வாழ்க்கையின் ஒவ்வொரு
விநாடியும் பகவான்தான்
நடத்துறான்னு தெளிவா புரிஞ்சுண்டு
அவன்கிட்ட
ஒப்படைக்கிறான் உத்தம பக்தன், முமூட்சு.......
ஞானியானவன் !
Driver கிட்ட காரை ஓட்டக்
குடுத்துட்டு
பின்சீட்ல ஹாயா.....உட்காரவேண்டியது தானே !
ரூட் அவனுக்குத் தெரியுமே ?
சும்மா.....
அவனோட வேலையில சதா குறுக்க நுழையறமா என்ன ?
எத்தனையெத்தனை ஜன்மா
யாருக்கு என்னவெல்லாம்
குடுத்தது,
எவரிடமிருந்து எதையெல்லாம் பெறனுமோ.....list
அவன்கிட்ட இருக்குப்பா......
பகவானும் இப்படித்தான், இந்த ரூட்லதான்.......
உன்னை கூட்டிட்டு போவேன்னு
சொல்லலயே.........
வழியில் பிரச்சனைனா வேற ரூட்ல
போறாப்போல........
எப்படி வேணா பகவானும் அழைச்சுட்டு
போகட்டுமே !!
இறங்கும் இடம் வரும்வரை
நிம்மதியா பின்சீட்டில் தூங்குவது போல.......
நிம்மதியா.....ஜபமோ, விசாரமோ
பண்ணுவோம்.....
மீதி அவன் பொறுப்பு !! ... .........Swamy Hyrudayananda
No comments:
Post a Comment