Friday, February 24, 2023

Swadharmaa app

https://go.swadharmaa.com/app/V56a

This is an excellent app which every hindu must install.

Salient features:
Daily panchangam
Daily graha poaitions
Daily sandhyavandana kaalam as per your location
Excerpts from dharma sastram, neeti sastram bhagavad gita etc
Mantra bhagams from Veda in grantha
Library section which has lot of materials on homa vidhi, prayogas, when to do what,
Sakunam, nimittam etc

Presently it is in Tamil.

Created by Brahmasri Narayana Vajapayee Srirangam Trichy 
He is son of Brahmasri Sengalipuram Sunadararama deekahitar, a living authority on dharma sastrams..
Namaskarams 


Tuesday, February 14, 2023

ery Rare Trikotisha Sahasranama Stotram From Ventravana Mahatmyam

Dear All,

Greetings and Namaste. As Sri Maha Shivaratri falls on Saturday (18-Feb-2023), I am extremely delighted to share a heretofore unpublished Sahasranama Stotram on Lord Shiva  titled Sri Trikotisha Sahasranama Stotram from Chapter 30 of Vetravana Mahatmyam. This Sahasranama is on Lord Trikotisha of Vetravana - currently known as Thirukodikaval near Kumbakonam.

How I got this rare Sahasranama?
We learnt that there is a separate Sahasranama on Lord Trikotisha of Vetravana through an article in a Tamil newspaper in 2016. Since then we have been searching for it through multiple source but of no avail.Perhaps Lord Shiva wanted to put an end to this search.

Last week, I participated as a volunteer during the Mahakumbhabhishekam of Sout Bridge Mariamman Temple (oldest Hindu Temple in Singapore) and had the good fortune of interacting with several renowned Sivachariars from famous Kumbakonam temples. Sri. Subramania Sivachariar of Ganjanur Temple (Parihara sthalam for Shukra/Venus) mentioned that he got a manuscript of Trikotisha Sahasranama just a few days ago and wanted to see if it can be reproduced in Grantha Script prior to Mahashivaratri. I requested him to share a scanned copy of the manuscript which he shared on Saturday. By Lord's will, I was able to codify and distribute this today within 3 days of getting it. It was indeed a great fortune to get this just a week before Maha Shivaratri.

This is being reproduced from a scanned handwritten manuscript in Devanagari dated 1953. The manuscript does not mention the original Purana to which the Vetravana Mahatmyam belongs to. I presume the Vetravana Mahatmyam is much bigger as this Sahsranama is just one chapter (Chapter 30). Apparently this manuscript was found in a library in UK.

Disclaimer : As this is from a handwritten manuscript, I am not sure about a dozen namas that come in the Sahasranama. I have typed them as they appear in the manuscript.

About Vetravana/Thirukodikaval
Thirukodikaval is a very famous and one of the important Shiva Temples in Kumbakonam, Tamil Nadu. In Puranic times, it was known as Vetravana (forest of a variety of bamboo trees). As per the legend, Lord Vetravaneswarar was worshipped by 3 crores of Devas and Rishis and hence the name Trikotishwarar. Apparently Lord Trikoteeswara himself declared that if Mount Kailash and Thirukodikaval were to be placed on a balance, the latter would weigh more.

There is also another legend that Lord Venkatachalapati of Tirupati directed his devotees to first worship Goddess Tripurasundari here prior to visiting Tirupati. Even today, Goddess Tripurasundari is decorated and worshipped as Lord Balaji on Bhadrapada/Saturdays (Purattasi Sani).

The temple has many many more legends. One who worships Lord Shiva on Pradosham day gets the benefit of performing Ashwamedha Yajna. There are shrines for Lord Chitragupta and Lord Yama and is said to relieve one of the fear of death. Taking holy dip in river Cauvery adjacent temple during Krittika month is said to absolve all sins. Sage Bhaskaracharya, who hailed from the adjacent village Bhaskararajapuram, wrote Bhashyam (commentary) for Lalita Sahasranamam and inauguruated the same in this temple. Sage Agastya, Lord Rama, etc. are believed to have worshipped here.

May We Pray To Lord Trikotishwara with this rare and beautiful Sahasranama which repeats the work koTi (crore). May Lord Trikotisha bestow you good fortune multiplied by crores of times.

Please note that from now on, I am adding Grantha language at the request of Sivachariars. The extension is <FileName>-GRA.pdf,

Thanks & Regards,
K. Muralidharan Iyengar (Murali)

Saturday, February 11, 2023

Muruga and subramanya one and the same

ஏன்டா சங்கி நேற்றைக்கு" முருகனும் சுப்ரமணியனும்" ஒன்றுனு சொன்னியாமே?

ஆமா! சொன்னேன் அதுக்கு என்ன இப்போ?

ஆகச்சிறந்த ஆன்மீகவாதியான சுகிசிவமே முருகன் வேறு சுப்ரமணியன் வேறுனு சொன்ன பிறகு இருவரும் ஒன்றுனு நீ எப்படி சொல்லலாம்???

உங்க ஐயா என்ன ஐயா🤦500 ஆண்டுகளுக்கு முன்பே ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதரே முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும்போது நேற்று வந்த சுகி சிவம் சொல்லிட்டா நாங்கள் அதை மாத்திக்கணுமா? போவியா அங்குட்டு🤦

என்ன? அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்றாரா? என்னடா சங்கி உளறுற???

ஆமாடா அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்று பாடுகிறார். அதாவது,

"அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை - இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் - பெருமாளே"

- திருப்புகழ் (அருணகிரிநாதர்)

திருப்புகழில் இப்படி ஒரு வரியே இல்ல ப்ரோ! இது ஆரிய பார்ப்பனர்கள் இடைல சொருகிருப்பாங்க ப்ரோ!

ஓ.! அப்படியா சங்கதி? சரி வேற யாரு சொன்னா ஏத்துக்குவ ப்ரோ?

1000 ஆண்டுகளுக்கு முன்பு எதாவது இலக்கியங்களில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் சொல்லுங்க ப்ரோ!

