*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*தொகுத்தவர்*
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
*8.ப்ரஹ்மானுபவம்*
ஆத்மக்ஞானியும்கூட லோக ஸங்கிரஹத்திற்காகவாவது கர்மாவை அனுஷ்டிக்கவே வேண்டும் என்று கீதாசார்யன் சொல்லியிருப்பதை நமது ஆசார்யார் நன்கு அனுஷ்டித்துக் காட்டிவந்தார். அவர் பஹிர்முகமாயிருக்கும் ஸமயம் நித்ய ஆஹ்நிக கர்மாக்களையும் மூர்த்திகளின் ஆராதனையையும் அவர் வெகு சிரத்தையுடன் நடத்துவார்கள்.
இவருடைய மஹிமையையும் ஆத்ம நிஷ்டையையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஒரு வங்காள தேசத்திய பிரபு சிருங்கேரி வந்திருந்த ஸமயம் ஆசார்யார் இவ்வளவு தீவிரமாய் ஈடுபடுவதைக் கவனித்து வந்தார். ஆஹ்நிகங்களிலும் ஸ்ரீசக்ர பூஜையிலும் இவர் காட்டிவரும் சிரத்தையை கவனித்தார். ஆசார்யார் எப்பொழுதும் ஸமாதிநிலையிலிருந்து உலகத்தை மறந்து இருப்பாரென்று நினைத்தார் போலும். நிர்குண பரப்ரஹ்மத்தில் லயித்திருப்பார் ஞானி என்று தான் நினைத்ததற்கு விரோதமாக ஆசார்யார் வெளிக்கர்மாவிலும் உபாஸனையிலும் அக்கறை காட்டுவது நியாயமாவென்று ஸந்தேஹித்தார். இதற்குத் தகுந்த ஸமாதானம் தேடியறிய வேண்டுமென்றிருக்கையில் ஸ்ரீமத் ஆசார்யாரிடமே பிரஸ்தாபிக்க ஸந்தர்ப்பம் கிடைத்தது.
பிரபு: வேதாந்தத்தில் சொல்லியபடி ஒருவனுக்கு ஆத்ம ஞானம் ஏற்படுமானால், அவர் கர்மாவிலாவது உபாஸனையிலாவது ஈடுபடுவது நியாயமாகுமா?
ஸ்ரீ.ஆ: அவர் வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?
இக்கேள்விக்கு எப்படி பதில் சொன்னாலும் தவறுதலாக ஏற்படுமென்று உணர்ந்துகொண்ட அப்பிரபு: அவர் ஏதேனும் செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. என் ஸந்தேஹம் இவ்விதம் ஏற்பட்டது. கர்மாவோ, ஈசுவராராதனமோ, வேதாந்த விசாரமோ எதுவாயிருந்தாலும் கர்த்ருத்வம் அதாவது 'நான் செய்கிறேன்' என்ற எண்ணம் இருக்க வேண்டுமல்லவா? ஆத்மஞானமென்பதில் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்திற்கு இடமன்னியில் "நான் செய்யாதவன்" அகர்த்தா என்பதல்லவா வேண்டும். இவ்விரண்டு பாவனைகளும் பரஸ்பர விரோதமாய் இருப்பதால் ஸமகாலத்தில் ஒருவரிடம் எப்படி இருக்க முடியும்?
ஸ்ரீஆ: வாஸ்தவம். பரஸ்பர விரோதமாயிருக்கும் இரண்டு அம்சங்கள் ஒரே ஆஸாமியிடத்தில் ஒரே ஸமயத்தில் இருக்க முடியாதுதான். இப்பொழுது, அகர்த்தா என்பது யார்?
பிரபு: ஆத்மாதான் அகர்த்தா.
ஸ்ரீ.ஆ.: ஸரி. நம் ஸித்தாந்தத்தை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது கர்த்தா என்பது யார் என்று சொல்லுங்கள்.
பிரபு:சரீரம், இந்திரியங்கள், மனஸ், புத்தி, இவைகள்தான் கர்த்தாவாகும்.
ஸ்ரீ.ஆ: ஆத்மா அகர்த்தா, கர்த்தா அனாத்மா, என்றல்லவா ஆகிறது?
பிரபு: ஆம்.
ஸ்ரீ.ஆ: இப்பொழுது கவனித்துப் பாருங்கள். நியாய விரோதம் எங்கே வருகிறது? கர்த்ருத்வமும் அகர்த்ருத்வமும் பரஸ்பர விரோதமாயிருந்தாலும் ஒரே இடத்தில் இல்லையே?
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*8.ப்ரஹ்மானுபவம்*
*Continuation from yesterday's posting*
அளவேயில்லை. ஸ்தம்பித்திருந்தோம். அந்த ஸர்ப்பம் ஸாவகாசமாக அக்கிண்ணத்திலுள்ள பால் பூராவையும் நக்கிவிட்டு, நிமிர்ந்து ஸ்ரீ சந்திரமௌலீசுவர லிங்கத்தைப் பார்த்துவிட்டு, ஸ்ரீமத் ஆசார்யாரையும் விடைபெற்றுக் கொள்வதுபோல் நிமிர்ந்து பார்த்துவிட்டு, வந்த வழியே மெதுவாகத் திரும்பிவிட்டது. ஆத்ம ஞானிக்கு எதனிடத்திலும் பயம் கிடையாது. ஆத்ம ஞானியிடத்திலிருந்தும் யாருக்கும் பயம் கிடையாது, என்று பகவான் கீதையில் (XII, 15) சொல்லியிருக்கிறார் அல்லவா?
