Wednesday, June 19, 2024

Where does moon reside on amavasya?

அமாவாஸ்யை அன்று செடி கொடிகள் மரம் போன்றவற்றை வெட்டக்கூடாது என்கின்றனர்...
சந்திரன் அன்று  செடி கொடிகளில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது..

அதனால்தான் துளசியைக் கூட திருவாராதனத்திற்கு அன்று பறிக்க மாட்டார்கள்..

காரணம்....
சந்திரனுக்கு பதினாறு கலைகள் உண்டு...

பதினாறு கிரணங்கள் உண்டு..
தினமும் தேய்ந்து ....கடைசியில்,பதினைந்தாம் நாளில்..இரு கிரணங்களைக் கொண்டு  இருப்பவன்..

சந்திரன் அன்று தண்ணீரில் வசித்து பிறகு செடி கொடிகளில் வசிக்கிறான் !

ஸூர்யனின் கிரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு...

அதில் ஒரு கிரணத்தின் பெயர்.." அமா"

அன்று சந்திரன் சூர்யனின் கிரணமான  " அமா " என்பதில் வசிக்கிறான்..

" அமா " என்ற சூர்யனின் கிரணத்தில்  சந்திரன்  வசிப்பதால்   அன்று அமாவாஸ்யா என்று பெயர்...

" கலாத்வயா வஶிஷ்டஸ்து ப்ரவிஷ்டஸ் ஸூர்ய மண்டலம் !
அமாக்யரஶ்மௌ  வஸதி  ஹ்யமாவாஸ்யா  தத: ஸ்ம்ருதா !! " 

ஆதாரம் ...ஶ்ரீ விஷ்ணு புராணம்!!

அதைப்போலவே

ஒவ்வொரு திதிக்கும் ஒரு அதிதேவதை உண்டு...! 

நாம் பார்த்துகொண்டு இருக்கும்போதே ,
வெயில் காய்ந்துகொண்டு இருக்கும்,..! 

மழையும்  ஆங்காங்கே சில இடங்களில்மட்டும்  பொழியும்..!
மேகமும் இருக்காது..
வெயிலும் மழையும் சேர்ந்து இருக்கும்...

 மிகச்சிறிய நேரம் மட்டும்தான்...

உடனே மழைத்துளி நின்றுவிடும்..!

அதற்கும் விஷ்ணு புராணம் சொல்கின்றது..!

ஸூர்யன் ஆகாச கங்கையின் தீர்த்தத்தை தன் கிரணங்களால் வாங்கி நேரடியாக பூமியில் வர்ஷிக்கிறாராம்..!

கண்மூடி கண்திறப்பதற்குள் நின்று விடும்..

மேகத்திலிருந்து வருவதில்லையாம்..

அது மிகவும் பவித்ரமானதாம்..!

அதனால் அந்த புண்ய தீர்த்தத்தில்   நனைந்தால் கங்கா ஸ்நாந பலன் பெறலாம் என்கிறார் மஹரிஷி!

பாபங்கள் போய்விடுமாம்..
 🙏

No comments:

Post a Comment