குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 96
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
சித்ரகூடத்தில் பரதன் பகவானிடம் என்ன சொல்கிறான் 'எல்லோரையும் முன்னிட்டு அடியேன் பிரார்த்திக்கப் படக்கூடியவன் இந்த வார்த்தையை நீங்கள் கேட்க வேண்டும் ' என்றான். அதனால்தான்லக்ஷ்மணன் முன்னிலையிலேயே பரதனை கொண்டாடுகிறான் எம்பெருமான். காரணம் ' அஹம்' என்று லஷ்மண் சொல்லி விட்டதுதான்.
ஆகவே அஹம் என்பதை பகவான் மட்டுமே தொல்லலாமா ஏனெனில், அவன் மட்டுமே ஏக ஆத்மாவாக, ஏக வீரனாக, இருக்கிறான். அவனே ஆத்மா, பரமாத்மா: எல்லா பாபங்களிலினுந்தும் நம்மை விடுவிப்பவன்.
பாபங்கள் மூன்று விதம். மூட்டையாக குருவி சேர்க்கிற மாதிரி நாம் ஏற்கனவே சேர்த்துள்ள பாவங்கள் , இரண்டாவது பலனைக் கொடுக்க ஆரம்பித்து விட்ட பாவங்கள். ஒருவர் அவஸ்தைப் படுவதை பார்த்து ஏன் இப்படி அவஸ்தை படுகிறார்.. என பரிதாபப்படும்போது' என்ன செய்வது. அவர் பண்ணிய பாவம்' என்று சொல்வதில்லையா? அது. மூன்றாவது வகை இந்த வாழ்க்கையிலே செய்து கொண்டிருக்கிற பாவங்கள் .
பக்தி யோகம் பண்ணினால் , மூட்டை கட்டின பாவம் மற்றும் மேல் வரக்கூடிய பாவம் மொத்தம் போய்விடும் ஆனால் பிரானப்தத்தை போக்கும் சக்தி பக்தி யோகத்திற்கு கிடையாது. பிராரப்தத்தையுமு சேர்த்து போக்க வேண்டுமானால், சரணாகதியின் தான் அது முடியும். இதைத்தான் பகவான் சொன்னான் ' எல்லா பாடங்களையும் நான் போக்கி விடுவேன். உன்னைநக்ஷிப்பேன், கவலை படாதே பக்தி யோகம் செய்ய வில்லையே என்ற விசாரம் வேண்டாம். 32 பிரும்ம வித்யைகள் தெரியவில்லையே என்று கவலைப் பட வேண்டாம் ' என்றான்.
கவலைப்படாதே கவலைப்படாதே என மீண்டும் மீண்டும் சொல்கிறான் அவன். ' நீ பக்தி யோகம் பண்ணினால் என்ன சந்தோஷத்தை நான் அடைகிறேனோ, நீ ஞான யோகம் பண்ணினால் என்ன சந்தோஷத்தை நான் அடைவேனோ, நீ கர்ம யோகம் செய்தால் நான் என்ன புளகாங்கிதம் அடைவேனோ, அந்த சந்தோஷத்தை யெல்லாம் என் திருவடியை நீ பற்றிக் கொண்டால் நான் அடைந்து விடுவேன் . உனக்கு மோக்ஷமளிப்பேன்' என்கிறான். இதுதான் சரமஸ்லோகத்தின் சாரம் .
ஆக அஷ்டாக்ஷரம், த்வய மந்திரம், சரமஸ்லோகம் இவற்றை நினைத்து அவனை த்யானம் பண்ண வேண்டும். சமஸ்தத்திலும் பரவியிருக்கும் பகவான் இந்த மூன்றில் கட்டுப்பட்டு கிடக்கிறான். இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு தினமும் ஜபிக்க வேண்டும். இந்த மூன்றையும் சொல்ல முடியாவிட்டால் ' ஓம் விஷ்ணவே நம: என்று சொல்ல வேண்டும்.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment