குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 94
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
வேதத்தில் எத்தனையோ சொல்லியிருக்கிறது. அத்தனையையும் நம்மால் பண்ண முடியுமா? உதாரணத்திற்கு : மிக பெரிய ஏறியின் கரையில் ஒருவர் நிற்கிறார். அவருக்கு தாகம் எடுக்கிறது அவருக்கு ஒரு ஆசை. ஏரி ஜலம் மழுவதையும் பருக வேண்டும் என்று. ஆனால் முடியுமா? தன் தாகத்துக்கான சாந்தி அளிக்கக்கூடிய அளவுதான் அவரால் பருக முடியும். அவர் ஏரி ஜலம் முழுவதையும் பருக முடியவில்லையே என்று தாகத்திற்கு வேண்டிய ஜலத்தையெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் போவாரானால் அவருடைய அவிவேகத்தை என்னென்பது?
வேண்டிய ஜலத்தை எடுத்துக் கொண்டு வேண்டாத ஜலத்தையெல்லாம் விட்டுவிடு என்கிறான் பகவான். இதைத்தான் ஆண்டாளும் திருப்பாவையில்வெ ' மேலையார் செய்வனகள் வேண்டுவதன கேட்டியேல்' என்றாள். பெரியவர்கள் எத்தனையோ விஷயங்களை பண்ணுகிறார்கள். நம்மால் அத்தனையையும் பண்ணிவிட முடியுமா ?
சுவாமி தேசிகன் இதை மிக அழகாக சொல்கிறார். . அகத்தியர் சமுத்ரா ஜலம் மொத்தத்தையும் ' அச்சுதாயநம' என்று ஒரே விழுங்கில் ஆசமனம் பண்ணிவிட்டாராம். ' அனந்தாமநய' என்று சொல்லி ஆசமனம் பண்ண சமுத்திரத்தில் ஜலம் இல்லை !
ஆசமனத்திற்க்கென்று நியமனம் உண்டு. மூன்று முறை பண்ண வேண்டும். ' அச்சுதாயநம' என்று சொல்லும் போது தாகமாயிருக்கிறது என்று இரண்டு டம்ளர் ஜலத்தை பருகி விடலாமா என்றால், கூடாது என்கிறது சாஸ்திரIம். அதேபோல் நுரையோடு இருக்கிற ஜலத்திலே ஆசமனம் செய்யக் கூடாது.
தொண்டை கட்டிக் கொண்டு இருக்கிறது, அதனால் ஆசமனத்திற்க்கென்று வெந்நீர் கேட்கலாமா? இல்லை ஆசமனம் தீர்த்தத்தில் பரிமளமாக ஏலம், லவங்கம் இடித்துப் பட்டு ஆசமனம் செய்யலாமா? இது எதுவுமே கூடாது. அதேபோல் நின்று கொண்டு ஆசமனம் பண்ணக் கூடாது. தெற்கு நோக்கியும், அசுத்தமான இடத்திலும் பண்ணக் கூடாது. ஆசமனத்திற்க்கென்று கையில் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றால், உளுந்தை போட்டால் அமிழக்கூடிய அளவுதான் இருக்க வேண்டும். குளிர்ந்த தீர்த்தம் இருக்க வேண்டும். உட்கார்ந்தபடிதான் ஆசமனம் பண்ண வேண்டும். .
அகஸ்தியர் இப்படி சமுத்திரத்தை இழுத்து ஆசமனம் பண்ணுவதை மேகங்கள் பார்த்ததாம், நாமும் சமுத்திர ஜலம் மொத்தத்தையும் பருக ஆசைப்பட்டு, வெள்ளையாயிருந்த மேககமெல்லாம் நேரே சமுத்திரத்தில்கு மேலே வந்து சேர்ந்ததாம். அகஸ்தியர் பருகியது போலே ஜலத்தை இழுத்தது. இழுத்து இழுத்து அலுத்து விட்டது!
காற்றடித்து மேகத்தை நீள பூ மண்டலத்துக்கு தள்ளிக் கொண்டு வந்து விட்டது. மழையாக கொட்டி தீர்த்தது. இதையே மறுபடியும் , மறுபடியும் தொடர்ந்து செய்தது.
ஒரு குருவி வந்து ஒரு நெல்லை எடுத்துக் கொண்டு போனா கதைதான். ஒருநாளாவது மேகத்தால் அகஸ்தியர் போல் சமுத்திரத்தை உறிஞ்ச முடியவில்லை. அவரைப் பார்த்து நாமும் அதையே பண்ண முயன்றால் முடியுமா ?
சரி பண்ண முடிந்ததை பண்ணி, பண்ண முடியாததை விட்டு விட்டு என்ன செய்யலாம்? வாசல் திண்ணையில் உட்காருவது ..?
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment