குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( பகுதி ) 95
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
' என்னால் ஆனது இவ்வளவுதான் ' என்று வாசல் திண்ணையில் போய் உட்கார்ந்தால் ஆயிற்றா ? அது பிரயோஜனமில்லை. ' உன்னால் செய்ய முடியாத கர்மங்களை விட்டு விடு ' என்று சொன்னவர்தானே ' விட்ட ஸ்தானத்தில் என திருவடியை பற்றிக் கொள் ' என்றும் கூறுகிறான் ' என் ஒருவனுடைய திருவடியை கெட்டியாகப் பற்றி..' என்று எவ்வளவு அழகாகச் சொல்லிக் கொடுக்கிறான். வீணா காரியத்தில் இறங்காமல் என் காலைப் பற்றி என்கிறான்.
ச்ருத பிரகாசிகாசார்யார் என்கிற ஆசார்யர் சொல்கிறார். . கங்கைக் கரையில் நிற்கும் ஒருவன் தன் தாகம் தீர்க்க அக்கங்கையின் நீரை அருந்தாமல் அதன் கரையில் கிணறு வெட்ட ஆரம்பித்தானாம். ' எதற்கு வெட்டுகிறது ' என்று கேட்டால் ' தாகத்துக்கான ' என்றாராம்
' என் திருவடி பற்று ' என பகவான் சொல்கிறானே, அவன் அருள் கங்கை பிரவாகம் போல் ஓடுகிறது . அதை விட்டு விட்டு , இதை பண்ணுகிறேன் அதைப் பண்ணுகிறேன் என்று ஏன் அலைய வேண்டும் !
பகவான் கீதையில் தன் திருவடி பற்றிச் சொன்னது, ஏதோ அர்ஜுனனுக்கு சாரதியாயிருந்த ஒர் சாமான்யன் என அவனை நினைக்கலாகாது. அவன் சாமான்யனாகவும் இருப்பதே பக்தர்களுக்காகத்ததான். பக்தபராதீனனாக, பக்தர்கள் இட்ட வேலை செய்யக் கூடியவனாக இருக்கிறான்.
' என்னுடைய குணத்தை உணர்வாயாக. நான் யார் தெரியுமா ?' என்று அவன் கேட்கிறான். 'அஹம்' என்கிற பிரயோகம் வருகிறது. அந்த ' அஹம் ' என்கிற சப்தத்தை அவன் ஒருவன் தான் அசொல்லக்கூடிய தகுதி படைத்தவன்.
ஒரு சிஷ்யன் ஆசார்யனைப் பார்க்க போகிறான். ' யார் நீ ' என அவர் கேட்டதற்கு ' நான் வந்திருக்கிறேன் ' என பதிலளித்திருக்கிறான்.
' நான் செத்த பிறகு வா' என்று கூறியிக்கிறார் ஆசார்யர். நடுங்கி விட்டான் சிஷ்யன். மறுபடியும் வருகிறான். நான் வந்திருக்கிறேன் என்றான். ஆசார்யர் நான் செத்த பின் வா என்றார். இது பல தடவை தொடர்ந்து நடந்தது. பிறகு ஒருநாள் வந்தவன் 'தாஸன் வந்திருக்கிறேன் ' என்றான்.
அன்றைக்கு குரு ' உள்ளே வா ' என்று அழைத்தாராம்.
' நான் செத்த பிறகு' என்றால் ' நான்' என சொல்கிறாய் அது உன்னை விட்டு நீங்கிய பிறகு என்ற அர்த்தம். ' அடியேன்' என்று ' தாஸன்' என்றுதான் கூற வேண்டும். நான் என்று சொல்லக்கூடாது.
இதற்கு இராமாயணத்தில் ஒரு உதாரணம் . இளைய பெருமாள் ராமனிடம் சொன்னாராம் ' உன்னுடன் கானகம் வந்து உனக்கு நீ தூங்கும் போதும் , விழித்திருக்கும் போதும் ,எந்நேரமும் நான் கைங்கர்யம் பண்ணுகிறேன் '. இதைக் கேட்ட பரமாத்மாவிற்கு கவலை வந்து விட்டத. ' ஐயோ இவ்வளவு கைங்கர்யம் பண்ணுவதாகச் சொல்கிறவன் கூடவே ' நான் ' என்றும் சொல்லி விட்டானே கவலை பட்டானாம்.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment