குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 220
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
அந்த வீட்டு எஜமானன் ததிபாண்டன் கிருஷ்ணன் ஒளிந்து கொண்ட பானை மீது ஏறி அமர்ந்து அவனை ஒழித்து வைத்ததையும், யசோதை அவனை தேடி அங்கு வந்தபோது ' கிருஷ்ணன் இங்கு வரவேயில்லை 'என்று பொய் சொன்ன போதிலும் அதிலிருந்த விசேஷ தர்மம் கருதி அவனுக்கு அவன் விரும்பிய மோக்ஷம் பகவான் அவனுக்கு அருளியதையும்; அவரோடு சேர்ந்து அவனை மறைத்த பானையையும் கூட மோஷமடைந்தது.
' ததி ப்ண்ட மோக்ஷ தாயினே நம: '
தர்க்க ரீதியாக நமக்கெல்லாம் பானை என்றே பெயர் . தர்க்க சாஸ்திரம் படித்தவர் பேசினால் ' இன்றைய தினம் ஆஸ்திக சமாஜத்திற்கு உபன்யாஸம் கேட்க எத்தனை கடங்கள் வந்திருந்தன... ?' என்று கேட்பார்கள்.
பானைக்கு உண்டான குணங்கள் நமக்கும் இருக்கிறது - அதிலே ஜலத்தை நிரப்பலாம் ; நம் உடலிலும் ஜலம் நிறைந்திருக்கிறது . அதிலயும் மண் - இதிலேயும் மண் ! அதிலே ஆகாசம் இருக்கிறது, இதிலும் ஆகாசம்..கடாகாழம் என்று பெயர். அதுவும் சூடு ! இதுவும் சூடு ! அதில் என்னென்ன உண்டோ...இதிலே அத்தனையும் இருக்கிறது .
அசித் பதார்த்தங்களிலிலையே ரொம்ப தத்வார்த்தம் பெற்றதாக இருக்கிறது பானை .
ஆச்ரித பரதந்த்தரனான பரமாத்மா அசித் பதார்த்தங்களுக்குக் கூட மோக்ஷத்தை கொடுக்கக் கூடியவன் !
அப்படிப்பட்ட காருண்யமிக்கவனான பரமாத்மாவின் வடிவழகில் ஈடுபட்டு அவன் திருவடியை ஆச்ரயிக்கப் கூடிய எந்த பதார்த்தமானாலும் உயர்ந்த கதியை அடைந்துவிடும். அப்படிப்பட்ட வள்ளல் அவன் என்பது கிருஷாணாவதாரத்திலேயும், ராமாவதாரத்திலேயும் தெரிகிறது.
இதைத்தான் ஈசாவாச்யம் உபநிஷத் சொல்கிறது.
ஆசார்யர்கள் சொல்கிறார்கள் - பகவானைத் தவிர வேறு எதை அநுபவித்தாலும் மீதி எந்த வஸ்துவினடத்திலலே போனாலும் அதிலே ஏழு விதமான தோஷங்களை இருக்கின்றன .பகவானிடம் மட்டும் தான் தோஷம் கிடையாது. எனன ஏழு தோஷங்கள் ....? அல்பத்வம், அஸ்திரவம் , துக்க மூலத்வம் , துக்க மிச்ரத்வம் , துக்கோதர்கத்வம், துக்க மூலமஹாவிஸர்ஜனத்வம் , கவாபாவிக ஆனந்த விருத்தத்வம் .
முதல் தோஷமாகிய அல்பத்வத்தை பார்ப்போம்.....பகவான் தவிர்த்து மற்ற அனைத்துமே அல்பம்தான். தர்ம, அர்த்த, காம , மோஷங்கள் இருக்கின்றனவே... இவை அனைத்தும் அல்பம்தான். இவற்றைக் கூட அல்பம் என தள்ளி வைத்துவிட்டு அவனையே ஆஸ்ரயிக்க வேண்டும் என்கிறார் ஸ்வாமி தேசிகன். அப்படிச் செய்தால் மோக்ஷம் நிச்சயம்.
யாருக்காவது கிடைத்திருக்கிறது என்றால் ஜடாயுவுக்கு கிடைத்திருக்கிறது.
எம்பெருமானுக்காக தன்னையே அர்ப்பணித்து, சீதைக்காக ராவணனுடன் போராடி இறக்கை இழந்து வீழ்ந்தார் ஜடாயு.
தன்னுடைய நெருக்கிய பந்துக்கு காலமானால் எப்படி துக்கமடைவாளோ, அந்த மாதிரி துக்கமடைந்தாளாம் சீதா பிராட்டி,. ஜடாயுவைத் தொட்டு தடவிக் கொடுத்து கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள் .
பின்னால் அந்த ஜடாயுவை ராமன் பார்க்கிறான். பார்த்து ஒரு பெரிய அனுக்கிரஹம் பண்ணுகிறான்..
( வளரும் )
No comments:
Post a Comment