தேவாரத் திருப்பதிகங்கள் முருகனை சுப்ரமணியன் என்று எங்காவது குறிப்பிட்டால் நம்புவியா ப்ரோ?

அதுல என்ன சந்தேகம்? திருமுறைகள் தமிழர்களால் எழுதப்பட்டது. ஆக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்க வாய்ப்பே இல்லை. கதை விடாதடா சங்கி..

"கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ்
சுப்பிர மண்ணியன் றானே"

- ஒன்பதாம் திருமுறை.

ஆத்தீ 😳😳😳 (சரி சமாளிப்போம்)

ஏன் இதுகூட இடைச்செருகலா இருக்க கூடாதா??? ப்ரோ 

ஏன்டா வெளக்கெண்ண திருப்புகழை ஏற்கமாட்டேன்னு சொல்ற. திருமுறைகளையும் ஏற்கமாட்டேன்னு சொல்ற நீ சுகி சிவமும் இந்த நாத்திக கும்பல்களும் சொன்னால் மட்டும் நம்புற யாரடா நீ?

ஏன்டா இரண்டு நூல்களை படிச்சிட்டு வந்து ப்லிம் காட்டுறியா??? இதெல்லாம் பிற்காலத்தில் ஆரியர்கள் திருத்தி எழுதியது. உன்னால் முடிந்தால் இதே காலத்தில் வெட்டப்பட்ட எதாவது கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் காட்டு பார்க்கலாம்.

சரிடா. கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருப்பதாகக் காட்டிவிட்டால் என்ன பண்ணுவ???

அது வந்து😓 முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பிரிவினை பேசுபவர்களை கல்லால் அடிக்கிறேன் சார்...

(ஒருவேளை காட்டிருவானோ 😴🚶)

எனில் உன்னை நீயே அடிச்சிக்க தயாராக இருந்துக்க ப்ரோ😁

9 ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் முருகன் கோவில் முகப்பில் வரகுண பாண்டியனால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. 205 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விழாக்கள் நடத்தவும், அமுது படையலுக்கும் நிவந்தமாக 1400 பொற்காசுகளை முதலீடாக வைத்து அதில் வரும் வட்டியைக் கொண்டு வருடம் தவறாமல் விழாக்கள் நடத்துவது தொடர்பான வழிமுறைகளையும் கூறும் மிக நீளமான கல்வெட்டு இது. இந்த கல்வெட்டின் மூன்றாவது வரியில் "சுப்பிரமணிய படாராருக்கு" என்று வெட்டப்பட்டுள்ளது. அனேகமாக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும் காலத்தால் மிக மூத்த கல்வெட்டு இதுவாகத்தான் இருக்கும். இந்த கல்வெட்டானது "South Indian Inscription volume 14" ல் தொகுக்கப்பட்டுள்ளது. உனக்கு வேணும்னா இது உண்மையா பொய்யானு தேடி படிச்சுக்க.!

எதே 😳😳😳

இதை எனக்கு தெரிந்த ஆய்வாளர் ஒருவரிடம் காட்டி உறுதிபடுத்திவிட்டு நாளைக்கு வரவா ப்ரோ?

நீ உறுதிபடுத்திக்க ப்ரோ. ஆனால் நாளைக்கு இந்த பக்கமா வந்துராத. இதுபோன்ற பிரிவினைவாதங்களை நக்கீரர், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற மகான்களே வைக்காதபோது சுகி சிவமும் உங்களைப்போன்ற சில ஞானிகளும் வைத்துவிட்டால் நாங்களும் பிரிவினை பேசணுமா.?

கெளம்புங்க கெளம்புங்க காத்து வரட்டும். எங்களுக்கு சுப்ரமண்யனும் ஒன்றுதான் சரவணனும் ஒன்றுதான்.இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் மக்களே!!!

-

Sunday, February 5, 2023

In kitchen you become deaf - Joke

Leo was a House keeper who had this habit of Drinking from his boss's Whiskey bottle and replacing it with Water.
The boss, John, did Suspect him but tolerated it for a while.
But when this became a Daily Routine, John decided to question Leo. So he shouted: "Leo?"
Leo Answered from the kitchen: "Yes boss?"
John: "Who Drank my Whiskey and added Water in the bottle?"
There was No Answer from the kitchen.
The boss Repeated the Question, still No Answer.
The Angry boss marched to the kitchen and threatened Leo, "What the hell is Going on? When I call your name you respond with 'Yes Boss' but when I ask you a Question, you Remain Silent. What is this !!!"
Leo Said: "It is like this. In the kitchen, You Can hear only your name being called. You don't hear anything else that is said, I Swear
John: "How is that Possible? All right, I will Prove you Wrong. You Stay Right here in the hall with Madam, I will go to the kitchen and you ask me a Question"
So the boss went to the kitchen.
Leo shouted: "Boss?"
Boss: "Yes Leo?"
Leo: "Who got the maid pregnant?"
No Reply.
Leo, Yet Again: "And who arranged for her Abortion?"
Once again Silence.....
John came Running from the kitchen and said: "You are right Leo. When one is in the kitchen, one can't hear anything but one's name. That's bloody Strange."😝😝 😄😄

Discourses Tamil and English

Astikas,

Over 1200 hours of discourses (in English & Tamizh) have been stacked topic-wise in this link: www.desikadaya.org/discourses

Kindly share this message with your dear ones, so that they know that such a compendium exists! 🙏🏽

Saturday, February 4, 2023

End of Prahlada

Chapala ekadashi


                           சபலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை பிறர் சொல்லி கேட்பதாலும் அல்லது படிப்பதாலும், ராஜ சூய யாகம் செய்த பலன் கிட்டும்.

                            சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர்/ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். "ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர்/ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்."

                              அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," பார்த்தா! நீ என் மீது கொண்டுள்ள பக்திபூர்வமான நட்பின் காரணமாக உன் கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறேன். இப்பொழுது நான் கூறப்போகும் ஏகாதசி விரத மஹாத்மியத்தைக் கவனமாக கேள்." என்றார். 

