Saturday, January 29, 2022

How to get rid of karma?

*கர்ம வினையும் அதைக் கடந்து போகும் உபாயமும்...*

*கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கப்பலின் மேல் தளத்துக் கட்டை ஒன்றில் ஒரு பறவை வந்து அமர்ந்தது. அது தன்னிலேயே லயித்து... தனை மறந்து அமர்ந்திருந்தது. கப்பல் கரையை விட்டு அகன்று... நடுக்கடலுக்குள் சென்றுவிட்டது.*

*தன்நிலைக்கு வந்த பறவைக்கு அப்போதுதான்... தான் கரையை விட்டு வெகு தூரத்திற்கு வந்து விட்டது தெரிந்தது. கப்பலின் ஒரு முனைக்கு எதிரான திசையில் வெகு தூரம் பறந்து சென்றும்... கரை காணாததால்... மீண்டும் கப்பலுக்கே வந்து சேர்ந்தது.*

*இது போலவே... ஏனைய மூன்று திசைகளிலும் பயணித்து... கரையைக் காணாமல்... மீண்டும் கப்பலுக்கே வந்து சேர்ந்த பறவை... அமைதியாக அந்தக் கப்பலிலேயெ அமர்ந்து விட்டது.*

*அதற்கு... இப்போது ஒன்று புரிந்திருந்தது... இந்தக் கப்பல், கரையை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது... என்ற உண்மைதான் அது.'*

*கர்ம வினைகளை... ஒரு பார்வையாளராக இருந்து... அனுபவித்துக் கடப்பதே..... புத்திசாலித்தனம்...!*


*உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்...*

*எப்போது செய்ய வேண்டும்...*

*எந்த நேரத்தில் செய்ய வேண்டும்...*

*என்று உங்களுக்கு முன் அறிவிப்பின்றி எல்லாமே பகவானுக்கு தெரியும்.*

*எனவே அழுது ,புலம்பி கவலைப்படுவதை விட்டுவிட்டு பகவானிடம் பரிபூரணமாக சரணாகதி அடைந்து விடுங்கள்.*

*எல்லாம் அந்த கருணைக்கடல் பார்த்து கொள்வார்.*

 *இறையே குருவே சரணம் சரணம்* 

No comments:

Post a Comment