அனாபஸார ஜகந்நாதன் !
ஜெய் ஜெகந்நாத் !
ஜெய் பலராம் !
ஜெய் சுபத்திரா !
புரி க்ஷேத்திரத்தில், ஜ்யேஷ்ட பூர்ணிமா (சாந்திர மாஸ ஆனி மாத பௌர்ணமி) அன்று வேப்பமரத்தினால் ஆன ஜகந்நாத், பலராம், சுபத்திரா ஆகியோர் 1️⃣0️⃣ 8️⃣ குட தங்கக் கிணறு ஜலத்தினால் 💦 திருமஞ்சனம் (அபிஷேகம்) கண்டருளுவர். அதன்பின் அவர்கள் மூவரையும் குழந்தையாக 👶 பாவிப்பதால், அவர்களுக்கு ஜுரம், ஜலதோஷம் ஆகியவை வருவதால், 2வாரங்கள் அவர்களை அனவஸார க்ருஹம் என்று தனியறையில் இருக்கவைத்து கஷாயம், பழச்சாறு போன்றவை நிவேதனம் செய்யப்படும்.
அந்த சமயத்தில் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதியில்லை. நித்யம் செய்யவேண்டிய பூஜாமுறைகளும் அனவஸார காலத்திற்கு விசேஷ பூஜையாக மாற்றப்படும். இந்த 15நாட்கள் விசேஷ பூஜைக்காகவே அனவஸார பட்டி பகவான் தயாராவார்.
துணியில் வரையப்படும் தெய்வ உருவங்களை அனபஸார பட்டி பகவான் என்று அழைப்பர். பலராமனை அனந்தவாஸுதேவனாக 4 திருக்கைகளில், சங்கம் சக்கரம், ஏர்கலப்பை மற்றும் உலக்கல்கையோடும், சுபத்திரையை மாதா புவனேஸ்வரியாக 4 திருக்கைகளோடும், ஜகந்நாதனை அநந்த நாராயணனாக 4 திருக்கைகளிலும் சங்கம், சக்கரம், கதை, தாமரையோடும் வரைவர்.
பட்ட சித்ரா என்று ஒடிசாவில் விசேஷமான வகை ஓவியங்களாக இந்த மூர்த்திகள் 🖍️🎨 வரையப்பட்டு, அனவஸார காலத்தில் கோயிலில் மூலவ மூர்த்திகளின் பிரதிநிதிகளாக, பிரம்புத்தட்டியில் வைத்து வழிபடுவர்.
மூலவ மூர்த்திகள் பூரண அங்கங்களோடு இல்லாவிடினும், இந்த பட்ட சித்திரா பகவானின் சித்திரங்கள் 🎨பூரணமாக வரையப்படும்.
இவையெல்லாம் புரி கோயிலின் விசேஷ முறைகள். புரி கோயிலின் கிழக்கு வாசலான சிங்கத்வாரத்தில் இருக்கும் பதிதபாவன ஜகந்நாதன் மூர்த்தி சன்னிதியும் இந்த அனவஸார காலத்தில் மூடப்பட்டு அங்கேயும் இந்த அனவஸார பட்டி பகவான் மாட்டப்பட்டு பூஜை செய்வர்.
இந்த அனவஸார பட்டி பகவானை வரைவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் உண்டு. அவர்களுக்கு மட்டுமே இந்த கைங்கரிய பாக்கியம். இனி எங்காவது இந்த பட்டசித்திர ஜகந்நாதனைப் பார்த்தால், இந்த அனவஸார காலத்தையும் ஜகந்நாதனனின் லீலையையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
இந்த வருடன் ஜூலை 7ம் தேதி புரி ரதயாத்திரை.
கோயில் என்பது பல கலைகளையும், பல கலைஞர்களையும், அவர்கள் குலத்தையும் வாழவைக்கும் ஒரு அற்புதம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஜெய் ஜகந்நாத் !
ஜெய் பலராம் !
ஜெய் சுபத்திரா !
©குருஜீ கோபாலவல்லிதாஸன்
28.6.21, அனபஸார காலத்தில் எழுதியது

No comments:
Post a Comment