Monday, May 20, 2024

Which Divya Desam Thiruppavai 9 speaks?

#திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்....பாகம் 1, பகுதி 9

#ஒன்பதாம்_பாசுரம்

      "தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய" என்பது திருப்பாவையின் ஒன்பதாம் பாசுரம்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே
                       (8-9-4)

      பெரிய திருமொழிப் பாசுரமாகும் இதில் "மறையாய் விரிந்த விளக்கு" என்று ஸேவித்து அக்காரக்கனியில் அந்வயிக்கிறார் திருமங்கைமன்னன். குன்றிலிடப்பட்ட தீபமானது சுற்றியிருக்கும் அனைத்து இடங்களிலும் பரவி ஒளிர்வதுபோல மாடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தீபமும் தன்னைச் சுற்றியிருக்கும் இடத்தினை ப்ரகாசமாக்கும்.

      ஆச்ரிதர்களை கரைசேர்க்க மார்க்கமாகும் விளக்காய் ஒளிரும் எம்பெருமானையே #தூமணி_மாடத்து_சுற்றும்_விளக்கெரிய பதங்கள் மூலம் பெரியாழ்வார் புத்ரி குறிக்கிறாள் என்பதனால் இந்தப் பாசுரம் #திருக்கடிகை (சோளிங்கபுரம்) திவ்ய தேசத்தினைக் குறித்தது.

               தொடரும்
         ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன், வைணவன்குரலில்

No comments:

Post a Comment