Wednesday, February 24, 2010

Business. . . .!!

காட்சி ஒன்று:

ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் நடக்கும் உரையாடல்!

"மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்"

"நோ, டாடி, என் விருப்பப்படி என் திருமணம் அமைவது நல்லது. பெண்ணைத்
தேர்ந்தெடுப்பதை என்னிடம் விட்டு விடுங்கள்

"பெண் யாரென்று தெரிந்தால் நீ மறுக்க மாட்டாய்"

ஆர்வத்துடன் மகன் கேட்டான்: "யாரது டாடி!



"அப்படியென்றால் டபுள் ஓக்கே டாடி!"




காட்சி இரண்டு:

அடுத்து அந்தப் பையனின் தந்தை பில்கேட்ஸைச் சந்தித்துப் பேசுகிறார்

"உங்களுடைய மகளுக்கு என்னிடம் ஒரு நல்ல வரன் இருக்கிறது!"

"என் மகளுக்கு இப்போது திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை. ஒரு ஆண்டு
செல்லட்டும்."

"நான் சொல்லும் இளைஞன் உலக வங்கியின் துணைத் தலைவர்."

ஆச்சரியம் அடைந்த பில்கேட்ஸ், உற்சாகமாகச் சொல்கிறார் "ஆகா, சின்ன
வயதிலேயே உலக வங்கியின் துணைத் தலைவரா? அப்படியென்றால் எனக்குச்
சம்மதமே!"


காட்சி மூன்று:
பையனின் அப்பா, முடிவாக உலகவங்கியின் தலைவரைச் சந்திக்கிறார்.

"உங்கள் வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு அசத்தலாகப் பொருந்தக்கூடிய
இளைஞன் ஒருவனை எனக்குத் தெரியும். அழைத்து வரவா?"

"வேண்டாம். ஏற்கனவே அந்தப் பதவியில் இருவர் இருக்கிறார்கள்"

"ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில்கேட்ஸின் மாப்பிள்ளை!"

"ஓ..... அப்படியென்றால் உடனே பதவியளிக்க நான் தயார்!


இப்படித்தான் உலகலவில் முக்கியமான பேரங்கள் நடக்கின்றன!
knr

--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

No comments:

Post a Comment