                            "ஹே அர்ஜூனா!, இந்த‌ ஏகாதசி விரதம் பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் ப்ரீதியானது. ஆதலால் இந்த‌ ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மகாவிஷ்ணுவின் அருளை எளிதில் அடையலாம். , மார்கழி மாத (டிசம்பர்/ஜனவரி) கிருஷ்ண பட்சத்தில் வரும் இந்த‌ ஏகாதசி சபலா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று வழிபட வேண்டிய தெய்வம் பிரபு நாராயணர். ஆகவே அன்று பிரபு நாராயணருக்கு விதிமுறைகளின்படி பூஜை, புனஸ்காரம் செய்து ஆராதிக்க வேண்டும்."

                           "ஹே அர்ஜூனா!, எப்படி நாகங்களில் ஆதிசேஷனும், பறவைகளில் கருடனும், கிரஹங்களில் சூர்ய, சந்திரர்களும், யாகங்களில் அஸ்வமேத யாகமும், தெய்வங்களில் பகவான் மஹாவிஷ்ணுவும் மேன்மையானதாகவும், உன்னதமானதாகவும் கருதப்படுகிறதோ, அதே போல், விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் சிரேஷ்டமானதாக கருதப்படுகிறது."

                     " பாண்டு நந்தனா!, ஏகாதசி விரதத்தைக் அனுஷ்டிப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானவர்களாகிறார்கள். இந்த‌ ஏகாதசி நாளன்று எலுமிச்சை, தேங்காய், ஆகியவற்றை நைவேத்யமாக சமர்ப்பித்து பகவான் நாராயணருக்கு பூஜை செய்ய வேண்டும்."

                     "சபலா ஏகாதசியன்று இரவு கண்விழித்து, விதிமுறைப்படி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணியமானது, ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்திற்கு இணையானதாகும்."

                       " ஹே அர்ஜூனா!, இப்பொழுது சபலா ஏகாதசியின் விரதக் கதையைக் கவனத்துடன் கேள். வெகு நாட்களுக்கு முன்பு, சம்பவதி நகரை, மஹிஸ்மதா
என்னும் பெயர் கொண்ட ராஜா, ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு புத்ரர்கள். அவர்களில் மூத்தவனான லும்பகன், மிகவும் பாபியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான். பிற பெண்களின் மீது மோகம் கொண்டவனாகவும், விபசாரி இல்லங்களிலும் தந்தையின் செல்வத்தை வியர்த்தமாக செலவழித்து வந்தான். 

                       தெய்வம், பிராம்மணர்கள், வைஷ்ணவர்கள் முதலிய நல்லோர்களை நித்தமும் நிந்தனை செய்வது அவன் வேலையாக இருந்து வந்தது. ராஜ்ஜியத்தின் பிரஜைகளும் அவனின் துர்நடத்தையைக் கண்டு மிகவும் வேதனையுடன் இருந்தனர். இளவரசன் ஆனதால் அனைவரும் பொறுமையுடன் அவனின் அராஜகத்தை வேறு வழியின்று சகித்து வந்தனர். ராஜாவிடத்தில் சென்று இளவரசனின் நடத்தையைப் பற்றி முறையீடு செய்ய யாருக்கும் துணிவில்லாமல் இருந்தது. 

                         ஆனால் இம்மாதிரியான தீய செயல்களை நெடுநாட்கள் மறைக்க இயலாது. அது போல், இளவரசன் லும்பகனின் துர்நடத்தை, அவனின் அராஜகம் எல்லாம் ராஜா 
மஹிஸ்மதாவுக்கு தெரிய வந்தது. அதை அறிந்ததும், ராஜா 
மஹிஸ்மதா மிகவும் கோபம் அடைந்து தன் மைந்தன் லும்பகனைத் தன் நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டான்.  

                               தந்தையே மகனை வெளியேற்றியதைக் கண்டு மற்றவரும் அவனை ஒதுக்கி விலக்கினர். 'என்ன செய்வது ?, எங்கு செல்வது ?', என்று அறியாமல் திகைத்து நின்றான். முடிவாக இரவில் தந்தையின் நகரான சம்பவதி நகரில் திருடுவது, கொள்ளை அடிப்பது என்று முடிவெடுத்தான். பகலில் ராஜ்ஜியத்தை விட்டு வெளியில் இருந்தான். இரவில் நகருக்குள் சென்று திருடுவது மற்றும் பிற தீய செயல்களை செய்து வந்தான். இரவில் நாட்டின் பிரஜைகளை அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். வனத்தில் எவருக்கும் கெடுதல் இழைக்கா சாதுவான பசு, பிராணிகளை கொன்று புசித்து வந்தான். சில சமயம் இரவில் திருடும் போது மாட்டிக் கொண்டாலும், காவல்காரர்கள் ராஜ பயத்தால் அவனை பிடிக்காமல் தப்ப விட்டனர். 

                     சில சமயம் நாம் அறியாமல் செய்யும் செயல் நம்மை பகவானின் அருள் கிருபைக்கு பாத்திரமாக்கும். அப்படி ஒரு சம்பவம் இளவரசன் லும்பகனின் வாழ்விலும் நடந்தது. அவன் எந்த வனத்தில் வசித்து வந்தானோ, அது பகவானுக்கு மிகவும் பிரியமான வனமாகும். அவ்வனத்தில் மிகவும் பழைமையான ஒரு அரசமரம் இருந்தது. அவ்வனத்தை மக்கள் தெய்வங்களின் வசிப்பிடமாக நினைத்து வந்தனர். 

                          அந்த பழைமையான அரசமரத்தில் கீழ் மஹா பாபியான இளவரசன் லும்பகன் வசித்து வந்தான். சில நாட்கள் கழித்து,
மார்கழி மாதத்தில் கிருஷ்ணபட்ச தசமி திதியன்று உடுக்க உடை இல்லாமல், குளிர் தாங்காது லும்பகன் மரத்தின் கீழ் மூர்ச்சையடைந்தான். குளிரை தாங்க இயலாது அவன் கை கால்கள் விறைத்துக் கொண்டன. அன்று இரவை மிகவும் கஷ்டத்துடன் கழித்தான். காலையில் சூரியன் வந்த பின்னரும் அவனின் மயக்கம் தெளியவில்லை.அவன் அப்படியே விழுந்து கிடந்தான். 

