில்லை ... மழையுடன் பலத்த காற்று வேற வீச ஆரம்பிச்சுடிச்சு.....!
இவரோ...தைரியமாக படகை செலுத்த பலத்த காற்றில் படகு எதோ ஒரு திசையில் நகர்ந்தபடி இருந்தது .....
சுற்றிலும் இருள் ...படகோ திசை தெரியாத கடலில்...
.....திக்கு திசை இன்றி சென்ற படகு ஒரு மீனவ தீவில் தரை தட்டி நின்றது .
ஆர்வத்துடன் படகை விட்டு இறங்கி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , சற்று தூரத்தில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடக்கலானார்.
விளக்கு வெளிச்சம் தெரிந்த வீட்டை அடைந்தவர் , அம்மா ......அம்மா ......என அழைக்க ...ஒரு மீனவன் உள்ளே இருந்து எட்டி பார்கிறான் ... உங்களுக்கு யார் வேண்டும் ? என மீனவன் கேட்க ..இவர் தனது படகு பயணத்தை பற்றி விவரிக்கிறார்.
மீனவன் அவருக்கு இரவு உணவை அளிக்கிறார். (மெனு : மீன் குழம்பு , மீன் வறுவல் ). மீன் உணவு சுவையாக இருக்கவும் செல்வந்தர் மீனவரிடம் ,
மீன் நல்ல சுவையாக உள்ளது ...இதை பிடிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகியது ?
ஒன்றும் அதிக நேரம் எடுக்க வில்லை ...!
நீங்கள் ஏன் அதிக நேரம் எடுத்து நிறைய மீன்கள் பிடிக்க கூடாது ?
சிறிது நேரம் செலவு செய்து குறைந்த மீன்கள் பிடித்தாலே எங்கள் அன்றாட தேவைகளுக்கு போதுமானது .....!
மீன் பிடித்த நேரம் போக மற்ற நேரங்களை எப்படி செலவு செய்வீர்கள் ?
மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவோம் , கிராமத்தில் உள்ள மற்ற நண்பர்கள் வீடுகளுக்கு செல்வோம் , மதியம் ஒரு குட்டி தூக்கம் , மாலை நேரம் பாட்டு , ஆட்டம் என எங்கள் வாழ்கையை அனுபவிப்போம்.
மீனவர் தன் வாழ்கையை மிகுந்த மகிழ்ச்சியடன் அனுபவிப்பதாக கூறிக்கொண்டிருந்த வேளையில் ...இடைமறித்த செல்வந்தர் .....
நண்பரே... ...நான் அமெரிக்காவில் MBA படித்துள்ளேன் . அந்த படிப்பை பயன்படுத்தி உங்களுக்கு உதவ எண்ணுகிறேன் ...!
எப்படி ?
இனிமேல் நிறைய நேரம் செலவழித்து நிறைய மீன்களை நீங்கள் பிடிக்க வேண்டும் . அப்படி நிறைய மீன்கள் பிடிப்பதால் , நிறைய காசுகளுக்கு அதை விற்கலாம்.
அப்படி நிறைய காசுகளுக்கு விற்றால் ,அதை வைத்து மிக பெரிய படகு வாங்கலாம்.
பெரிய படகு வாங்கி ?
பெரிய படகு மூலம் நிறைய மீன் பிடிக்கலாம். நிறைய பணம் சேர்த்து இரண்டாம் படகு வாங்கலாம் , அப்புறம் மூன்றாம் படகு வாங்கலாம்.
இப்படி நிறைய படகு வாங்கி நிறைய பணம் சேர்க்கலாம். அப்புறம் மீன்களை இடை தரகர்களிடம் விற்காமல் , நேரடியாக ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு விற்கலாம் . அல்லது நீங்களே ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கலாம்.பின்னர் இந்த கிராமத்தை விட்டுவிட்டு நகரம் சென்று குடியேறலாம். அங்கிருந்து நீங்கள் மிக பெரிய நிறுவனத்தை நடத்தலாம்.
இதெல்லாம் நடக்க இன்னும் எவ்வளவு வருடம் தேவை படும் ?
ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்து வருடம் ஆகலாம்.
சரி.....அதுக்கு அப்புறம் என்ன செய்ய?
மீனவரே ...அப்புறம் உங்கள் தொழில் வளர வளர பணம் கொட்டும் ...அந்த பணத்தை வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். மில்லியன் , பில்லியன் என பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் .
சரி...பணமும் சேந்தாச்சு , அதுக்கு அப்புறம் என்ன செய்ய?
அடுத்ததா என்ன செய்யலாம்னா ......ஓய்வு எடுக்கலாம். எப்டின்னா ....கடற்கரை ஓரமா நல்ல வீடு கட்டி , மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம் , கிராமத்தில் உள்ள மற்ற நண்பர்கள் வீடுகளுக்கு போகலாம் , மதியம் ஒரு குட்டி தூக்கம் , மாலை நேரம் பாட்டு , ஆட்டம் என உங்கள் வாழ்கையை அனுபவிக்கலாம்.
இதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டே வந்த மீனவர் : " இப்போ நாங்க அதை தானே செய்துகொண்டு இருக்கிறோம் "
நாம் எதை தேடி ஓடுகிறோம்???

knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

No comments:
Post a Comment