*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*
*திருப்பதி திருமலை - நேரம் அதிகாலை , நான்கு மணி*
*திருமலை வாசனுக்கு அன்றைய பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது*
*சிலையாக இருந்த திருமால் பேச துவங்கினார்*
*அர்ச்சகரிடம் , கேசவா அனந்த நம்பி எங்கே ?! (எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல் கேட்டார் திருமால் )*
*கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜ உடையாரின்* *உத்தரவின் படி தங்களுக்கு மலர் கைங்கர்யம்* *செய்வதற்கு பூக்கள் பறிக்க நந்தவனம்* *சென்றுள்ளார்* *ஸ்வாமி*
*திருமால் :- கேசவா , நீர் நந்தவனம் சென்று நம்பியை நான் அழைத்தேன் என்று உடன் அழைத்து வாரும்*
*கேசவன் :- ஆகட்டும் ஸ்வாமி*
*( நந்தவனம் சென்ற கேசவன் , நம்பி உன்னை ஸ்வாமி அழைத்து வர சொன்னார் என்று சொன்னார் )*
*நம்பி :- கேசவரே , சற்று பொறுங்கள் , இன்று ஸ்வாமிக்கு சூட வேண்டிய மலர்களை பறித்து முடித்ததும் கிளம்பலாம்*.
*கேசவன் :- ஆகட்டும் நம்பி , அரைமணி நேரம் கழித்து இருவரும் திருமாலுக்கு முன் நின்றனர்*
*திருமால் :- நம்பி , நான் உன்னை* *அழைத்ததும் வராமல் ஏன் அரை மணி நேரம்* *தாமதமாக வந்துள்ளாய் ?!* *கேசவன் , நான் அழைத்ததை உன்னிடம் சொல்ல வில்லையா ?!*
*நம்பி :- ஸ்வாமி , ஆனால் என் குரு ஸ்ரீ இராமானுஜ உடையார் எனக்கு இட்ட கட்டளை என்னவெனில் நீ தினமும் உங்களுக்கு மலர் கைங்கர்யம் செய்வது தான்*.
*அதை சிறிதும் பிசகாமல் முடித்த பின்பு தான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன் ஸ்வாமி என்று கூறி கொண்டே திருமாலுக்கு மாலை தொடுத்து சூடினார்*
*திருமால் :- சிரித்து கொண்டே , அதற்காக நான் அழைத்தால் கூட நீ தாமதமாக தான் வருவாயோ ?!*
*உன் குருவுக்கும் ஏன் இந்த ஈரேழு பதினான்கு லோகத்திற்கும் யாமே கடவுள் அதை அறிவாய் அல்லவா , நீ இப்பொழுது*.
*நம்பி :- சிரித்து கொண்டே , ஸ்வாமி நீங்கள் ஈரேழு பதினான்கு லோகத்தையும் காத்து அருள்வதால் உம்மை கடவுள் என்கிறோம்*.
*அது உமது பணி மற்றும் கடமை. அதைப் போலவே எமது குருவின் கட்டளைக்கு இணங்க , உமக்கு மலர் கைங்கர்யம் செய்வது எனது பணி , எனது கடமை*
*ஒரு கடவுளுக்கு தம் கடமை எவ்வளவு முக்கியமோ , அதே போல் , அதே அளவு ஒரு சீடனுக்கும் தன் குருவின் கட்டளை மிகவும் முக்கியம் அல்லவா. உமக்கு பூஜைக்கு நேரம் ஆகி விட்டது , நான் வருகிறேன் என்று நடையை காட்டினார் நம்பி*
*மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும் வழக்கம் போல் நம்பி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கச் சென்றார்*.