                    சபலா ஏகாதசி மத்தியானம் வரை துர்புத்தி, துர்நடத்தை கொண்ட லும்பகன் மயக்கத்தில் விழுந்து கிடந்தான். மத்தியான வேளையில் சூரியன் உச்சியில் வந்ததும், சூரியக்கதிர்கள் உடம்பில் பட, சிறிது நேரம் கழித்து மயக்கத்தில் இருந்து விழித்து எழுத்தான். தட்டு தடுமாறி எழுந்து, பசி மயக்கம் கண்களை இருட்ட, விழுந்து எழுந்து உணவைத் தேடி அலைந்தான். அன்று பிராணிகளை கொல்ல சக்தியில்லாததால், வனத்தில் கீழே விழுந்து கிடந்த கனிகளை சேகரித்து எடுத்துக் கொண்டு அரசமரத்தின் கீழ் வந்தான். அவ்வமயம் சூரிய அஸ்தமனம் ஆரம்பமாக இருந்தது.

                         பசியால் வாடினாலும், கனிகளை உண்ணாமல் இருந்தான். நித்தமும் பிராணிகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்டு வந்த இளவரசன் லும்பக்கிற்கு, கனிகள் உண்பது எவ்விதச் சுவையும் அளிக்கவில்லை. ஆகவே கனிகள் உண்பதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தான். 

                         அவன் அக்கனிகளை அரசமரத்தின் கீழ் வைத்து விட்டு மிகவும் வருத்தத்துடன் - " ஹே பகவானே,! இக்கனிகளை உனக்கு சமர்ப்பிக்கிறேன். இக்கனிகளால் நீ திருப்தி அடைவாய்" என்று கூறி விட்டு அழ ஆரம்பித்தான். இரவு அவனுக்கு நித்திரை வரவில்லை. இரவு முழுவதும் அழுது கொண்டு இருந்தான். இப்படியாக மஹாபாபியான இளவரசன் லும்பகன் தான் அறியாமல் சபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து முடித்தான். அவன் இரவெல்லாம் கண் விழித்து ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தை கண்டு பகவான் மஹாவிஷ்ணு மிகவும் ஆனந்தம் அடைந்து அவனின் அனைத்து பாபங்களையும் அழித்து, துர்கர்மாக்களிலிருந்து அவனை விடுவித்தார்.

                            காலையில் அழகான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு திவ்ய ரதமானது அவன் முன் வந்து நின்றது. அச்சமயம் ஆகாயத்திலிருந்து அசிரீரி -
" ஹே ராஜபுத்ரனே!, பகவான் நாராயணனின் அருளால் உன் அனைத்து பாபங்களும் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொழுது நீ உன் தந்தையார் வசம் சென்று ராஜ்யத்தை ஏற்று நடத்து." என்று சொல்லியது.

                          இளவரசன் லும்பகன் ஆகாயத்தில் அசிரீரி உரைத்ததைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து,. " ஹே பகவானே! உனக்கு என் வந்தனம். உன் திருநாமத்திற்கு என் வந்தனம். ஜெய் ஜெய் நாராயணா!" என்று உரத்தகுரலில் கூறினான். 

                        பின்னர் ரதத்தில் இருந்த அழகிய பட்டாடைகளை அணிந்து கொண்டு தன் தந்தையாரை அடைந்தான். தன் தந்தையிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். நடந்தவற்றை அறிந்து மிகவும் மகிழ்ந்த ராஜா மஹிஸ்மதா இளவரசன் லும்பகனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து விட்டு வனப்பிரஸ்தம் சென்றான். இளவரசன் லும்பகன் ராஜ்ஜியத்தை மிகவும் செம்மையாக சாஸ்திரங்கள் கூறியவழியில் ஆண்டு வந்தான். அவன் மனைவி மற்றும் பிள்ளைகளும் பகவான் நாராயணின் பரம பக்தர்களாக மாறினர். 

                          லும்பகனும் நன்கு ஆட்சி புரிந்து வனப்பிரஸ்தம் செய்யும் வேளை வந்ததும், நாட்டை தன் மகனின் கையில் ஒப்படைத்து விட்டு வனவாசம் பூண்டான். அங்கு நித்தமும் பஜனை, கீர்த்தனை, ஜபம் என்று பகவத் தியானத்தில் கழித்தான். முடிவில் பரமபதத்தை அடைந்தான்".

                         "ஹே அர்ஜூனா, எவர் ஒருவர் சிரத்தையுடனும், பக்தியுடனும் இந்த சபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவரின் அனைத்து பாபங்களும் அழியப் பெறுவதுடன் முடிவில் முக்தியையும் அடைவர். சபலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை பிறர் சொல்லி கேட்பதாலும் அல்லது படிப்பதாலும், ராஜ சூய யாகம் செய்த பலன் கிட்டும்."என்றருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய !!வாசுதேவாய நமோ நம !!

Friday, February 3, 2023

Parihara for each part of body - Periyavaa

ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. 
குப்பைத் தொட்டியான #மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே #த்யானம் செய்ய முடிகிறது. 
கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த #நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. 
குயுக்தி எல்லாம் பண்ணும் #மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது. 
இப்படியே, இந்த சரீரத்தால் – கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். 
சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக்கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-ஸோஷல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது. 
ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.

#தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். 
அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்......

#தெய்வத்தின்_குரல்...
#மஹாபெரியவா_சரணம்...

14 persons watching what you are doing

ஸ்ரீமத்பாகவதம்

நான் பிறர் அறியாமல் செய்வதையும் கூட பதினான்கு பேர் பார்க்கிறார்கள் என பாகவதம் கூறும்.

ஆதித்ய சந்த்ரௌ அனில: அனல: ச
த்யௌ பூமி: ஆப: ஹ்ருதயம் யம: ச‌ |
அஹ: ச ராத்ரி: ச உபே ச ஸந்த்யே
தர்ம: அபி ஜானாதி நரஸ்ய வ்ருத்தம் ||

சூரியன், சந்திரன், வாயு, அக்னி, வானம், பூமி, நீர்,, மனது, அவனவன், யமன்,  பகல், இரவு, காலை, மாலை சந்திகள், தர்மம் ஆக பதினான்கு தேவதைகள் நம் செய்கைகளை கண்காணிக் கின்றனர்.  எனவே மறைவு செய்யும் தவறுகள் பிறருக்குத் தெரியாது என நினைக்க் கூடாது.

