திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள்.
அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.
குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்
குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்
சில நிமிடங்கள் கரைந்தன...
தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.
குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார்.
சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார் அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும்
அதில் எலுமிச்சை மணம் அடித்தது
சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும்
ஒரு உற்சாகம் கிடைத்தது.
குருவே இது என்ன இலை...???"
"இதன் பெயர் எலும்மிச்சை புல்
சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது."
குருவே உங்களிடம் ஒரு கேள்வி
தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது."
புன்னகைத்தவாறே..."ம்.." என்றார் குரு
ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய
குரு அவசியம் தானா..???"
விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்"
விழிப்புணர்வு என்றால்...???"
நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா..???
அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா...???"
தெரியாது"
நான் வரும் வரை இங்கே அமர்ந்திருந்தாயே..
பார் உன் கால்களுக்கு அருகிலேயே அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது.
உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல்,
இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய்
விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்."
அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா..???"
விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை.
விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்"
அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா...???"
ஆம்.
அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது
உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.....
ஸ்ரீ ரமணா 🙏
No comments:
Post a Comment