இவ்விதம் மிருகங்கள்கூட ஆசார்யாரிடத்தில் நடந்து கொள்ளும்பொழுது எல்லா மனுஷ்யர்களும் அவரிடத்தில் அன்புடனும் பக்தியுடனும் நடந்து கொள்வதில் என்ன ஆச்சர்யம்? ஆஸ்திகர்- நாஸ்திகர், வித்வான்-பாமரன், தனிகர்-தரித்திரர். பாலர்-விருத்தர் முதலான யாவர்களும் அவருடைய திருஷ்டியில் பகவதம்சமேயாகும். மேலே கண்ட சில உதாஹரணங்களிலிருந்தே அவருடைய திருஷ்டியானது சென்ற காலம், நிகழ்காலம், வரும்காலம் எல்லாவற்றையும் விஷயீகரித்ததுடன் ஸாதாரண கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களையும் கிரஹிக்கக்கூடிய தன்மையுள்ளதென்பது வியக்தமாகும். அவருடைய மஹிமை தேசகால வரம்புக்கு உட்பட்டதல்ல.
பெங்களூர் காலடி விஜயம் செய்து 1940 ல் சிருங்கேரிக்கு ஸ்ரீமத் ஆசார்யார் திரும்பி வந்ததுமுதல் அந்தர்முகமாயிருக்கும் ஸமயங்கள் அடிக்கடியும் நீடித்தும் ஏற்பட்டன. அவரை நேரில் தர்சித்து அனுக்ரஹம் பெற்றுக் கொள்வது மிகவும் துர்லபமாகி விட்டது. சிருங்கேரி வித்யாபீடத்தில் இருந்து வருகிற மஹான்களை நாடி லௌகிகமாயும் வைதிகமாயும் வேண்டும் உதவியையும் உபதேசத்தையும் வழக்கமாய் பெற்றுவரும் சிஷ்யர்களுக்கும் ஸாதாரண ஜனங்களுக்கும் இது ஒரு பெரிய நஷ்டமாகவே தோன்றக்கூடியது. ஆனால் இப்பீடத்தை ஏற்படுத்திய ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாசார்யாரவர்களுடைய உத்தேசம் இக்கலிகாலத்திலும் பிரஹ்மாத்மைக்ய ரூபமான அத்வைத அனுபவநிலை ஸாதிக்கக்கூடியதுதான் என்பதைக் காட்டுவதற்காக என்பதை உணர்ந்தோமேயானால் அவ்வுத்தேசமானது இவ்வாசார்யாரவர்களால் நன்கு நிறைவேற்றப்பட்டு வந்தது என்பதையும் நன்கு உணர்வோம். அவருடைய பெருமையை நாம் நன்கு உணராததினால் அப்பெருமை குன்றாது.
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*8.ப்ரஹ்மானுபவம்*
Continuation from yesterday's posting
ஸ்ரீமத் சங்கரபகவத்பாதாசார்யார் எப்படி தம்முடைய ஆத்மானுபவத்திற்கு குறைவின்றி உலகத்தில் கலந்துகொண்டு தர்ம மோக்ஷ மார்க்கங்களை நிலைநிறுத்தினார்களோ, அப்படியே இவ்வாசார்யாரும் கருணை கூர்ந்து பஹிர்முகமாயிருந்து அனுக்ரஹித்திருக்கிறார்கள். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி முதற்கொண்டுநம் புண்ணிய பூமியில் தோன்றின மஹான்களைப்போல் இவரும் மௌனமாகவே இருந்துகொண்டு தம் ஆத்ம சக்தியை ஜகத்பூராவிலும் பரவும்படி செய்து லோக க்ஷேமத்தை செய்திருக்கிறார்கள். இந்தமாதிரி பெரியோர்கள் அவதரித்திருக்கும் காலத்தில் நாமும் ஜன்மமடையும்படி இருந்த மஹத்தான புண்ணியம் அவர்களை நெருங்கி அவர்களுடைய கருணாகடாக்ஷம் பெற்று கடைத்தேற வேண்டிய வழியில் நம்மைக் கொண்டுபோய் விட வேண்டுமென்று பகவானைப் பிரார்த்திப்போமாக. ஒரு க்ஷணம்கூட சாந்தியில்லாமல் ஜனங்கள் அலைந்து கொண்டிருக்கிற இக்காலத்தில் சாஸ்திரத்தில் கண்ட அத்வைத நிலையை நமக்கு ஸாத்தியமென்று காட்டி ஆத்மானந்தத்தைத் தேடும் ஸாதகர்களுக்கு வழிகாட்டியாயிருந்து வந்த இம்மஹானின் பெருமையை என்னவென்று சொல்ல?
No comments:
Post a Comment