Wednesday, February 1, 2023

Why betel leaf garland for Anjaneya?

அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது ஏன்?

🌟 அனுமனை வணங்காத இந்து பக்தர்களே இல்லையெனலாம். அந்தளவுக்கு அனுமனை வணங்கும் பக்தர்கள் உலகெங்கும் உள்ளனர். ஸ்ரீ ராமபிரானின் பக்தனாய் விளங்கி, அந்த ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார்.

புராணக் கதை :

🌟 அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசீர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

பலன்கள் :

🌟 வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மகாலட்சுமியின் ஸ்வரூபமான சீதையின் ஆசீர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லட்சுமிகரமாக நிறைவேறும் என்பது ஐதீகம்.

🌟 வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வணங்கினால் நமக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

🌟 வெற்றிலை மாலை சாற்றுவதால் சுபநிகழ்வுகளின் தடை நீங்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும்

"🙏அனுமனைத் தரிசிக்கும் அலங்காரங்களும் பயன்களும்"

அனுமனை வணங்காத இந்து பக்தர்களே இல்லையெனலாம். அந்தளவுக்கு அனுமனை வணங்கும் பக்தர்கள் உலகத்திலே உண்டு. ஸ்ரீராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை நீடித்துள்ளது. நாம் நினைக்கும் காரியம் வெற்றியாவதற்கு அதற்குத் தகுந்த அலங்காரத்தில் அனுமனைக் கண்டால் நாம் தேடிய வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு அலங்காரங்களையும் தரிசித்து அதற்குரிய பலன்களைப் பெறுவீர்களாக!

🌸முத்தங்கி சேவை அலங்காரம்!!!

💧தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம் :
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கீம் தவ பிரபோ
ராம தூத மஹாப்ராக்ஞ்ய
மம கார்யம் ஸாதயா💧

தரிசிப்பதின் பலன் : 
ராஜயோகம் கிடைக்கும்

☘பட்டு அலங்காரம் :-
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்💧

தரிசிப்பதின் பலன்: 
துன்பங்கள் விலகும்

🌸சந்தனக்காப்பு அலங்காரம்!!!
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧ஆஞ்சநேயம் அதிபாட லானனம்
காஞ்சநாத்ரீ கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸிநம்
பாவயாமி பவமாந நந்தனம்💧

தரிசிப்பதின் பலன்: செல்வ வளர்ச்சி உண்டாகும்

☘வெண்ணைகாப்பு அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்
மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்💧

வெண்ணைய் காப்பு சாற்றுவதின் பலன்

ஸ்ரீ ஆஞ்சநேயருடைய உடம்பு உக்ரமானது. அவரது உடம்பில் வெப்பம் அதிகமாக உள்ளதால், அவருக்கு வெண்ணெய் காப்பு இடுவதால், அவரின் உடல், மனம் குளிர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கின்றார்.

தரிசிப்பதின் பலன்:
வெற்றி கிடைத்திடும்

🌸சாதாரணத் தோற்றம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்(டு) அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்💧

தரிசிப்பதின் பலன் :
தடைகள் விலகிடும்

☘வடைமாலை அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி💧

அனுமானுக்கு வடைமாலை சாற்றுவதன் வகைகள்
பேருருவம் கொண்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை மூன்று வகையாக சாற்றப்படுகிறது. கூப்பிய கைக்கு மட்டும் வடைமாலை சாற்றுவது ஒருவகை. இடுப்பு வரை இரண்டு மடங்கின முழங்கைகள் வரை வடைமாலை சாற்றுவது இரண்டாவது வகை. தலையிலிருந்து பாதம் வரை வடைமாலை சாற்றுவது மூன்றாவது வகை. அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் வேண்டிக்கொண்டு வடைமாலை சாற்றவேண்டும்.

வடைமாலை சாற்றுவதின் பலன்
"மாம்ஸார்த்தே மாஷம் குர்யாத்'' என்னும் வரிகளுக்கு ஏற்ப 'மாஷம்' என்னும் பெயரினைக் கொண்ட உளுந்து தான்யத்திற்கு உள்ள சிறந்த குணம் யாதெனில், மாம்ஸத்திற்கு உள்ள பலமும் –  குணத்தினையும், உளுந்தும் கொடுக்க வல்லது. ஸ்ரீ ஹனுமான் இலங்கைக்குச் சென்று திரும்பி வருவதற்குத் தேவையான வீர்யத்தையும், திறனையும் பெறுவதற்காக உளுந்து தான்யத்தினை உண்டார் என்பது சான்றோர் வாக்கு. எனவே, சிறப்பான இந்த உளுந்து தான்யத்தினால் செய்யப்பட்ட வடைகளைக் கொண்டு மாலையாக ஹனுமனுக்கு ஸமர்ப்பிப்பதால் அவர் மகிழ்ந்து தன் பக்தர்களுக்கு உள்ள கஷ்டம், ரோகம், பிணி ஆகியவற்றினை அகற்றி நாம் சிரமமின்றி, ஆரோக்கியமாக வாழ வழிசெய்து அருளுவார்.
தரிசிப்பதின் பலன் : 
சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும்

🌸மஞ்சள் பட்டு அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே💧

தரிசிப்பதின் பலன்:
சுக்கிர கிரக தோஷங்கள் விலகும்.

☘திருமஞ்சன அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி💧

தரிசிப்பதின் பலன்:
ஆயுள் விருத்தி உண்டாகும்.

