Thursday, September 11, 2025

Reduce speech

*இன்றைய சிந்தனை*🙏🙏🙏🙏

சிந்தனை பெருக பெருக எண்ணம் உயரும்
எண்ணம் உயர உயர பேச்சு சுருங்கும்
பேச்சு சுருங்க சுருங்க செயல் சிறக்கும் 
செயல் சிறக்க சிறக்க புகழ் கூடும்      
புகழ் கூட கூட பொருள் சேரும்
பொருள் சேர சேர மகிழ்வு நிறையும்  
மகிழ்வு நிறைய நிறைய வாழ்வு மலரும்

வாழ்வு மலர மலர மமதை ஏறும் 
மமதை ஏற ஏற பேச்சு விரியும்
பேச்சு விரிய விரிய செயல் சுருங்கும்
செயல் சுருங்க சுருங்க புகழ் குறையும்
புகழ் குறைய குறைய செல்வம் கரையும்
 செல்வம் கரைய கரைய வாழ்வு இருளும்
 வாழ்வு இருள இருள சிந்தனை பெருகும்.....

*இது வாழ்க்கை எனும் வட்டம்*

மீண்டும் சிந்தனை பெருக பெருக.....

*ஆதலின் சிந்தித்து எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்*🙏🙏🙏🙏

No comments:

Post a Comment