Saturday, June 25, 2022

Raga & dvesha -HH Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

வாழ்க்கையில் தனக்கு ஒரு சில பொருள்கள் தான் அவசியம், மற்றவை அவசியம் அல்ல என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். தனக்கு அவசியமான பொருள்களின் மீது ப்ரியம் என்பதையும் தனக்கு வேண்டாதவை மீது வெறுப்பு என்பதையும் அவன் ஸ்ருஷ்டித்துக் கொள்கிறான். இந்த ராகத்வேஷத்தால் கஷ்டப்படுகிறான். 

உண்மையாக, விரும்பக்கூடியவை வெறுக்கக்கூடியவை என்று எதுவும் கிடையாது. எல்லாம் மனதால் உண்டாக்கப்பட்டது. இதை அவன் புரிந்து கொண்டால் அவன் ராகம் அல்லது த்வேஷம் ஆகியவை எதற்குமே இடம் இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் அவன் கஷ்டப்பட மாட்டான். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்

 நம் இந்திரியங்களுக்கு இந்திரிய பொருள்கள் மீது விருப்பு-வெறுப்பு உண்டு. ஆனால் ஒருவன் அவைகளின் கட்டுக்குள் வரக்கூடாது

 பற்றுதல் இல்லாத மனிதனுக்கு இவ்வுலகில் எதற்காகவும் விசேஷ விருப்பம் இருக்காது. அப்படிப்பட்ட மனிதன் எல்லாவற்றையும் சம பார்வையுடன் நோக்குவான். அவனது மனமும் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். இந்த மன நிலையை அடைவது வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். 

பகவான் சொல்கிறார்

 ஒருவன் விரும்புவது கிடைத்தால் இறுமாப்புக் கொள்வதும் கூடாது பிடிக்காத சம்பவத்தினால் சோர்வற்றுபோகவும் கூடாது. ஆதலால் பகவான் சொல்வதை அனுசரித்து தன் வாழ்க்கையை நடத்த வேண்டும். இந்த முயற்சியை தொடர்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம் . எல்லாரும் இந்த மாதிரி புனித வாழ்க்கையை நடத்துவார்களாக

No comments:

Post a Comment