🌸வெற்றிலைக்காப்பு அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்
வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை
கல்வினைப் பெண்ணாய்ச் செய்தாள் கழலிணைப் போற்றுவோமே

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவதின் பலன்

சீதாதேவி அசோகவனத்தினில் சிறைபட்டிருந்த ஸமயம் ஸ்ரீ ஆஞ்சநேயர் அங்கு சென்று சீதையை வணங்கி, தான் ராமதூதன் என்பதை நிரூபித்து சூடாமணியினைப் பெற்றுக் கொண்டு ராமனிடம் திரும்ப எண்ணி சீதா தேவியிடம் ஆசீர்வாதங்களை வேண்டி நின்றான். அச்சமயம் சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து, வெற்றிலைகளைக் கிள்ளி ஆசீர்வாதங்களை அருளினாள். ஆதலால் ஹனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசீர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லக்ஷ்மிகரமாக நிறைவேறும் என்பது திண்ணம்.

தரிசிப்பதின் பலன் :
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

🌼பூ அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧சுட்டின னின்றனன் றெழுத கையினன்
விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர்
எட்டரு நெடுமுக டெய்தி நீளுமேல்
முட்டுமென் றுருவொடும் வளைந்த மூர்த்தியான்💧

தரிசிப்பதின் பலன் :
ஆரோக்கியம் பெருகும்.

☘துளசி மாலை போடுவதின் பலன்

இராமாவதாரத்தின் முடிவினில் "சீதாதேவி பூமியினில் சென்றுவிட்டால் மறுபடியும் என்னை எவ்வாறு அடைவாய்" என்று ஸ்ரீராமன் சீதையிடம் கேட்டான். அதற்கு சீதாதேவி, "நான் மறுபடியும் (திருத்துழாய்) துளசியாக வந்து உன் திருவடியை அடைவேன்" என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. எனவே, துளிசி இருக்குமிடத்தில் ஸ்ரீ ராமர் இருக்கின்றார். ஸ்ரீராமன் இருக்குமிடத்தில் ஹனுமான் இருக்கின்றார் என்ற ஐதீகத்தினைக் கொண்டு, துளசியை மாலையாக ஸ்ரீ ராமனின் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், ஹனுமான் மிக்க மகிழ்வுற்று வேண்டுவோருக்கு வேண்டியவற்றைத் தந்து அருள்வார்.

🌸இளநீர்
இளநீர் உடம்பின் வெப்பத்தை அகற்றி சக்தியைத் தரும் வல்லமையுடையது. ஹனுமான் 'என்றும் சிரஞ்சீவி ஆதலால், அவருக்கு இளநீர் அபிஷேகமோ அல்லது நிவேதனமோ செய்வதால், பக்தர்களை அனுக்ரஹித்து எவ்வித கஷ்டமும் இன்றி அதிக நாட்கள் இப்பூவுலகில் வாழ வரமளிப்பார்.

☘பாலபிஷேகம்
அனுமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும். நல்ல செய்திகள் கிடைக்கும்
பாலபிஷேகத்தை காணும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

💧ஆப்யாய சுஸமேதுஸ விஸ்வத சோமவிருஷ்ணியம்
பாவவான் வாச சங்கதே💧

🌺குளிர்ச்சியான தயிரை அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் அனுமன் மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார். தயிரை அபிஷேகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும்.

🌺அனுமானுக்கு நல்லெண்ணை காப்பு சாற்றுவதன் மூலம் குளிர்ச்சி தரும். அவரும் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை.

🌺எலுமிச்சம்பழ மாலை சாற்றுவதன் பலன்
எலுமிச்சம் பழம் ராஜகனி. புள்ளியில்லாத எலுமிச்சம்பழமே சிறந்தது. எலுமிச்சம் பழத்தை அனுமானுக்கு மாலை சாற்றினால் திருஷ்டியினால் உண்டாகும் கோளாறுகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

"ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்.
|| *ॐ* ||
        " *सुभाषितरसास्वादः* "
------------------------------------------------------------------
  " *प्रहेलिका* " ( कोडे ) ( ९५ )
---------------------------------------------------------------------
  *श्लोक*---
    "  एकपादा  चतुःशृङ्गा 
     तेषामुपरि  मस्तकम् ।
कृष्णा ,  तीक्ष्णरुचिः  क्षुद्रा 
     ताम्बूलोपरी  शोभते ।।
-------------------------------------------------------------------------------
*अर्थ*-----
  एक  पैर  है  और  चारशृंग  है  और  उसके  उपर  मस्तक  है ।
तीक्ष्ण  रुचिवाली  हूँ ,  काली  हूँ ।  छोटी  भी  हूँ  और  ताम्बूल  के  उपर  शोभीत  रहती  हूँ  ।
तो  मैं  कौन  हूँ  ?
----------------------------------------------------------------------------
*गूढ़ार्थ*-----
लोंग
-----------------------------------------------------------------------
*卐卐ॐॐ卐卐*
---------------------------
*卐卐ॐॐ卐卐*
------------------------------
डाॅ . वर्षा  प्रकाश  टोणगांवकर 
पुणे /   महाराष्ट्र 
---------------------------------

Nama vaibhavqm

நாம வைபவம்

1.வசிஷ்ட ஸ்ம்ருதி

க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் 

2.விஸ்வாமித்திர ஸ்ம்ருதி

விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|
கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை

கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது 

3.ஜபாலி ஸ்ம்ருதி

ஹரேர் நாமபரம் ஜாப்யம் த்யேயம் கேயம் நிரந்தரம்|
கீர்த்தனீயஞ்ச ஸததம் நிர்வ்ருதிம் பஹுதை சதா

மோக்ஷத்தை விரும்புகிறவன் அனவரதமும் ஹரி நாமத்தையே ஜபம் செய்ய வேண்டும். ஹரி நாமத்தையே த்யானம் செய்ய வேண்டும் 

4.காலவ ஸ்ம்ருதி

ஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்
விமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம்

ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் 

நாமமே பலம் நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

Advaita in pancharatra agama

=============================== 
'Pashupatas and Pancharatrikas worship the same Ishvara' says Bhagavan  Sureshvaracharya 
===============================
According to Advaita Sampradaya,  the one and the same Parabrahman assumes various forms to bless the sincere upasakas. Says Shri Acharyapada Shankara, 

स्यात्परमेश्वरस्यापीच्छावशान्मायामयं रूपं साधकानुग्रहार्थम्  (Brahma Sutra Bhashya 1.1.20)

Hence, in the Sampradaya, various upasya forms like Shiva,Vishnu,Surya,Devi etc are beheld as the same Parabrahman. Bhagavan Sureshvaracharya ji and Tikara Anandagiri Acharya ji re-iterate the same principle in their works. 