*திருமால் :- ஆதிசேஷனை பார்க்க , ஆதிசேஷன் ஒரு பூநாகமாக உருவெடுத்து நம்பி பூ பறிக்கும் பூவுக்குள் ஒளிந்து நம்பியின் கையை கடித்து மறைந்து விட்டான்*
*பூநாகம் கடித்ததும் கையில் இரத்தம் கசியக் கசிய பூக்களைப் பறித்து , அதில் தனது கையில் இருந்து வழிந்த இரத்தத்தை பூக்கள் மேல் படாமல் , பூக்களை பறித்து , ஆலயம் வந்து திருமால் முன் நின்று பூ தொடுத்தார்*
*திருமால் :- மீண்டும் பேச துவங்கினார்*
*நம்பி கையில் இரத்தம் வழிகிறது பார் , பற்று போட்டு பின் எனக்கு கைங்கர்யம் செய்யலாமே*
*நம்பி :- ஸ்வாமி , எனக்கு குருவின் கட்டளையே மிகவும் முக்கியம் பின்பு தான் அனைத்தும்*.
*தங்களுக்கு பூ பறிக்கும் போது , ஒரு பூ நாகம் என்னை தீண்டி விட்டது. அதனால் சிறிது இரத்தம் வேறொன்றும் இல்லை ஸ்வாமி*
*திருமால் :- சரி கடித்த நாகம் வல்லமையற்ற விஷமாக இருப்பதால் , நீர் மலர் கைங்கர்யம் செய்ய முடிந்தது*.
*ஒரு வேளை கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்தால் நீர் இறந்தல்லவா போயிருப்பீர்*.
*உமது குருவின் கட்டளையை எப்படி நீர் நிறைவேற்றுவீர்*
*நம்பி :- அப்போதும் என் குருவின் கட்டளையை நிறைவேற்றுவேன் ஸ்வாமி*
*திருமால் :- எப்படி ?!*
*நம்பி :- ஸ்வாமி , ஒரு வேளை தாங்கள் கூறியது போல் கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்து , நான் இறந்தால் கூட , என் குருவின் ஆசியுடன் உங்களுக்கு வைகுண்டம் வந்து கைங்கர்யம் செய்வேன் ஸ்வாமி*
*திருமால் விடாமல் ஒரு வேளை நான் நீர் வைகுண்டம் வர அனுமதிக்க விட்டால் ?! நீர் என்ன செய்வீராம் ?!*
*நம்பி :- ( சிரித்து கொண்டே ) நீர் யார் அய்யா ?! எமக்கு அனுமதி தராமல் போவதற்கு ?!*
*என் குருவின் ஆசி இருந்தால் , எம்மால் எங்கும் செல்ல முடியும்*.
*எல்லாம் செய்யும் வல்லமை பெற்றவர் எம் குரு*.
*எல்லாம் செய்யும் வல்லமை உடையவர் என்பதாலே , அவர் உடையவர் என்று அழைக்க படுகிறார்*
*மேலும் தாய் தந்தையைப் போற்றி காக்கும் பிள்ளைக்கும் , குருவின் கட்டளையை சிரம் மேற்கொண்டு சேவை செய்யும் சீடனுக்கும் மோட்சமும் முக்தியும் கிடைக்கப் பெற்று , வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று நீரே நியதி வகுத்துள்ளீர்*
*அப்படி இருக்க , நீர் வகுத்த நியதியை நீரே மீறமுடியுமா என்ன ?! என்று கேள்வி மேல் கேள்வி கேட்க , வாய் அடைத்து போனார்*
*திருமால் :- ம்ம்... இராமானுஜன் தனக்கு சரியான ஆளைத் தான் , மலர் கைங்கர்யம் செய்ய வைத்து உள்ளான் என்று நினைத்து கற்சிலைக்குள் உறைந்து போனார் திருமால்*
*குரு பக்திக்கு இந்தக் கதையை விட வேறு ஒரு சிறந்த சான்றும் உண்டோ ?!*
*(கு - இருட்டு*
*ரு - அகற்றுபவர்)*
*(குரு என்பவர் , நம் மனதில் உள்ள அறியாமை ஆகிய இருட்டை அகற்றுபவரே குரு என்பவர் ஆவார் )*
No comments:
Post a Comment