சந்தேகத்தால் அழிந்த துரியோதனன் :
அஸ்வந்தாமன்.இவர் பரத்வாஜ முனிவரின் பேரனும், குரு துரோனரின் மகனும் ஆவார்.
இவர் குருசேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக கௌரவப் பக்கத்தில் இருந்து போரிட்ட மஹாரதி ஆவார்.
, அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.
அஸ்வத்தாமனை அழைத்த கண்ணன் :
அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான். அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன்.
கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான்.அதை துரியோதனன் பார்ப்பான் என்று கிருஷ்ணருக்கு தெரியும். அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் பின்னர் கிருஷ்ணனின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.
சந்தேகத்தால் அழிந்த துரியோதனன் :
இதை பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான்.
இந்த சந்தேகத்தால், அவனை கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைத்தான்.இதுவும் கிருஷ்ணன் தந்திரமே.
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
#ammashagasraa#mahabharathamtamil#lordkrishna#tamiltravelvlog
No comments:
Post a Comment