 In his Brihadaranyaka bhashya vartika, Shri Sureshvaracharya ji clearly states that the Brahman, the Antaryami, though essentially devoid of forms and gunas, appears to be endowed with form. This one Ishvara is worshipped by Pancharatrikas, Pashupatas, Hairanyagarbhas and others. 

अंतर्यामी परः साक्षादशरीरोगणोद्वयः ।
विलक्षणोऽतो विज्ञेयः पृथिवीदेवतात्मनः ॥३३॥

[The Antaryâmi, is the Superior, Directly available, Bodiless, A-guna (nirguna), without a second.
Therefore He is to be known as distinct from the prthvidevatà (whom he controls).]

स्वतस्त्वकरणोऽदेहो निर्गुणोऽभेद एव च ।
चिदाभासस्वमोहोत्थकार्यैस्तद्वानिवेक्ष्यते ॥३७॥

[By itself, the antaryāmi, is without any organs, bodiless, nirguna, with no difference whatever. Owing
to the delusion that one has organs, body, etc. the antaryāmi appears to be one endowed with body, etc.]

चतुर्धा प्रविभज्यैनं सात्वताः पर्युपासते ।
तथा हैरण्यगर्भीयास्तथा पाशुपतादयः ॥३८॥ ( Vartika on Brihad.Up 3.7)

[This one do the Sattvatas worship after having divided him into four parts, similarly (do the) worshipers of Hiranyagarbha and similarly, the Pasupatas and others.]

Thus, in the vision of Bhagavan Sureshvaracharya, all the upasaya forms are the varied manifestations of the same Brahman. 

Commenting on the above words of  Bhagavan Vartikakara, Shri Anandagiri ji quotes verses from Paancharatra , Shaivagama and states that the said schools worship the same Antaryami per their respective principles. Acharya Anandagiri ji also states that by the word 'adi' in the verse of Vartika (verse 38), all the Seshvaravaadis are suggested.  Thus, from the Vartika and its tika, we can gather that per Advaita siddhanta , the upasya forms of various schools like Pancharatra, Pashupata, Soura, Shakta, Ganapatya etc , are ultimately regarded as the one Brahman only. 

The image of the Vartika and it's tika has been attached below. Based on a quick search, I could track the quoted verses ( numbered 1 and 2 in the image) to the following Agamaik texts : 

2. Raurava Agama, 10 th chapter ( on Vyoma  vyapi mantra) https://www.himalayanacademy.com/view/raurava-agama-vidya-pada

Bhagavan Nama - Chaitanya mahaprabhu

🌹🌺"" *கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஸ்ரீ ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம்----- என கூறும் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு--- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹🌺"விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால், கோடிக்கணக்கான தீர்த்த யாத்திரை ஸ்தலங்களை விஜயம் செய்த பலனைப் பெறலாம்." - என கூறுகிறது வாமன புராணம்.

🌺"கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம் என கூறுகிறார் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு

🌺ஓர் உடை பழையதாகும்போது, அதை அகற்றிவிட்டு வேறொன்றை அணிகிறோம். அதுபோல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக்கொள்கிறது.

🌺தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம் பெயர்கிறது.

🌺அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில்தான் உள்ளது.

🌺மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சிபெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும் நாய்களையும் பன்றிகளையும் போல நாம் வாழ்வை வீணடிக்கக் கூடாது. இதுவே அறிவுரை.

🌺பூனை, நாயின் உடலைப் போல் நம் உடலும் அழியக்கூடியதென்றாலும், நாம் இந்த வாழ்வில் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைய முடியும். நாம் கடவுளின் அம்சம்.

🌺ஆனால் எவ்வாறோ இந்த பௌதிக வாழ்வில் விழுந்துவிட்டோம். தற்போது மீண்டும் இறைவனைச் சென்றடைவதற்கான வகையில் நம் பரிணாமம் அமைய வேண்டும். அதுவே மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.

🌺அந்த மிகவுயர்ந்த பக்குவநிலை அடைய ஸ்ரீ விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால் எளிதில் அடையலாம், நாம் எல்லோரும் அடைய எடுத்த சிறு முயற்சியே *இந்த ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள்* 🙏🏼 

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺




🌺🌹 *In today (21.12.22) storylines of Sri Krishna - "🌺 The most powerful word of Sri Krishna magamantra chanting is very important ..🌺.....that can be seen 



🙏🌹🌺 **Jai Sri Chaithanya Gurumaharajki  Jai* 🌹🌺🙏🏼🌹

Kuchi ice - periyavaa

*🌷குச்சி ஐஸ் வாங்கித் தரியா?"-பெரியவா*

சொல்லுங்கோ...நானே வாங்கித் தர்றேன்--துடுக்கான பணக்கார வீட்டு பெண் குழந்தை

ஏழை வீட்டு இரண்டு பெண் குழந்தைகளும்,பணக்கார வீட்டுக் குழந்தையும் ஒரு சேர ஐஸ் சாப்பிடும் அழகை,வேடிக்கை பார்த்த பெரியவாளின் ஆனந்தம்

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-பெரியவா பெரியவாதான்.

குழந்தைகள் என்றாலே, மகா பெரியவாளுக்கு அத்தனை இஷ்டம்.அவர்களைத் தன் அருகே காந்தம் போல் இழுத்து, அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார்.

அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள் மயங்கிப் போய் விடும். குழந்தைகளுக்குக் கொடுப்பற்கென்று மகா பெரியவாளிடம் எப்போதும் கல்கண்டு ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை மகா பெரியவா, காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீமடத்தின் வாசலில், பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு குழந்தை (நாலைந்து வயது இருக்கலாம்) ஒன்று, குச்சி ஐஸைக் கையில் வைத்துக்கொண்டு ரசித்து,சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகா பெரியவா, வாசலில் நின்று கொண்டு, இந்தக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிடும் அழகைப் பார்த்து, மேலும் நகராமல் அப்படியே நின்று விட்டார். ஆனால்,குழந்தை வேறு எங்கோ பார்த்தபடி ஐஸ் நக்கிக் கொண்டிருந்தது.

ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத் தன் பக்கம் திருப்பிய மகா பெரியவா, "என்ன ஐஸ் சாப்பிடறியா?" என்று மழலை பாஷையில் கேட்டார்." ஆமா..." என்று மழலையில் துடுக்கத்தனமாகப் பதில் சொன்ன குழந்தை, " இருங்கோ.. ஒங்களுக்கும் ஒரு ஐஸ் வாங்கித் தரட்டா?" என்று ஆர்வ மிகுதியில் கேட்டு விட்டது

மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருந்த சிப்பந்திகளும், மகானைத் தொடர்ந்து வந்த ஒரு சில பக்தர்களும் அந்தக் குழந்தையை அடக்கும் வகையில் ஏதோ சொல்ல வாய் திறக்க...அவர்கள் அனைவரையும் கை தட்டி, 'ஸ்ஸ்ஸ்..!" என்று அடக்கி விட்டார் மகா பெரியவா.

தான் கேட்ட கேள்விக்கு மகா பெரியவா ஏன் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறார் என்று யோசித்த குழந்தை, தான் குச்சி ஐஸ் வாங்கித் தந்தால் மகா பெரியவா சாப்பிட மாட்டார் போலிருக்கிறது என்று தீர்மானித்து விட்டது. உடனே, மகா பெரியவா மேல் கோபம் கொண்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. ஆனாலும் ஐஸை நக்கிச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

இந்த ரசமான காட்சிகளை மகா பெரியவா உட்பட, அங்கு கூடி இருந்த அன்பர்கள் பலரும் ரசிக்கத்தான் செய்தார்கள்.

மீண்டும் ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத் திருப்பி, " என்ன குழந்தே..கோபமாயிட்டே போலிருக்கு.. நான் எனக்குதான் வேண்டாம்னு சொன்னேன். சரி...நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ் வாங்கித் தர்றியா?" என்று மிகவும் சாந்தமான குரலில்,அந்தக் குழந்தையின் முகம் கோணாத வகையில் அமைதியாகக் கேட்டார் மகா பெரியவா.

இந்தக் குழந்தையின் பெற்றோர் அநேகமாக, ஸ்ரீமடத்துக்குள் மகா பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. குழந்தை ஐஸ் கேட்டதால், கையில் காசைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள் போலிருக்கிறது. தனக்கு ஐஸ் வாங்கியது போகக் கையில் கொஞ்சம் காசு மிச்சம் வைத்திருந்தது.

மகா பெரியவா கேட்டதும், அந்தப் பெண் குழந்தையின் முகத்தில் ஒரு சந்தோஷம்."சொல்லுங்கோ..நானே வாங்கித் தர்றேன்" என்றது

உடனே ஸ்ரீமடத்தில் அப்போது பணியில் இருந்த மேலே சொன்ன பணியாளரின் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வரச் சொன்னார். ஒரு சிப்பந்தி ஓடிப் போய்,ஸ்ரீமடத்தின் உள்ளிருந்து அந்த இரு பெண் குழந்தைகளையும் சட்டென்று அழைத்து வந்தார்.

மகா சுவாமிகள் அருகே அவர்கள் வந்தவுடன், "தோ இந்த ரெண்டு பேர்தான் நான் சொன்னவா.இவாளுக்கும் குச்சி . ஐஸ் வாங்கிக் கொடேன் சாப்பிடட்டும்" என்று சொல்ல, அந்தப் பணக்கார வீட்டுப் பெண் குழந்தை வாசலின் அருகே நின்று கொண்டிருந்த ஐஸ் வண்டிக்கு அருகே ஓடிச் சென்று, வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது

பணியாளரின் இரண்டு குழைந்தைகளும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க அந்த குச்சி ஐஸை வாங்கிச் சப்பி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

மகா பெரியவா முகத்தில் அப்படி ஓர் ஆனந்தம்.பணக்கார வீட்டுக் குழந்தையும்,ஏழையின் இரண்டு குழந்தைகளும் ஒரு சேர ஐஸ் சாப்பிடும் அழகை, ஒரு சில நிமிடங்களுக்கு நின்று வேடிக்கைப் பார்த்தார் மகா பெரியவா.

Jaya Jaya Shankara hare hare Shankara

Dont argue with donkeys - Positive story

Fable: DON'T ARGUE WITH DONKEYS

The donkey said to the tiger:
- "The grass is blue".

The tiger replied:
- "No, the grass is green."

The discussion heated up, and the two decided to submit him to arbitration, and for this they went before the lion, the King of the Jungle.

Already before reaching the forest clearing, where the lion was sitting on his throne, the donkey began to shout:

- "His Highness, is it true that the grass is blue?".

The lion replied:
- "True, the grass is blue."

The donkey hurried and continued:

- "The tiger disagrees with me and contradicts and annoys me, please punish him."

The king then declared:

- "The tiger will be punished with 5 years of silence."
The donkey jumped cheerfully and went on his way, content and repeating:

- "The Grass Is Blue"...

The tiger accepted his punishment, but before he asked the lion:

- "Your Majesty, why have you punished me?, after all, the grass is green."

The lion replied:
- "In fact, the grass is green."

The tiger asked:
- "So why are you punishing me?".

The lion replied:

- "That has nothing to do with the question of whether the grass is blue or green. 

The punishment is because it is not possible for a brave and intelligent creature like you to waste time arguing with a donkey, and on top of that come and bother me with that question."

The worst waste of time is arguing with the fool and fanatic who does not care about truth or reality, but only the victory of his beliefs and illusions. Never waste time on arguments that don't make sense... 

There are people who, no matter how much evidence and evidence we present to them, are not in the capacity to understand, and others are blinded by ego, hatred and resentment, and all they want is to be right even if they are not.

When ignorance screams, intelligence is silent. Your peace and quiet are worth more.... *

Bodhayana amavasai tarpanam sanskrit