4) *உபதேஸம்) பெற்ற வாறும்*
ஸ்ரீ வேங்கடநாதர், தனது ஆசார்யன் அருளிச் செய்த ஸ்ரீமத் பாஷ்யார்த்தத்தைக் கொண்டு சித்தாந்த ப்ரவசனம் ( உபன்யாசம்) பண்ணிக் கொண்டிருந்தார்.
அப்போது வீரவல்லி க்ருஷ்ணமாச்சாரியார், கோமான்டூர் கேசவாச்சாரியார், அத்திப்பட்டு அலங்கசிங்கராஜா முதலிய சிலர் ஸ்வாமியிடம் சாஸ்திரங்களை கற்றுக்கொண்டு வந்தார்கள்.
பிறகு ஸ்ரீ தேசிகன் தம்முடைய அவதார காரியத்தை செய்ய இனி நேரம் தாழ்த்தக்கூடாது என்று திரு உள்ளம் பற்றினார் ( நினைத்தார்).
அதற்காக தம் ஆசார்யனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ வைணதேய ( கருட )மந்த்ரத்தை பலமுறை சொல்லி சித்தி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பினார்.
மற்றொரு நீர் கலக்காமல் நேரே சமுத்திரத்தில் சேரும் நதிக்கு மஹாநதி என்று பெயர்.
இப்படிப்பட்ட மஹாநதி, புண்ணியகிரி ( மலை), பகவத் க்ஷேத்ரம் எல்லாம் ஒரே இடத்தில் அமைந்து இருக்கும் இடம் தான் திருவஹீந்த்ரபுரம்.
ஆகவே இதுவே சரியான இடம் என்று நிர்ணயித்து திருவஹீந்திரபுரத்தை அடைந்தார்.
அங்கே ஓளஷதாத்திரியிலே ( ஒளஷத மலை) அழகிய சிங்கர் சந்நிதி முன்பே சோமஸவனம் போன்ற ஒரு அஸ்வத்த ( அரச)மரத்தின் கீழே எழுந்தருளி ஸ்ரீ கருட மந்திரத்தை பலமுறை ஆவ்ருத்தி செய்ய தொடங்கினார்.
1) முன் ஸ்ரீராமர் அவதாரத்தில் நாகப்பாச விமோசனத்திற்காக ராமன் நினைத்த பொழுது உடனே எழுந்தருளினா போலே இப்பொழுதும் ஸ்ரீ வைணதேயன் உடனே நேரில் வந்தார்.
2) மது கைடப்பர்களால் வேதம் திருடப்பட்டபோது, தன்னை மீட்டுக் கொடுத்த ஸ்ரீ ஹயக்ரீவன் மனதில் தோன்ற, உடனே ஒரு *ஹயக்ரீவ மூர்த்தியை ஸ்ரீ தேசிகன் திருக்கைகளிலே ஏளப்பண்ணி* *அருளினார்* . இன்றும் அந்த விக்ரஹம் பரகால மட ஸ்வாமிகளால் ஆராதனம் செய்யபட்டு வருகிறது.
3 *) ஸ்ரீ ஹயக்ரீவர் உடைய மந்திரத்தையும் உபதேசித்தார்*. தான் ஆசார்ய பதத்தைப் பெற்று தனது திருவுள்ள நினைப்பை நிறைவேற்றிக் கொண்டார்.
4) மேலும் ஸ்ரீ தேசிகன் மூலமாக இந்த சம்ப்ரதாயம் மேலும் வளர வேண்டும் என்பதை அறிந்து, இவர் மூலமாக தனக்கும் ஒரு பெருமை வேண்டும் என்று எண்ண தம் விஷயமாய் ஒரு ஸ்தோத்திரம் பண்ணி அருள வேண்டும் என்று கூறி அந்தர்தானம் ( மறைதல்) ஆனார்.
*நம பந்தக நத்தாய வைகுண்ட வஷவர்த்தினே*
*ஸ்ருதி சிந்தோத்பாத மந்தராய கருத்மதே !!*
சர்ப்பங்களால் சுற்றப்பட்டவராய் எம்பெருமானுக்கு வசப்பட்டவராய் வேதங்களாகிய பாற்கடலில் இருந்து அமுதத்தை போன்ற வித்தைகளை எடுப்பதில் மந் த்ரமலை போன்றவராய் உள்ள அழகிய சிறகுகளை உடைய கருடனுக்கு வணக்கங்கள் !!
நாமும் கருடனின் தியானத்தில் ஆழ்வோம்!
நாளை ஸ்வாமி ஹயக்ரீவனை ப்ரதியக்ஷித்த (கண்ட ) வாற்றை காண்போம்.
தாஸன்
No comments:
Post a Comment