Monday, August 11, 2025

Thirukannamangai temple


 
ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் கோயில் , திருக்கண்ணமங்கை 

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர் : பெரும் புறக்கடல்
தயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
தல விருட்சம் : மகிழ மரம்
தீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி   
ஊர்: திருக்கண்ணமங்கை 
மாவட்டம்: திருவாரூர் 
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் தரிசித்துள்ளனர்.

ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' எனும் பெயர் பெற்றது.

தேவர்கள் தேனீக்கள் வடிவில் புடைசூழ இத்தலத்தில் திருமகளை திருமால் திருமணம் செய்து கொண்டதால் திருமணத் தடைகள் நீக்கும் தலம்.

முக்தித் தலம்

ஒரு நாள் இரவு தங்கினால் கூட முக்தி கிடைத்து விடும் ஸ்தலம்.

பஞ்ச கிருஷ்ண தலங்கள் 

திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் அமைந்துள்ளன. 

பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.

தாயார் சன்னதியின் ஒரு புறம் உள்ள சாளரத்தில் தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு தட்சிணாயனம் உத்திராயணம் ஆரம்ப நாட்களில் தன் இருப்பிட சாளரத்தை மாற்றிக்கொள்கிறது.

லட்சுமிக்கு இங்கு திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

தர்ஷன புஷ்கரிணி: 
தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது என்ற பெயர் ஏற்பட்டது. 

தோல் வியாதிகள் நீக்கும் தலம் - 

சந்திரன் சாபம் விலகி பொலிவு பெற்ற தலமாதலால் தோல் வியாதிகளை நீக்கும் தலம்.

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.   

அமைவிடம் :

திருவாரூரில் இருந்து குடவாசல் மற்றும் கும்பகோணம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் திருக்கண்ணமங்கை உள்ளது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து திருக்கண்ணமங்கை அடையலாம்.

No comments:

Post a Comment