#திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்... பாகம் 1, பகுதி 4
#நான்காம்_பாசுரம்
ஆழிமழைக் கண்ணா என்று தொடங்கும் திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில், "ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்"அடியோங்கள் "வாழ உலகினில்" கருணை மழை "பெய்திடாய்" என்று அநுஸந்தேயம். இங்கு உலகினில் வாழ எனும் பதங்களின் மூலம் கர்மாக்களினால் உண்டாகும் மாயை விலகி சேஷி சேஷன் பாவத்தை ஆச்ரிதர்கள் உணரும்படியாக கருணை மழை பொழியுமாறு விஜ்ஞாபிக்கிறாள் நாச்சியார்.
கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின்தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவில் பள்ளிவிரும்பினான் சுறும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுரநகர் புகுதும்இன்றே
(திருவாய்மொழி 10.2)
நம்மாழ்வாரின் இந்த அருளிச் செயலினை ப்ரமாணமாகக் கொண்டு நோக்குவோமெனில், திருப்பாவையின் நான்காம் பாசுரம் கொண்டாடுவது திருவனந்தபுரம் என்னும் திவ்ய தேசத்தினையே என்பது நிரூபணமாகிறது.
தொடரும்
ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன், வைணவன்குரலில்
No comments:
Post a Comment