Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
கீதா சாரம் - அத்தியாயம் 1
அத்தியாயம் 1
கீதை என்னும் அரிய உபதேசத்தை உலகுக்கு அளிக்க எண்ணம் கொண்ட பகவான் அர்ஜுனன் மனதில் குழப்பத்தை விளைவிக்கிறார். ஏனென்றால் அர்ஜுனன் போருக்கு வருவதன் முன்பே எதிர்ப்பவர்கள் தன் உறவினரும் பெரியோர்களும் என்று அறிந்தவனே . அப்படி இருக்க திடீரென்று குற்ற உணர்வு வருவதற்குக் காரணம் பகவானின் லீலையே.
இதற்கு சான்று என்னவென்றால் அர்ஜுனன் தன் ரதத்தை இரு சேனைகளுக்கும் நடுவில் கொண்டு செல்லும்படி கூறுகையில் துர்புத்தி படைத்த துரியோதனனுக்கு யார் யார் துணை போக வந்துள்ளனர் என்று பார்க்கிறேன் என்கிறான். ரதத்தை துரியோதனன் முத்லியவருக்கு எதிரில் நிறுத்தினால் அர்ஜுனனுக்கு குழப்பம் வந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் மாயக்கண்ணன் ரதத்தை பீஷ்மருக்கும் த்ரோணருக்கும் முன்பாக நிறுத்துகிறான். அங்கு அர்ஜுனன் கண்டது விரோதிகளை அல்ல , தன் குருவையும் பிதாமஹரையுமே காண்கிறான். இதன் விளைவே அவனுடைய மனக்குழப்பம்.
அதன் பயனாக தானே அழிந்தாலும் அல்லது மூவுலக அரசு கிடைத்தாலும் ஆசார்யர்கள் தந்தை தனயர் போன்றவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்று கூறி, துரியோதனாதியர் ஆஹஅதாயிகள் அதாவது கொடிய பாவத்தை செய்தவர்களாயினும் அவர்களைக் கொல்லும் பாவத்தை செய்ய விரும்பவில்லை என்றும் அதனால் யுத்தம் செய்யாமல் இருப்பதே நல்லது என்றும் கூறுகிறான். ஆதலால் யுத்தம் செய்ய விருப்பமில்லை என்ரு ஆயுதங்களைக் களைந்து ரதத்தில் உட்கார்ந்து விடுகிறான். கீதையின் சாரம் உண்மையில் இரண்டாவது அத்தியாயத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அதை அடுத்து காண்போம்.
No comments:
Post a Comment